Sunday 29 January, 2012

நடிகர் விஜய் திரைப்பட வரலாறு




    நடிகர் விஜய் 1974ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் நாள் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவர் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் ஆவார். இவரின் தாயார் ஷோபா ஒரு பின்னணி பாடகர் ஆவார். விஜய்யின் சகோதரி வித்யா தமது இரண்டாவது வயதிலே காலமானார்.

     விஜய் லொயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன்ஸ் படித்தார். விஜய் இலங்கையைத் தமிழரான சங்கிதாவை 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் நாள் மணந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல் மகன் ஜேசன் சஞ்சய் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 26ல் லண்டனில் பிறதார். இரண்டாவது மகள் திவ்யா சாஷா 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் நாள் பிறந்தார்.




விருதுகள்

     தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் காதலுக்கு மரியாதை படத்துக்காக 1997ஆம் ஆண்டு பெற்றுள்ளார். தமிழக அரசு 1998 ஆம் ஆண்டு விஜய்க்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்துள்ளது. விஜய் 2004ஆம் ஆண்டு கில்லி படத்துக்காக தினகரன் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும், அதே படத்துக்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் டுடே வழங்கிய சிறந்த நடிகர் விருதையும் பெற்றுள்ளார். கில்லி படத்துக்காக மெட்ராஸ் கார்பொரேட் கிளப் வழங்கிய சிறந்த நடிகர் விருதையும் விஜய் பெற்றுள்ளார்.


விஜய் பின்னணி பாடிய பாடல்கள்

1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி - ரசிகன் - 1994
2. ஒரு கடிதம் - தேவா - 1994
3. கோத்தகிரி குப்பம்மா - தேவா - 1994
4. அடடா அலமேலு ஆவின் பசும்பாலு - தேவா - 1994
5. தொட்டபெட்டா ரோட்டு மேல - விஷ்ணு - 1994
6. பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி - கோயம்புத்தூர் மாப்ளே - 1995
7. திருப்பதி போனா மொட்டை - மாண்புமிகு மாணவன் - 1996
8. அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி - காலமெல்லாம் காத்திருப்பேன் - 1996
9. சிக்கன் கறி - செல்வா - 1996
10. ஊர்மிளா ஊர்மிளா - ஒன்ஸ் மோர் - 1997
11. அகிலா அகிலா - நேருக்கு நேர் - 1997
12. ஓ பேபி பேபி - காதலுக்கு மரியாதை - 1997
13. மௌரியா மௌரியா - பிரியமுடன் - 1998
14. நிலவே நிலவே - நிலாவே வா - 1998
15. சந்திர மண்டலத்தை - நிலாவே வா - 1998
16. காலத்துக்கு ஒரு கானா - வேலை (விக்னேஷ்) - 1998
17. தம்மடிக்குற ஸ்டைல பாத்து - பெரியண்ணா (சூர்யா) - 1998
18. சூடடி லைலா - பெரியண்ணா (சூர்யா) - 1998
19. ரோட்டுல ஒரு - பெரியண்ணா (சூர்யா) - 1998
20. தங்க நிறத்துக்கு - நெஞ்சினிலே - 1999
21. மிஸ்ஸிஸிப்பி நதி குலுங்க - பிரியமானவளே - 2000
22. என்னோட லைலா - பத்ரி - 2001
23. உள்ளத்தைக் கிள்ளாதே - தமிழன் - 2002
24. கோகோ கோலா - பகவதி - 2002
25. வாடி வாடி - சச்சின் - 2005

விஜய் நடித்துள்ள படங்கள்

1. நாளைய தீர்ப்பு - (தமிழ்) - 1992 - எஸ்.ஏ. சந்திரசேகர்
2. செந்தூரபாண்டி - (தமிழ்) - 1993 - எஸ்.ஏ. சந்திரசேகர்
3. ரசிகன் - (தமிழ்) - 1994 - எஸ்.ஏ. சந்திரசேகர்
4. தேவா - (தமிழ்) - 1994 - எஸ்.ஏ. சந்திரசேகர்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) - 1995 - எஸ்.ஏ. சந்திரசேகர்
6. விஷ்ணு - (தமிழ்) - 1995 - எஸ்.ஏ. சந்திரசேகர்
7. சந்திரலேகா - (தமிழ்) - 1995 - நம்பிராஜன்
8. கோயம்பத்தூர் மாப்ளே - (தமிழ்) - 1996 - சி. ரங்கநாதன்
9. பூவே உனக்காக - (தமிழ்) - 1996 - விக்ரமன்
10. வசந்த வாசல் - (தமிழ்) - 1996 - எம்.ஆர். சக்குதேவன்
11. மாண்புமிகு மாணவன் - (தமிழ்) - 1996 - எஸ்.ஏ. சந்திரசேகர்
12. செல்வா - (தமிழ்) - 1996 - ஏ.வெங்கடேசன்
13. காலமெல்லாம் காத்திருப்பேன் - (தமிழ்) - 1997 - ஆர். சுந்தர்ராஜன்
14. லவ் டுடே - (தமிழ்) - 1997 - பாலசேகரன்
15. ஒன்ஸ்மோர் - (தமிழ்) - 1997 - எஸ்.ஏ. சந்திரசேகரன்
16. நேருக்கு நேர் - (தமிழ்) - 1997 - வசந்த்
17. காதலுக்கு மரியாதை - (தமிழ்) - 1997 - பாசில்
18. நினைத்தேன் வந்தாய் - (தமிழ்) - 1998 - கே. செல்வபாரதி
19. பிரியமுடன் - (தமிழ்) - 1998 - வின்சென்ட் செல்வா
20. நிலாவே வா - (தமிழ்) - 1998 - ஏ. வெங்கடேசன்
21. துள்ளாத மனமும் துள்ளும் - (தமிழ்) - 1999 - ஏ. வெங்கடேசன்
22. என்றென்றும் காதல் - (தமிழ்) - 1999 - மனோஜ் பட்னாகர்
23. நெஞ்சினிலே - (தமிழ்) - 1999 - எஸ்.ஏ. சந்திரசேகர்
24. மின்சார கண்ணா - (தமிழ்) - 1999 - கே.எஸ். ரவிக்குமார்
25. கண்ணுக்குள் நிலவு - (தமிழ்) - 2000 - பாசில்
26. குஷி - (தமிழ்) - 2000 - எஸ்.ஜே. சூர்யா
27. பிரியமானவளே - (தமிழ்) - 2000 - கே. செல்வபாரதி
28. பிரண்ட்ஸ் - (தமிழ்) - 2001 - சித்திக்
29. தேவிபுத்ருலு - (மலையாளம்) - 2001 - சித்திக்
30. பத்ரி - (தமிழ்) - 2001 - அருண் பிரசாத்
31. தம்முடு - (தெலுங்கு) - 2001 - அருண் பிரசாத்
32. ஷாஜஹான் - (தமிழ்) - 2001 - ரவி
33. தமிழன் - (தமிழ்) - 2002 - ஏ. மஜீத்
34. யூத் - (தமிழ்) - 2002 - வின்சென்ட் செல்வா
35. பகவதி - (தமிழ்) - 2002 - ஏ. வெங்கடேசன்
36. வசீகரா - (தமிழ்) - 2003 - கே. செல்வபாரதி
37. புதிய கீதை - (தமிழ்) - 2003 - கே.பி. ஜெகன்
38. திருமலை - (தமிழ்) - 2003 - ரமணா
39. உதயா - (தமிழ்) - 2004 - அழகம் பெருமாள்
40. கில்லி - (தமிழ்) - 2004 - தரணி
41. மதுர - (தமிழ்) - 2004 - ஆர். மாதேஷ்
42. திருப்பாச்சி - (தமிழ்) - 2005 - பேரரசு
43. சச்சின் - (தமிழ்) - 2005 - ஜான் மகேந்திரன்
44. சுக்ரன் - (தமிழ்) (நட்புக்காக) - 2005 - எஸ்.ஏ. சந்திரசேகர்
45. சிவகாசி - (தமிழ்) - 2005 - பேரரசு
46. ஆதி - (தமிழ்) - 2006 - ரமணா
47. போக்கிரி - (தமிழ்) - 2007 - பிரபு தேவா
48. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2008 - பரதன்
49. குருவி - (தமிழ்) - 2008 - தரணி
50. பந்தயம் - நட்புக்காக - 2008
51. வில்லு - (தமிழ்) - 2009
52. வேட்டைக்காரன் - (தமிழ்) - 2009
53. சுறா - (தமிழ்) - 2010
54. காவலன் - (தமிழ்) - 2011
55. வேலாயுதம் - (தமிழ்) - 2011
56. நண்பன் - (தமிழ்) - 2011

நன்றி: பல இணையதளங்கள்

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: