உங்களிடம் இரண்டு போட்டோ இருக்கிறது. அது இரண்டையும் ஒரே பேப்பரில் பிரிண்ட் எடுத்தால் பேப்பர் மிச்சம் ஆகும். ஆனால் அது எப்படி என்று நமக்கு தெரியவில்லையே என்று கவலையா ? அல்லது அப்படி எடுப்பதற்கு தனியாக ஒரு மென்பொருள் வேண்டுமே என்று இது நாள் வரை நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா ?
உங்கள் போட்டோவை ஓப்பன் செய்வதற்கு முன்பாக அந்த போட்டோ ஐக்கானில் உங்கள் மவுசை வைத்து வலது பக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Windows Picture and Fax Viewer என்பதை கிளிக் செய்யுங்கள். உடனே உங்கள் போட்டோ Picture and Fax Viewer மூலம் ஓப்பன் ஆகும். அந்த போட்டோவின் கீழ் Print என்று ஒரு ஐக்கான் இருப்பதை நீங்கள் பார்கலாம். அதனை நீங்கள் கிளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் தட்டில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோவை டிக் செய்துகொள்ளுங்கள்.
அடுத்து Next ஐ அழுத்துங்கள்.
அடுத்தும் Next ஐ அழுத்துங்கள்.
அடுத்து வரும் இந்த தட்டில் இடது பக்கம் உள்ள Available Layout என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான இரண்டு போட்டோ உள்ள Layout ஐ தேர்ந்தெடுங்கள்.
அடுத்து Next .......... Next ஐ அழுத்தினால் போதும் உடனே உங்களுக்கு இரண்டு போட்டோ ஒரே பேப்பரில் பிரிண்ட் ஆகி வெளியே வரும்.
இதே முறையில் நான்கு போட்டோ மற்றும் ஒன்பது போட்டோ ஒரே பக்கத்தில் பிரிண்ட் எடுக்கும் Layout ஐயும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment