Tuesday 3 January, 2012

கிரடிட் கார்ட் வகைகள்


கிரடிட் கார்ட் வகைகள் 
 
பெட்ரோ கார்ட்' (Petro Card)

'
கேஷ் பேக்' அடுத்து பலரும் வைத்திருப்பது 'பெட்ரோ கார்ட்' (Petro Card). வண்டிக்கு பெட்ரோலுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக கிரடிட் கார்ட்டில் வாங்குவது தான் 'பெட்ரோ கார்ட்'. அதாவது, சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இன்டியன் ஒயில் பெட்ரோல் வாங்கினால் சர்ச்சார்ஜ் (Surcharge) கிடையாது. ஆனால், அதே இன்டியன் ஒயிலை HSBC கிரடிட் கார்ட் பயன்படுத்தினால் சர்ச்சார்ஜ் போடுவார்கள். அதே போல் ஷேல் பெட்ரோல் HSBC கார்ட்க்கு சர்ச்சார்ஜ் கிடையாது.

Travelling Card

அடுத்து இன்னொரு வகையான கிரடிட் கார்ட் பார்ப்போம். Travelling Card அடிக்கடி விமானத்தில் பயணம் / ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்த கிரடிட் கார்ட் பயன்ப்படும். உதாரணத்திற்கு சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் வைத்து ஜெட் எர்வேஸ்யில் டிக்கெட் வாங்கி பயணம் செய்தும் போது சில சிறப்பு சலுகைகள்கள் கிடைக்கும். ஆனால், பெரும் பாலான வங்கிகள் சலுகை என்று சொல்லுவது ' Travelling Card யில் டிக்கெட் வாங்கிய பணத்திற்கு தான் சலுகை பொருந்தும். எதாவது பொருளை வாங்கினால் சலுகை எதுவும் இருக்காது. பெட்ரோ கார்ட்டிலும் அப்படி தான். சலுகை எல்லாம் பெட்ரோல் வாங்குவதற்கு மட்டும் தான்.

Shopping Card

அடுத்து நாம் பார்க்க போவது Shopping Card. பெயர கேட்டவுடனே அதிருதுல....!! இந்த கார்ட் மனைவிமார்களுக்கு மிகவும் பயன்ப்படும் கார்ட்.(கணவன்மார்களுக்கு தொல்லை கொடுக்கும் கார்ட் கூட !!) மாதம் வீட்டிற்கு என்று இவ்வளவு பொருள் வாங்க வேண்டும் எல்லோர் வீட்டில் இருக்கும். Shopping Card பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது வங்கிகள் சில அன்பளிப்பு, சலுகை என்று கொடுக்கும்.

இதுவரை நாம் கிரடிட் கார்ட் வகைகள் மட்டும் தான் பார்த்தோம். ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் எற்றாருக்கு போல் கிரடிட் கார்ட் வைத்திருக்கும். கிரடிட் கார்ட் அம்சங்களும் மாறி இருக்கும். வாடிக்கையாளரை கவர்வதற்காக கிரடிட் கார்ட் தன்மைகளையும், சலுகைகளும் வேறுப்படும். ஒவ்வொரு கிரடிட் கார்ட் இப்படி தான் இருக்க வேண்டும் என்று எந்த நீதி கிடையாது. அதனால் கிரடிட் கார்ட் வாங்கும் எது நமக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும் என்று புரிந்துக் கொண்டு வாங்க வேண்டும்.

எப்போதும் போல் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் http://rajasekaranmca.blogspot.com
 

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: