Saturday, 7 January 2012

எந்த தியேட்டரில் என்ன படம் கூகுள் சொல்கிறது


எந்த தியேட்டரில் என்ன படம் கூகுள் சொல்கிறது



நம் ஊரில் உள்ள தியேட்டர்களில் என்ன சினிமா காட்டப்படுகிறது? எப்படி தெரிந்து கொள்ளலாம்? போன் செய்து, கல்லூரியில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கேட்டு, சினிமாத் துறையில் வேலை பார்க்கும் நபர்களிடம் கேட்டு, சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய அளவிலான விளம்பர போஸ்டர்களைக் கண்டு எனப் பல வழிகள் முன்பும் இப்போதும் உள்ளன. இவற்றுடன் இன்னொரு வழியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இணையம் வழி கூகுள் தரும் வழி. ஆம், http://google.com/movies என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் அங்கு இடது புறம் ஊர் தேர்ந்தெடுக்க கட்டம் தரப்பட்டிருக்கும்.

     அதில் நீங்கள் அறிய விரும்பும் ஊரின் பெயரை டைப் செய்து என்டர் தட்டுங்கள். பெரிய, சிறிய நகரங்கள் அனைத்தும் இதில் இடம் பெறுகின்றன. ஊர் டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் அந்த ஊரில் உள்ள தியேட்டர்களின் பெயர், என்ன படம், எத்தனை மணிக்குஷோ என்ற விபரங்கள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் பல தியேட்டர்கள் ஆன்லைனிலேயே டிக்கட் புக் செய்திடும் வசதிகளைத் தந்துவருகின்றன. இருப்பினும் அனைத்து தியேட்டர்களிலும் என்ன படம் ஓடுகிறது என்ற தகவலைத் தரும் திட்டத்தினை கூகுள் தான் வழக்கம்போல தந்துள்ளது.


பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

நன்றி :-     இணையம்


Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: