Wednesday 25 January, 2012

இணையம் வரலாறு

இன்டர்நெட் இன் சரித்திரம்  


இணைய தந்தை



ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணைய தந்தையாக அறியப்படுகிறார்.


முதல் மின்னஞ்சல் (email)



ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.

அதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.

மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

முதல் மின்னஞ்சலை பற்றி அவர் எழுதிய குறிப்பைக் காண இங்கே சொடுக்கவும்


முதல் இணையத்தளம்



டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) என்பவரால் ஆகஸ்ட் 6,1990ல் தொடங்கப்பட்ட http://info.cern.ch/தான் முதல் இணையத்தளமாகும்.

‘World Wide Web’ அறிமுகப்படுத்தியவரும் இவரே.


முதல் இணைய வழங்கி(web server)



இடப்புறத்தில் காணப்படும் NeXT என்ற கணிணிதான் முதல் இணைய வழங்கியாகும்(web server)


முதல் இணையத்தள முகவரி



மார்ச் 15, 1985 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டwww.Symbolics.com தான் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் இணையத்தள முகவரியாகும்.

பதிவு செய்யப்பட்ட முதல் 100 இணையத்தள முகவரிகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்


முதல் இணையத்தள உலாவி(Web Browser)


ஏப்ரல் 22, 1993ல் வெளியடப்பட்ட NCSA Mosaic தான் முதல் இணையத்தள உலாவியாகும்.

இதை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் மார்க் ஆண்டர்சன்(Marc Andreessen) மற்றும் எரிக் பினா(Eric Bina).


முதல் தேடுபொறி(search engine)

ஏப்ரல் 20,1994ல் தொடங்கப்பட்ட www.webcrawler.comதான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும்(search engine).

யாஹீவும் (Yahoo), கூகுளும்(Google) இதற்கு பின்னால் வந்தவையே.


முதல் வலைப்பதிவர்



ஜஸ்டின் ஹால் (Justin Hall) தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாளராக அறியப்படுகிறார்.

சனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/ தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.

அவரின் முதல் வலைப்பதிவை பார்க்க இங்கேசொடுக்கவும்


முதல் யூடியுப் காணொளி (Youtube Video)


யூடியுப்பின்(You tube) முதல் காணொளி(video) ”Me at the zoo”. வலையேற்றியவர் அதன் நிறுவனர்களின் ஒருவரான ஜாவித் கரீமின் (Jawed Karim) .

ஏப்ரல் 23, 2005 அன்று வலையேற்றப்பட்ட இக்காணொளியை இதுவரை 3,912,015 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jNQXAC9IVRw


முதல் டிவிட் (Tweet)



ட்விட்டரின் முதல் ட்விட்டை எழுதியவர் அதன் நிறுவனர்களின் ஒருவரான ஜாக் டார்சி (Jack Dorsey).

மார்ச் 23, 2006 அன்று அவர் போட்ட முதல் ட்விட் ‘just setting up my twttr’.

முதல் ட்விட்டை காண இங்கே சொடுக்கவும்

பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
http://rajasekaranmca.blogspot.com

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: