Saturday 14 January, 2012

வீடியோக்களில் இலகுவாக மாற்ற இலவச மென்பொருள்!


இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள் கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வா ங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளான து வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவை யை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண் டுள்ளது.
இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூ லம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது.
எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள் ளலாம். ஆடியோ கோப்புகளுக்கா ன ஸ்கிறீன்சேவரையும் நாம் எளி தில் தேர்வு செய்து கொள்ளலாம். இதிலிருந்து நாம் You tube தளத்தி ற்கு நேரடியாக பதிவேற்றம் செய் து கொள்ளலாம். மேலும் நமது வீடி யோவினை flv மற்றும் swf கோப் புகளாக மாற்றம் செய்து கொள் ளலாம். மேலும் நாம் பார்க்கும் வீடி யோவினை வலது இடமாகவும் – மேலும் கீழாகவும் மாற்றிக் கொள்ளலாம். வழக்கமாக புகைப்படத்தில் தான் நாம் இவ்வாறு மாற்ற முடியும். இப்போது வீடியோவிலும் நாம் இதில் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.

நன்றி :-விதை2விருட்சம்


Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: