டெஸ்க் டாப் (Desktop): மானிட்டரின் திரையில் விண்டோஸ் பைல்களும் பைல்களின் ஐகான்களும் காட்டப்படும் இடம்.
பிரீவேர் (Freeware): பெரும்பாலும் இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் வகையில் கிடைக்கும் இலவச சாப்ட்வேர் புரோகிராம்கள். இதனை நீங்கள் பயன்படுத்துவதோடு மற்றவர்களுக்கும் வழங்கலாம். யாரும் தடை செய்ய மாட்டார்கள்.
ஐகான் (Icon): ஒரு பைல் அல்லது அப்ளி கேசன் புரோகிராமினை அடையாளம் காட்டும் சிறிய படம்.
நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area): ஸ்கிரீனின் கீழ்ப்புறமாக விண்-டோஸின் எந்த புரோகிராம்கள் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று காட்டும் இடம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம்.
குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.
டாஸ்க்பார் (Taskbar): விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையின் கீழாகக் காணப்படும் நீள பார். இதனை மறைத்தும் வைக்கலாம். அந்த இடத்தில் கர்சர் சென்றவுடன் தானாக எழுந்து வருமாறும் செட் செய்திடலாம். இதில் தான் ஸ்டார் பட்டன், குயிக் லாஞ்ச் ஏரியா, பயன்படுத்தப்படும் பைல்களுக்கான டேப்கள், பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள், கடிகார நேரம் ஆகியவை காட்டப்படுகின்றன.
தம்ப் நெயில் (Thumbnail): பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும்.
வால்பேப்பர் (Wall Paper): விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கு பேக் கிரவுண்ட் படமாகப் பயன்படுத்தப்படும் இமேஜ். இதன் மூலம் கம்ப்யூட்டர் சொந்தக்காரர் எப்படிப்பட்ட ரசனை உள்ளவர் என அறியலாம். இதில் நிலையான படங்கள் மட்டுமின்றி அசையும் அனிமேஷன் படங்களும் உள்ளன.
ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop): பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம்.
லைன் இன் (Line In): கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.
யு.எஸ்.பி. (USB): வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் இணைக்கலாம்.
தொடரும்...
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment