Tuesday 27 December, 2011

சுகர் கண்ட்ரோல் செய்ய

சுகர் கண்ட்ரோல் செய்ய

     தினமும் நன்கு தூங்கி விட வேண்டும் என்பது முக்கியமான முதல் கண்டிஷன். இரண்டாவது உடற்பயிற்சி. குறைந்த பட்சம் 20 நிமிடமாவது தினமும் கடின உழைப்பு அதாவது உடற்பயிற்சி கண்டிப்பாக வேண்டும். நடப்பது மட்டுமே போதுமான உடற்பயிற்சி அல்ல. மூன்றாவது, நாள் முழுவதும் உணவை பகிர்ந்து உண்ணல். அதாவது சுமார் 3 மணி நேரத்திற்கு ஒரு தடவை கால் வயிறு உண்ண வேண்டும். ஒரு போதும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. இந்த மூன்று கண்டிஷன்களையும் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் சுகர், மருந்துகள் இல்லாமலேயே கன்ட்ரோல் ஆகிவிடும். சுகரை கன்ட்ரோல் செய்ய மருந்து சாப்பிடத்தான் வேண்டியுள்ளது என்ற நிலை இருந்தால் மஞ்சள் நிறமான ஆவாரம்பூ பொடியை காலை உணவுக்கு பின் 50 மில்லி கிராம் மட்டும் சாப்பிட வேண்டும். 50 மில்லி கிராம் என்பது ஒரு சிட்டிகை. ஒரு மிளகின் எடை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவாரம்பூ பொடி 50 மில்லி கிராம் சாப்பிட்டாலே போதும். நாவல் கொட்டை பொடிக்கு சுகரை கன்ட்ரோல் செய்யும் குணம் இருந்தாலும் சுமார் 6 நாட்களியேயே ஜலதோஷம், காய்ச்சலை ஏற்படுத்தி விடும். நெல்லிக்காய் சுகர் கன்ட்ரோல் செய்ய தொடர்ந்து உபயோகித்தால் ஞாபகமறதி, அல்சர், மேலும் கொப்புளங்கள் ஏற்பட்டு விடும். ஆனால் மாதத்திற்கு ஒரு தடவை மட்டும் அனைவரும் 1 நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். சுகர் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை மனப்பாடமாக சுகர் வருவதற்கான மூன்று காரணங்களையும் கூறப்பழக்கி விட்டால் அந்தக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் சுகர் வராது.
1) தினமும் நல்ல தூக்கம் வேண்டும்

2) கடின உழைப்பு அதாவது உடற்பயிற்சி தினமும் வேண்டும்.

3) அடிக்கடி உணவு கைப்பிடி அளவு.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: