Sunday 25 December, 2011

இணையத்தில் Credit/Debit card or paypal மூலம் Top Up(Reload) செய்வது எப்படி?

இணையத்தின் மூலம் நாம் பல நண்மைகளை அடைந்தாலும் சில நேரங்களில் தீமைகளையும் பெற்றுக்கொள்ள நேரியடலாம்.ஆகவே இதனை கருத்தில் கொண்டு நீங்கள் இணையத்தில் மூலம் பொருட்கள் அல்லது சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையை அல்லது இணைய வங்கிகளை பயன்படுத்தும் போது உங்கள் கணினியில் சில அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்து இருக்கின்றீர்களா? என்று முதலில் பார்க்கவும்.



>> ஒரு நல்ல அன்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி அதனை Update செய்திருக்க வேண்டும் (Avast or AVG.....)

>> பழைய Browser களை பயன்படுத்த வேண்டாம்(IE 6.0,Firefox 3.6)


>> உங்களுக்கு எந்த Browser பிடித்து இருக்கிறதோ அதன் கடைசி பதிப்பை பயன்படுத்துங்கள்(IE 9,Firefox 5)
>>கணினி துவங்கும் போது கூடவே இயங்கும் மென்பொருள்களை msconfig மூலமாக நிறுத்தி வையுங்கள்.

இனி குறிப்பிட்ட தளததில் நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டியது

>> எந்த தளத்தின் மூலம் உங்கள் அட்டைகளை பயன்படுத்த நினைக்கிறீர்களோ அந்த தளத்தின் நம்பகத்தன்மையை தெரிந்துகொள்ளுங்கள்.ஏன் என்றால் நீங்கள் பணம் செலுத்தி, பொருட்கள் அல்லது சேவைகள் கிடைக்கா விட்டால் எதுவும் செய்ய முடியாது(வங்கியை தொடர்பு கொண்டும் வேலை இல்லை, அவர்கள் உரிய நிறுவனத்திற்கு பணம் கொடுத்து விடுவார்கள் கவணமாக இருங்கள்)

>> குறிப்பிட்ட தளத்தில் உங்கள் அட்டையின் விபரம் கேட்கும் போது அந்த தளம் https இல் உள்ளதா என்று பாருங்கள்.

>> உங்கள் அட்டையின் விபரங்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கவா? என்று தெரிவுகள் இருந்து அதற்கு டிக் செய்யப்பட்டிருப்பின் அதனை எடுத்து விடுங்கள்.



சரி இனி நம்ம தலைப்புக்குள்ள வருவோம்.இருந்த இடத்தில் இருந்தே யாருடைய உதவியும் இல்லாமல் Reload செய்வோம் வாங்க!

உங்கள் கடன் அட்டை அல்லது வரவு அட்டையின் பின் புறத்தில் உள்ள நம்பருக்கு அழைப்பை மேற்கொண்டு உங்கள் அட்டையை Online இற்கு அக்டிவ் செய்ய சொல்லுங்கள்.அவர் உங்களிடம் சில கேள்விகளை கேட்பார் உதாரணமாக அட்டை இலக்கம் , பெயர் , முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு சில பாதுகாப்பு கேள்விகளும் கேட்பார்கள் ஏன் என்றால் அட்டை உங்களுடயதுதானா? என்பதை சரி பார்ப்பதற்கு உங்கள் தகவல் அனைத்தும் சரி ஆனவுடன் எத்தனை நாளைக்கு அட்டையை Online இல் அக்டிக் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யுங்கள்.அதிகமாக ஏழு நாட்கள் மாத்திரமே வழங்கப்படும்(Debit card).

கீழ் உள்ள உதாரணம் இலங்கையில் இருப்பவர்களுக்கு மாத்திரமே பொருந்தும் அதற்கு அடுத்த உதாரணம் உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

இது Mobitel sim மற்றும் HNB அல்லது Nations Trust வங்கியில் இல் கணக்கு இருந்து, Visa அல்லது master நிறுவனத்தால் வழங்கப்பட்ட அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு மாத்திரமே பொருந்தும்.

நீங்கள் பயன்படுத்தும் SIM இன் அதிகாரபூர்வமான தளத்திற்கு சென்று ஒரு கணக்கை ஆரம்பியுங்கள். (http://www.mobitel.lk) பின் உங்கள் கணக்கை உறுதி செய்துவிட்டு , உள்நுழைந்து , Pay Online என்ற இடத்திற்கு செல்லுங்கள்




எவ்வளவு தொகை மீள் நிரப்ப போரீங்கலோ அதை உள்ளீடு செய்துவிட்டு (குறைந்தது Rs.100 - Rs.1000) Pay Now என்ற பொத்தனை க்ளிக் செய்து உங்கள் அட்டையின் விபரங்களை கொடுங்கள்.உங்கள் விபரம் சரியாக இருந்தால் உடனே உங்கள் Number இற்கு பணம்வந்து விடும்.இதற்கு வங்கி எந்த ஒரு சேவைக்கட்டனும் எடுத்துக்கொள்ளாது.






அடுத்து ஒரு தளம் பற்றிபார்ப்போம்.இந்த தளத்தின் மூலம் உங்கள் அட்டைகளை பயன்படுத்தியோ அல்லது PayPal ஐ பயன்படுத்தியோ Reload செய்ய முடியும்.ஆனால் குறைந்த பட்சம் $5.00 மற்றும் சேவைகட்டனும் அரவிடப்படும்.Top Up செய்ய விருப்பம் இருந்தால் http://www.ezetop.com
01. இதில் ஒரு கணக்கு திறந்து கொள்ளவும்
02. பின் உறுதி செய்து கொள்ளவும்
03.அதற்கு பிறகு உள்நுழைந்து
04.உங்கள் நாடுமற்றும் உங்கள் வலையமைப்பை தெரிவு செய்து, உங்கள் அட்டையின் விபரத்தையும் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.











Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: