Sunday 25 December, 2011

திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்

திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்

இந்த தளம் திரைப்பட ரசிகர்களுக்கானது என்றாலும் எல்லா ரசிகர்களுக்குமானது அல்ல;இன்டி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் சுதந்திரமான படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசிப்பவர்களுக்கானது.

அதாவது வழக்கமாக வெளிவரும் வணிக ரீதியிலான படங்களில் இருந்து மாறுபட்டவை.ஹாலிவுட் படங்கள் தயாராகும் ஸ்டுடியோ முறைக்கு வெளியே உருவாகும் படங்கள்.லாப கணக்கு போடாமல் அதற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு படைப்பாளி முழு சுதந்திரத்தோடு எடுக்கும் படங்கள்.

தயாரிப்பாளரை ,விநியோகிஸ்தரை திருப்தி படுத்த வேண்டும் என்ற நிர்பந்தங்கள் இல்லாமல் உருவாகும் இந்த வகையான படங்கள் இன்டிபென்டன்ட் பிலிம்ஸ் என்று குறிப்பிடப்படுகின்றன.சுருக்கமாக இன்டி பிலிம்ஸ்.இன்னும் சுருக்கமாக இன்டி.

இந்த படங்கள் மணியானவையாக இருக்கும் என்றாலும் இவை பரவலாக மக்களை சென்றடைவதில்லை என்பது பெருங்குறை.இந்த வகையான படங்கள் அபூர்வமாகவே தியேட்டர்களில் வெளியாகும்.வெளியானாலும் ஓடுவது அரிதனதே.

எனவே இந்த படங்களுக்கு திரைப்பட விழாக்களை விட்டால வேறு வழியில்லை.இதற்காக என்றே சன்டான்ஸ் படவிழாவும் பிரத்யேகமாக இருக்கிறது.

படவிழாக்களில் காண்பிக்கப்பட்டு பேசப்பட்டால் இந்த படங்கள் பிரபலமாகி வெகு ஜன பார்வைக்கு வரும் பாக்கியத்தை பெறும்.இல்லை என்றால் நல்ல படங்களை ரசிக்க தெரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்து அவற்றை ஸ்கிரீன் செய்ய வேண்டியது தான்.

திரைப்படங்கள் என்றில்லை,ஆவணப்படங்கள்,செய்திபடங்கள்,என பலவகையான படங்களும் இந்த பிரிவில் அடங்கும்.

மாற்று சினிமா என்றும் வகைப்படுத்தப்படும் இந்த படங்கள் எங்கே வெளியாகின்றன என்பதை நல்ல சினிமாவின் ரசிகர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.சுதந்திர படங்களை இயக்குபவர்களும் ஓரளவுக்கு ரசிகர்களை சென்றடையும் வழிகளை கையாளுகின்றனர்.

அதனால் தான் திரைப்பட விழாக்களுக்கு படையெடுக்கின்றனர்.

நிற்க இததகைய படங்களை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?அதை தான் ஃபேன்டோர் டாட் காம் செய்கிறது.

இன்டி திரைப்பட ரசிகர்களுக்கான இணைய திரைப்பட சேவை என்று வர்ணித்து கொள்ளும் இந்த தளம் இன்டி படங்களை தேடி கண்டுபிடித்து ரசிக்க உதவுகிறது.தேடல் என்றால் அங்கும் இங்கும் அலைவது போல கடினமானது அல்ல. கம்ப்யூட்டர் முன் அமர்ந்தபடி சுலபமாக தேடலில் ஈடுபடலாம்.

காரணம் இந்த தளம் இதுவரை வெளியான் இன்டி படங்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறது.ஹாலிவுட் படங்களுக்கு என்று உள்ள ஒரு சில அருமையான இணையதளங்களை போல இதில் இன்டி படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ரசிகர்கள் தங்கள் தேவைக்கேற்ப படங்களை தேர்வு செய்து பார்க்கலாம்.திரைப்படங்கள்,குறும்படங்கள்,ஆவண படங்கள்,என தேர்வு செய்ய பல ரகங்கள் உள்ளன.அதிலும் அனிமேஷன் ,காமெடி,கிரைம் என ஏகப்பட்ட வகைகள் உள்ளன.

இவை தவிர பிரபலமானவை என்றும் படங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.இவை முகப்பு பக்கத்தில் முன்னிறுத்தப்படுகின்றன.

ஒரு அப்டத்தை கிளிக் செய்தால் அவற்றுகான அறிமுக குறிப்பு புகைப்படத்தோடு வருகறது.பல படங்களுக்கு விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன.அவை பற்றிய கட்டுரை இணைப்புகளூம் கொடுக்கப்பட்டுள்ளன.எல்லாவற்றுக்கும் மேல் அப்படியே கிளிக் செய்து பார்த்து ரசிக்கும் வசதியும் இருக்கிறது.

பலவிதங்களில் படங்களை தேடிப்பார்க்கும் வசதி இருக்கிறது.பல ஆண்டுகளுக்கு முன் வெளீயான மற்ற வழிகளில் பார்க்க வாய்ப்பில்லாத அருமையான படங்களை சுலபமாக பார்க்க வழி செய்யும் இந்த தளத்தை நல்ல படங்களுக்கான சொர்கம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் ரசிகர்கள் கண்டெடுத்த திரைப்பட முத்துக்கள் பற்றிய தகவலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்தால் புதிதாக சேரும் படங்கள் தொடர்பான் தகவலையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இன்டி ரசிகர்கள் தான் என்றில்லை;ஹாலிவுட படங்களையே பார்த்து பழக்கப்பட்டவர்களும் இந்த தளத்தில் உலா வந்தால் திரைப்பட உலகம் எத்தனை வண்ணமயமானது எத்தனை செழுமையானது என்பதை கண்டு பிரமிக்கலாம்.

இணையதள முகவரி; http://www.fandor.com/

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: