Sunday 25 December, 2011

ஒரே கிளிக்கில் Computer Lock செய்வதற்கு

கம்யூட்டரில் முக்கிய வேலை செய்து கொண்டிருக்கும் போது, அவசர வேலையாக சில நிமிடங்கள் எழுந்து செல்ல வேண்டி வரும். அந்த நிமிடங்களில் யாராவது கம்யூட்டரை ஏதாவது செய்துவிட்டால் பிறகு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை.

அந்த மாதிரி நேரங்களில் இந்த மென்பொருள் மிகவும் பயன்படும். இதை நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு சிம்பளுடன் அமர்ந்து விடும். அதை கிளிக் செய்தால் கம்யூட்டர் லாக் ஆகி விடும். மீண்டும் நாம் Password கொடுத்து தான் ஓப்பன் செய்ய முடியும்.

இதை பதிவிறக்கி உங்கள் கணணியில் நிறுவி அதை ஒப்பன் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். முதலில் உங்கள் Passwordம், அதையே மீண்டும் கான்பார்ம் செய்தும் type செய்து ஓ,கே. கொடுங்கள்.

இப்போது பார்த்தால் உங்கள் டாக்ஸ்பாரில் பூட்டு போன்ற அடையாளத்தை காணலாம். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

இப்போது பூட்டினை நீ்ங்கள் கர்சரால் டபுள் கிளிக் செய்யும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அவ்வளவுதான் உங்கள் கம்யூட்டர் லாக் ஆகிவிட்டது.

இனி யாராவது கர்சரால் கிளிக் செய்தால் அவர்களுக்கு Password கேட்டு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

இப்போது நீங்கள் ஏற்கனவே கொடுத்த Password சரியாக கொடுத்தால் மட்டுமே மீண்டும் விண்டோ ஓபன் ஆகும்.
Download Here

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: