Saturday, 31 December 2011

நாம் விரும்பிய Run Command ஐ உருவாக்குவது எப்படி ?


நாம் விரும்பிய Run Command ஐ உருவாக்குவது எப்படி ?


Runஆனது விண்டோஸ் இல் மிக பிரதான பங்கு வகிக்கிறது. இது நமது வேலையை இலகுவாக்குவதகாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். விண்டோஸ் இல் சில Program ஐ open பண்ணுவதற்கு சில Run commands உண்டு உதாரணமாக Start---> All Programs---> Accessories சென்று Calculator ஐ திறப்பதுக்கு பதிலாக Run இல் Calc என Type செய்து Enter பண்ணி Calculator ஐ இலகுவாக திறக்கலாம்.

இவ்வாறு குறிப்பிட்ட சில விண்டோஸ் பயன்பாட்டுக்காக Windows இல் சில command கள் default ஆக உள்ளது. இவ்வாறான commands ஐ நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்களுக்கு உருவாக்கினால் ஒவ்வோரு முறையும் Start----> All Programs சென்று நேரத்தினை வீணடிக்காமல் Run command மூலம் நம் வேலையை இலகுவாக்கிக் கொள்ள முடியும்.

இனி எவ்வாறு நாம் விரும்பிய Run Commands ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்

முதலில் Run ஐ open பண்ணி அதில் %windir% என Type செய்து Enter செய்யவும் அப்போது என்ற WINDOWS என்ற Folder திறக்கும் பின் அந்த Folder இல் File க்கு சென்று அதில் New என்பதை தெரிவுசெய்து Shortcut என்பதை Click செய்யவும்.(File--->New--->Shortcut) அப்போது வரும் Create Shortcut என்ற Dialog box இல் விரும்பிய மென்பொருளை தெரிவு செய்து Next ஐ Click செய்யவும் Type a name for this shortcut என்ற இடத்தில் நீங்கள் run command ஆக கொடுக்க விரும்பிய பெயரைக் கொடுத்து Finish ஐ click பண்ணவும்.

அவ்வளவு தான் இனி நீங்கள் உருவாக்கிய command ஐ run க்கு சென்று பரீட்ச்சித்துப் பார்க்கவும்

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: