Saturday 31 December, 2011

இணையத்தின் வயது?


இணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்

நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட இணையத்தின் வயது 40. நாற்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.

இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்

1969 :செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில் இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன. இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.

1972:Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும் முறையை கண்டுபிடித்தார்.

1973 :Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

1974 :Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியான TCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம் உருவானது.

1983 :வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது ".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.

1988 :இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கான கணினிகள் சேதமடைந்தன.

1990 :Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.

1994 :Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல் இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர்.

1998 :Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.

1999 :Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும் வாங்குவதிலும் ஏற்படுத்தியது.

2000 :இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.

2004 :Mark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.

2005 : வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .

2007 :Apple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள் இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2008 :Twitter உதயம்...

உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:

1. China - 29.8 கோடி (22.4%)
2. USA - 22.7 கோடி (74.7%)
3. Japan - 9.4 கோடி (73.8%)
4. India - 8.1 கோடி (7.1%)
5. Brazil - 6.8 கோடி (34.3%)
6. Germany - 5.5 கோடி (67%)
7. UK - 4.8 கோடி (72%)
8. France - 4.1 கோடி (66%)
9. Russia - 3.8 கோடி (27%)
10. S.Korea - 3.7 கோடி (76%)
11. Australia - 1.7 கோடி (80.6%)
(Figures in brackets denotes percentage of nations population who use internet)

உலகம் முழுதும் இணையம் உபயோகிப்பவர்கள்:

1. 1999 - 2.5 கோடி
2. 2002 - 50 கோடி
3. 2006 - 100 கோடி
4. 2008 - 150 கோடி

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: