Wednesday 28 December, 2011

தினவர்த்தகம்

தினவர்த்தகம்


தின வர்த்தகம் என்பது மிகவும் எளிதான ஒன்று என்பதை மனதில் கொள்ளுங்கள்


     நமது தரகர் நாம் கொடுக்கும் முன்வைப்புத் தொகைக்கு ஏற்ப அதன் மடங்கில் வர்த்தகம் செய்ய அனுமதிப்பார். அதாவது நான் என் என்னிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாயை தரகரிடன் தருகிறேன் என வைத்தால் அதன் மடங்கில் அதாவது எனது தரகர் என்னை ஒரு சமயத்தில் அதிகபட்சமாய் இருபதாயிரம் வரை வர்த்தகம் செய்ய அனுபதிப்பார். இந்த மடங்குகள் தரகருக்கு ஏற்ப மாறிடும்.

     இதற்கு பதிலாக நாம் செய்யும் ஒவ்வொரு வர்த்தகத்திலிருந்தும் தரகருக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை தரகுத்தொகையாக தரவேண்டும். இந்த தரகுகூலி தரகரை பொறுத்து மாறுபடும்.ஆனால் இந்த தரகுக் கூலிக்கும் உச்சவரம்பு உண்டு.

வாங்கினாலும் சரி விற்றாலும் சரி இரண்டிற்கும் தரகுக்கூலி தரவேண்டும்.தினவர்த்தகத்திற்கு மட்டும் முதலில் செயல்படுத்தும் வர்த்தகத்திற்கு மட்டும் தரகுக்கூலி கொடுத்தால் போதும்.அதாவது முதலில் வாங்கினால் அதற்கு தரக்கூலி உண்டு. வாங்கிய பங்கினை அன்றே விற்பதற்கு தரகுக்கூலி தரவேண்டியதில்லை.

நமது சந்தைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.15 க்கு துவங்கி மாலை 3.30 வரை நடைபெறுகிறது. இந்த இடத்தில் சந்தையின் துவக்கம் மற்றும் முடிவு பற்றிய ஒரு பிரபலமான சொலவடையை பகிர்ந்து கொள்ள் நினைக்கிறேன்.”சந்தைகள் அரைவேக்காடுகளால் துவக்கப்பட்டு அதிபுத்திசாலிகளால் முடிக்கப்படுகிறது”. என்பதே அது. இது வேடிக்கைக்காக சொல்லப்படுவதில்லை, இதில் நிறையவே உண்மையிருக்கிறது.

தினவர்த்தகத்தை பொறுத்த வரையில் உங்களின் லாபம் வர்த்தகம் முடிந்ததிலிருந்து இரண்டாவது நாள் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். நஷ்டமாயிருந்தால் இரண்டு நாட்களுக்குள் அந்த தொகையினை உங்கள் தரகரிடம் செலுத்தியாக வேண்டும்.

இனி நேர வர்த்தகம்தான்….தினவர்த்தகர்களுக்கு முதலும் கடைசியுமாய் நாலே நாலு வேலைகள்தான்.


  • ஒரு நல்ல பங்கினை கண்டுபிடிப்பது
  • சரியான நுழைவு விலை தீர்மானிப்பது
  • சரியான வெளியேறும் விலையை தெரிந்து கொள்வது
  • நஷ்டம் வந்தால் எப்படி சமாளிப்பது, அல்லது நஷ்டமே வராமல் எப்படி பார்த்துக் கொள்வது

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: