Tuesday, 27 December 2011

Online-தகவல் துளிகள்

Online Banking



* அமர்ந்த இடத்திலிருந்தே உங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கும் ஆன்லைன் வங்கிக் கணக்குப் பக்கத்துக்குச் செல்லும் போது, உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் வங்கிக் கணக்கை இயக்குகிறீர்கள் என்பதை இந்த சின்னம்தான் உறுதி செய்யும்.

* ஆன்லைன் வங்கிக் கணக்கின் முகவரிப் பகுதியில் http:// என்பதற்கு பதிலாக https:// என்று இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உடனடியாக அந்தத் தளத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள்.

* இபோது 'பிஷ்ஷிங்' (Fishing) என்ற சொல் அனைத்து ஆன்லைன் பயனாளர்களையும், வங்கிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்கிகளின் பெயரில் அச்சு அசலாக அவர்களது இணைய தளத்தின் வடிவமைப்பில் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட் எண், பேங்க் பேலன்ஸ், ஏ.டி.எம்.பின் நம்பர் என அனைத்தையும் களவாடுவதுதான் 'பிஷ்ஷிங்'!

* இதுபோன்ற தளங்களை உண்மை என நம்பி, பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட வங்கித் தகவல்களை அளித்தால், அவ்வளவுதான்...அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக வேறு கணக்குக்குப் பணம் சுருட்டப்பட்டிருக்கும்.

* இந்த பிஷ்ஷிங்கில் இருந்து எப்படி சுதாரிப்பது? உங்கள் மின்னஞ்சலுக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் பெயரில் அறிவிப்புகள் வரும். அதிலுள்ள இணையதள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று நம் தகவல்களைத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். இது போன்ற மின்னஞ்சல்களை அப்படியே அழித்துவிடுங்கள்.

* சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து, இதுபோன்ற மின்னஞ்சல்களை அனுப்பி இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அவர்கள் அனுப்பவில்லை எனில், உடனடியாக போலி மின்னஞ்சல் பற்றி உங்கள் வங்கிக்கு புகார் அளியுங்கள்.

* ஆன்லைன் பேங்கிங் செய்யும்போது, உங்கள் கம்ப்யூட்டரில் ஆன்டி வைரஸ் மென் பொருளை இயக்குவது சாலச் சிறந்த செயல்.

* சொந்த கம்ப்யூட்டர் அல்லாமல் பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது இடங்களில் ஆன்லைன் வங்கிக் கணக்கை கையாளும்போது கவனம் தேவை. முறையாக தளத்தைவிட்டு வெளியேறுவதுடன், பிரவுசிங் செய்த தடத்தை அகற்றிவிட்டு வெளியேறுங்கள்.

Online ticket booking



* ரயில், விமானப் பயணங்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கான அலைச்சலையும் நேரத்தையும் சேமிக்க ஒரே வழி, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதுதான்.

* பயணங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, நிறுவனங்கள் அளிக்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து குறைந்த கட்டணங்களை அளிக்கும் சேவைகளில் முன் பதிவு செய்யலாம். இந்த வசதி ஆன்லைனுக்கு மட்டுமே உண்டு.

* ஆன்லைனில் 21 நாட்களுக்கு முன் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், சிறப்புக் கட்டணச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எனவே, பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்தால், மிகக் குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை மேற்கொள்ளலாம்.

* இப்போது தமிழக மின்சார வாரியமும் ஆன்லைனுக்குள் வந்துவிட்டது. உங்கள் மின் கட்டணங்களை இனி ஆன்லைனில் மிக எளிதாக p://www.tnebnet.org என்ற இணையதளத்துள் சென்று கட்டலாம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம் (இந்த வசதி சென்னை மற்று கோவைக்கு மட்டுமே தற்போது வந்துள்ளது)

* சாதாரண தொலைபேசி, இணைய சேவை, மொபைல் போன், சொத்து வரி உள்பட அன்றாட வாழ்வில் நாம் தவிர்க்க முடியாத சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம். இதில் பல வசதிகள் பெருநகரங்களுக்கு மட்டுமே தற்போதைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Online Shopping



* முன் பின் அறியாத ஷாப்பிங் தளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களைத் தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை அள்ளி விடுவார்கள். அவற்றை நம்பி ஆன்லைனில் பணத்தைச் செலுத்தினால் அவ்வளவுதான்!

* நம்பத் தகுந்த இணைய தளங்கள் அல்லது, பிரபலமான நிறுவனங்களின் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தைரியமாக பொருட்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.

* சில இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துத்தான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

* இந்திய இணைய தளங்கள் அல்லாமல், வெளிநாட்டு இணைய தளங்கள் மூலம் ஷாப்பிங் செய்யும் போது பொருளின் விலையைவிட இரு மடங்கு வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்த வேண்டி வரலாம். எனவே, அந்த இணைய தள கொள்கைகளைப் படித்துவிட்டு, அதன் பின் முடிவெடுங்கள்.

* ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைத் தேர்வு செய்து, உங்களைப் பதிவு செய்து கொண்டால், அவர்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகளையும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் மூலம் பெறலாம்.

* உதாரணமாக,indiatimes.com,rediff.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றனர். இவை நம்பத்தகுந்த இணைய தளங்களாக கருதப்படுகின்றன. அதேபோல விரைவாக பொருட்களை அனுப்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது .
                      ****************************************

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: