Sunday, 25 December 2011

போட்டோக்களில் நிறம் மாற்ற

போட்டோக்களில் நிறம் மாற்ற

போட்டோக்களில் குறிப்பிட்ட ஒருவரை தனித்து அடையாளம் காட்ட வேண்டும் என்றால் அவரை மட்டும் கலரில் காண்பித்து மற்றவர்களை கருப்பு வெள்ளையில் காண்பிக்கலாம்.அவ்வாறு செய்ய போட்டோஷாப்பில் குறிப்பிட்ட நபரை கட்செய்து தனி லேயராக மாற்றி பின்னர் வேறு ஒரு படத்தில் பேஸ்ட் செய்யவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில அந்த சிரமம் நமக்கு இல்லை. மேலும் போட்டோஷாப்பும் இதற்கு தேவையில்லை. 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
மேலே உள்ள படத்தில் பார்த்தீர்களே யானால் பெண் மட்டும் கலரில் -பின் பக்கம் முழுவதும் கறுப்பு வெள்ளையில் வந்துள்ளது. இதை நாம் எப்படி நமது புகைப்படத்தில் செய்வது என்று பார்க்கலாம். நான் எடுத்துள்ளஇந்த புகைப்படத்தை கீழே காணுங்கள்.

அந்த சாப்ட்வேர் மூலம் உங்களுடைய புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.

இதில் வலதுபக்கம் கீழ்கண்ட வாறு விண்டோ இருக்கும். அதில் உள்ள கலர் தேர்வின் Colour detection மதிப்பை அதிகமாக மாற்றுங்கள். நீங்கள் எவ்வளவ எண் கொடுக்கின்றீர்களோ அந்த அளவு நிறங்கள் பிரிந்து தம்ப்நெயில் படங்கள் இடது பக்கம் வரும்.


இடது பக்கம் தம்ப்நெயில் வியுவில் நமது படத்திலுள்ள ஒவ்வோரு நிறமும் தனிதனி வியுவாக மாறிவிடுவதை பாருங்கள்.. இதில நமக்கு எந்த நிறம் மட்டும் தேவையோ அந்த நிறத்தை மட்டும் கிளிக் செய்து தேர்வு செய்யவும் . நான் இதில சிகப்பு நிறம் தேர்வு செய்துள்ளேன். Coca Cola கிரேட் மட்டும் சிகப்பு நிறமானதால் அதுமட்டும் வண்ணத்திலும் மற்றவை கருப்பு வெள்ளையிலும் வந்துள்ளதை கவனியுங்கள்.
இந்த புகைப்படத்தை கவனியுங்கள்.


இதில் பின்புறம் வண்ணம் வைத்து நபர்களை கறுப்புவெள்ளையில் கொண்டுவந்துள்ளேன். உல்டாவாக செய்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மாடலுக்கு மற்றும் ஒரு படம்-

இதில நீல நிறம் தேர்வு செய்து மற்றதை கருப்பு - வெள்ளையில் பதிவிட்டுள்ளேன்.சிகப்பு சட்டை பையனின் சட்டை நிறத்தை கவனியுங்கள்.கருப்பு வெள்ளையில் உள்ளது். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.உங்களுக்கு தெளிவாக புரியும்.

மற்றும் ஒரு படம் கீழே-

மாற்றம் செய்தபின் வந்த படம் கீழே-




இதில உள்ள ஸ்லைடரை நகர்துவது மூலம் நமக்கு தேவையான நிறத்தை வேண்டியஅளவு கொண்டுவந்துவிடலாம். உங்களுக்கு படம் முழு திருப்தியானதும் தனியே சேமித்து விடுங்கள்.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: