Sunday, 25 December 2011

இணையப் பக்கத்தை எப்படி pdf -ல் மாற்றுவது?

How to change a web page into pdf format? (Firefox addon)



நாம் இணையத்தில் உலாவும் போது சில முக்கியமான இணையப் பக்கங்களை சேகரித்து அல்லது அதனை அடையாளப்படுத்துவது (bookmark) வழக்கம். ஆனால் அவ்வாறு செய்வது நமக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு நீங்கள் அந்த பக்கத்தை சேகரிக்க விரும்பினால் சேகரித்த பக்கமானது இரண்டு கோப்புகளாக உங்கள் கணினியில் இடம்பெறும். அதில் ஒன்று தொலைந்தால் அம்பேல்! அந்த பக்கத்தை அடையாளப்படுத்த விரும்பினால், அந்த பக்கத்தை காண உலாவியை திறந்து அந்த உலாவி அந்த பக்கத்தை திறந்து நம் கண் முன் நிறுத்தும் வரை நம்மவர்க்கு பொறுமை இருக்காது. அதுவே அந்த பக்கத்தை pdf உருமாட்டில் மாற்றி கணினியில் சேகரித்து வைத்தால் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் அதனை படித்து கொள்ளலாம்.


அவ்வாறு செய்ய இந்த கூட்டுறுபை நீங்கள் உங்கள் நெருப்பு நரி அல்லது கூகுள் குரோம் உலாவியில் நிறுவ வேண்டும்.
http://pdfcrowd.com/save-as-pdf-addon/

இதனை நிறுவினால் உங்கள் உலாவியில் முகவரிப் பட்டைக்கு அருகில் ஓர் சிறிய படம் புதிதாக தோன்றும் (மேலே உள்ள படம் போன்று). அந்த படத்தை சொடுக்கினால் நீங்கள் மாற்ற விரும்பும் பக்கத்தை சுலபமாக pdf உருமாட்டில் மாற்றி தரும். நீங்கள் மாற்றிய பக்கம் A4 பக்க வடிவில் இருக்கும்.


இல்லை எனக்கு A7 பக்க வடிவில் தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு நெருப்பு நரியில் Tools --> Add-ons --> Save as pdf --> Option செல்லவும். அங்கே சென்று உங்கள் விருப்பம் போன்று மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வாறு மாற்ற அந்த தளத்திற்கு தனியே வெட்ட வேண்டும் (பணத்தை சொன்னேன்!).

கவனிக்க:- உங்களுக்கு இந்த கூட்டுறுபை நிறுவ விருப்பம் இல்லையென்றால் கீழ் கண்ட தளத்திற்கு தனியே சென்று அந்த இணையப் பக்கத்தின் முகவரியை சேகரித்து pdf உருமாட்டில் மாற்றி கொள்ளுங்கள்.
http://pdfcrowd.com/


(இவை அனைத்தும் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே வேலை செய்யும்! )

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: