BALUN (BALANCED-TO-UNBALANCED TRANSFORMER) - சமனிலாச்சமனி
BANDPASS FILTER - பட்டைவிடு வடிப்பி
BANDSTOP FILTER - பட்டைத்தடை வடிப்பி
BANDWIDTH - பட்டை அகலம்
BATTERY - மின்கலம்
BEACON (= AERONAUTICAL BEACON) - சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
BEAM (OF LIGHT, ELECTRONS ETC.) - கற்றை
BIASING - சாருகையிடுதல் - ஒரு திரிதடையத்தை (பொதுவாக மிகைப்பியாக) செயல்படுத்த, அதன் தளவாய் மீது ஒருதிசை மின்னழுத்தம் ஏற்படுத்துதல்
BIAS VOLTAGE - சாருகை மின்னழுத்தம் - ஒரு திரிதடையம் செயல்படும்போது, தன் தளவாய் மீது ஏற்படுத்தப்படும் ஒருதிசை மின்னழுத்தம்
BIAS CURRENT - சாருகை மின்னோட்டம் - ஒரு திரிதடையம் செயல்படும்போது, தன் தளவாய்-உமிழ்வாய் சந்தியில் பாயும் ஒருதிசை மின்னோட்டம்
BINARY - இருமம்
BIT (DATA) - துணுக்கு (தரவு)
BIT RATE - துகள் வீதம்
BLANKING - மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace), கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன
BOOTSTRAP, BOOTSTRAPPING, BOOTSTRAP CIRCUIT - ஈடேற்று, ஈடேற்றம், ஈடேற்றுச் சுற்று - மாறுமின்னழுத்தத்திற்கு அதிகாக மின்மறுப்பு தரும் ஒரு வகை சாருகை முறை
BROADBAND - அகலப்பட்டை, அகண்ட அலைவரிசை
BROADSIDE ARRAY (ANTENNA) - முகமியக்க அணி (அலைக்கம்பம்)
BUS (DATA) - பாட்டை (தரவு)
BROMINE - நெடியம்
BRONZE - வெண்கலம்
BUFFER, BUFFER AMPLIFER - இடையகம், இடையக மிகைப்பி
BURIED VIA - மறைந்த வழிமம் - ஒரு சுற்றுப்பலகையில் இரு முகங்களை எட்டாத வழிமம்; இது ஒரு முகத்தை எட்டும் அல்லது உள்ளடுக்குகளில் மறைந்திருக்கும்
BUSY, BUSY STATE - வேலயாக, வேலையான நிலை
BYTE (= OCTET) - எண்ணெண்
CABLE - வடம்
CABLE MODEM- வடப் பண்பேற்றிறக்கி
CACHE MEMORY - இடைமாற்று நினைவகம் - பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகம்
CALCULATOR - கணிப்பான்
CALCULUS - நுண்கணிதம்
CAMCORDER - நிகழ்பதிவி
CAPACITOR - மின்தேக்கி, கொண்மி
CAPACITIVE REACTANCE - கொண்ம எதிர்வினைப்பு
CAPILLARY ACTION - புழை இயக்கம்
CARRIER SIGNAL - சுமப்பி குறிகை
CARTRIDGE - பொதியுறை
CASCADE - ஓடையிணைப்பு
CATALYST - வினையூக்கி
CATHODE - எதிர்முனை
CDROM - படிப்பு குறுவட்டு
CD READ WRITE - எழுதுப்படிப்புக் குறுவட்டு
CD RECORDABLE - பதிவுக் குறுவட்டு
CELL PHONE (MOBILE PHONE) - கைபேசி (நகர்பேசி)
CENTRE OF GRAVITY - ஈர்ப்பு மையம்
CENTRE OF MASS - பொருண்மை மையம்
CHARECTERISTIC - சிறப்பியல்பு
CHARECTERISTIC IMPEDENCE - சிறப்பு மின்மறுப்பு - ஒரு செலுத்துதடத்தில் ஏதேனும் இருப்பிடத்தின் மின்னழுத்தம்-மின்னோட்டம் விகிதம்
CHARGE - மின்னூட்டு
CHARGER - மின்னூட்டி
CHASSIS GROUND - சட்டநிலம்
CHIPSET - சில்லுத்தொகுதி
CHORD (IN A CIRCLE) - நாண்
CHORD (MUSIC) - பன்னிசை
CHROMA / CHROMINANCE - நிறப்பொலிவு
CIRCUMFERENCE - பரிதி
CLOCK SIGNAL - கடிகாரக் குறிகை
CLOCK BUFFER - கடிகார இடையகம்
COAX(IAL) CABLE - ஓரச்சு வடம்
COAXIAL LENSES - ஓரச்சு வில்லைகள்
COBALT - மென்வெள்ளி
CODEC - புரிப்பு
COLLECTOR (TRANSISTOR) - ஏற்புவாய்
COMBINATION, COMBINATION GROUP - சேர்வு, சேர்வுக் குலம்
COMPOSITE VIDEO - கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (Luma), நிறமை (Chroma) மற்றும் நேரவிவரம் (Timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும்
COMPUTER - கணிப்பொறி, கணிணி
CONCAVE LENS - குழிவில்லை
COMMUTATOR - திசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்
COMPUTER - கணிப்பொறி, கணிணி
CONCAVE MIRROR - குழியாடி
CONDUCTANCE - கடத்தம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் கடத்தும் தன்மை; G = I/V என்கிற மதிப்புடையது, அதாவது தடையத்தின் தலைகீழ்
CONE - கூம்பு
CONFIGURABLE PROGRAMMABLE LOGIC DEVICE (CPLD) - உள்ளமை நிரல்படு தருக்கச் சாதனம்
CONFIGURATION - உள்ளமைவு
CONSTANT - மாறா, மாறிலி
CONTINUOS FUNCTION - தொடர்ச்சியுள்ள சார்வு
CONVEX LENS - குவிவில்லை
CONVEX MIRROR - குவியாடி
CONVOLUTION - சுருளல்
COORDINATE - ஆயம்
CORRELATION - ஒட்டுறவு
CRYSTAL - படிகம்
CRYSTAL OSCILLATOR - படிக அலைவி/அலைப்பி
CUBE - கன சதுரம்
CURRENT - மின்னோட்ட்ம், ஓட்டம்
CYCLOTRON - சுழற்சியலைவி
DC CURRENT - நேரோட்டம்
DATA - தரவு
DATASHEET - தரவுத்தாள்
DC CURRENT - நேரோட்டம், ஒருதிசை மின்னோட்டம்
DC VOLTAGE - ஒருதிசை மின்னழுத்தம்
DECODE, DECODING, DECODER - குறிவிலக்கு, குறிவிலக்கம், குறிவிலக்கி
DECIMATE, DECIMATION - வீதக்குறை, வீதக்குறைவு - மாதிரித் தரவுகளை அதிக வீதத்திலிருந்து குறைந்த வீதத்திற்கு மாற்றுதல்; இடையுள்ள மாதிரிகள் விடப்படுகின்றன
DECRYPT - மறைவிலக்கு
DEMODULATION - பண்பிறக்கம்
DESCRAMBLING - கலர்விலக்கம்
DETECTOR - உணர்வி
DIAC (DIODE FOR AC) - மாறுமின் இருமுனையம் மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்
DIAMETER - விட்டம்
DIFFERENTIAL, DIFFERENTIATION, DIFFERENTIATOR - வகையீட்டு, வகையீட்டல், வகையீட்டி
DIFFRACTION - அலைவளைவு
DIFFRACTION GRATING - அலைவளைவுக் கீற்றணி
DIODE - இருமுனையம்
DIRECTIONAL ANTENNA - திசைவு அலைக்கம்பம்
DIRECTIONAL COUPLER - திசைவுப் பிணைப்பி
DISCREET VALUES - தனித்த அளவுகள்
DISCHARGE (ELECTRIC) - மின்னிறக்கம்
DISCRIMINATOR - பிரித்துணர்வி
DISTORSION - உருக்குலைவு
DISC - வட்டு
DISH ANTENNA - அலைக்கம்பா
DOUBLE-STUB (IMPEDENCE) MATCHING - இருமுளை (மின் மறுப்புப்) பொறுத்தம்
DRIVER (SOFTWARE) - இயக்கமென்பொருள்
DYNAMO - மின்னாக்கி
EARTH GROUND - புவி நிலம்
EARTHING - புவியிடுதல்
EARTH WIRE - புவிக் கம்பி
EDDY CURRENT - சுழலோட்டம்
EGRESS - வெளிவாய்
ELECTRIC FIELD - மின்புலம்
ELECTRICITY - மின்சாரம்
ELECTROCARDIOGRAPH - மின் இதயத்துடிப்பு வரைவி
ELECTRON - எதிர்மின்னி
ELECTRODE - மின்வாய்
ELECTROMAGNETIC INTERFERENCE (EMI) - மின்காந்த இடையீடு
ELECTROMAGNETIC WAVE - மின்காந்த அலை
ELECTROMAGNETICS - மின்காந்தவியல்
ELECTROSTATICS - நிலைமின்னியல்
ELECTROSTATIC DISCHARGE (ESD) - நிலைமின்னிறக்கம் - இரு மின்னூட்டமுடைய பொருட்கள் அருகில் நெருங்கும்போது ஏற்படும் மின்னிறக்கம்
ELECTROSTATIC SENSITIVE (=ESD SENSITIVE) - நிலைமின்பாதிக்கப்படத்தக்க(து)
ELECTRON - எதிர்மின்னி
ELECTRONICS - மின்னணுவியல்
ELEMENT - தனிமம்
EMITTER - உமிழ்வாய்
EMULATION - போன்மம்
END-FIRE ARRAY (ANTENNA) - முனையியக்க அணி (அலைக்கம்பம்)
ENGINE - பொறி
ENTITY - உருபொருள்
ELEVATION - உயர்வு ரேகை
ETHERNET - தூயவெளியம், தூயவெளி வலை
ETHERNET CARD - தூயவெளி அட்டை
FABRICATION - கட்டுருவாக்கம்
FACTORIAL - தொடர்பெருக்கு
FALL TIME - விழுநேரம்
FALLING EDGE - விழுவிளிம்பு
FAN-IN - வீச்சு சுருக்கம்
FAN OUT - வீச்சு விரிப்பு
FAR-FIELD REGION - தொலைபுல மண்டலம்
FIDUCIAL - நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள்
FEED HORN - அலையூட்டுக் குழல்
FETCH CYCLE - கொணர் சுழர்ச்சி
FIBRE-OPTIC CABLE - ஒளியிழைவடம்
FIDELITY - மெய்நிலை
FIELD - புலம்
FIELD PROGRAMMABLE GATE ARRAY - களம் நிரல்படு வாயிலணி
FIELD EFFECT TRANSISTOR (FET) - புலவிளைவுத் திரிதடையம்
FILE - கோப்பு
FILE ALLOCATION TABLE (FAT) - கோப்பு பிரிப்பு அட்டவணை
FINLINE - துடுப்புத்தடம் - மின்சுற்றுப்பலகைகளின் துளைகளில் (vias) அச்சிடப்பட்ட மின்தடங்கள்
FINITE IMPULSE RESPONSE (=FIR) FILTER - முடிவு கணத்தாக்க மறுமொழி விடிப்பி - பின்னூட்டம் உடைய இலக்க வட்ப்பி (digital filter); இவை நேரியல் கட்ட சிறப்பியல்வு (குறிகையில் உருக்குலைவு ஏற்படுத்தாத தன்மை) கொண்டவை
FLAT PANEL DISPLAY (FPD) - தட்டைப் பலகக் காட்சி
FLOW CHART - பாய்வுப்படம்
FORWARD BIAS - முன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும்
FREQUENCY HOPPING - அலைவெண் துள்ளல்
FREQUENCY MODULATION - அலைவெண் பண்பேற்றம்
FREQUENCY SHIFT KEYING - அலைவெண் பெயர்வு இணைத்தல்
FULL ADDER - முழுக்கூட்டி
FUNCTION (MATHEMATICAL) - சார்பு
FUNCTION (SUBROUTINE, SUBPROGRAM) - துணைநிரல்
FUNCTIONALITY - செயல்கூறு
FUSE - உருகி
FUZZY LOGIC - இடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம்
GAIN - பெருக்கம்
GALVANOMETER - கல்வனோமானி
GALLIUM - மென்தங்கம்
GATE - வாயில்
GATE (IN F.E.T.) - வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்)
GATE ARRAY - வாயிலணி, வாயில் அணி
GATEWAY - நுழைவாயில்
GANG, GANGING - கூட்டியங்கு, கூட்டியங்குதல்
GENERAL PURPOSE REGISTER - பொதுப்பயன் பதிவகம்
GENERATOR - மின்னியற்றி
GLITCH - தடுமாற்றம்
GLOBAL POSITIONING SYSTEM - உலக இடம் காட்டும் அமைப்பு
GRATING - கீற்றணி
GRID (ELECTRIC) - மின்தொகுப்பு
GROUNDING - நிலமிடுதல்
GROUND CURRENT - நிலஓட்டம்
GROUND PLANE - நிலத் தளம்
GROUND WAVE - நிலஅலை
GROUND WIRE - நிலக் கம்பி
HALF ADDER - அரைக்கூட்டி
HALOGEN - உப்பீனி
HARD DISK - நிலைவட்டு
HARDWARE - வன்பொருள்
HARMONIC(S) - இசையம்(ங்கள்)
HELICAL ANTENNA - சுருள் அலைக்கம்பம்
HELIUM - எல்லியம்
HETRODYNE, HETRODYNING - கலக்கிப்பிரி, கலக்கிப்பிரிப்பு - கலப்பி மற்றும் உள்ளிட அலைவி ஆகியவை கொண்டு வானலையை இடையலை ஆக்குதல் அல்லது எதிர்மாறாக
HEX NUMBER - பதின்அறும எண்
HEXODE - அறுமுனையம்
HIGH PASS FILTER - உயர்பட்டை வடிப்பி
HOLOGRAPHY - ஒளிப்படவியல்
HOMOGENIOUS - ஒருபடித்தான
HORIZONTAL LINE - கிடை வரைவு - பரவல் காட்சியில் மின்னிக் கற்றையின் இடது-வலது பெயர்வு
HORIZONTALLY POLARIZED WAVE - கிடை முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் கிடைதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை
HOST - விருந்தோம்பி
HUE - வண்ணச்சாயல்
HUB - குவியன்
HYPERBOLA - அதிபரவளையம்
IDEAL - கருதியல்
IDLE, IDLE STATE - பயனிலான, பயனில் நிலை
IDENTITY - முற்றொருமை
IMPEDENCE - மறுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் எதிர்ப்புத் தன்மை; விடுப்பின் தலைகீழ்; இது தடையம் மற்றும் எதிர்வினைப்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; Z = R + j(XL-XC) மதிப்பு கொண்டுள்ளது
IMPEDENCE MATCHING - மின் எதிர்ப்பு பொறுத்தம்
IMPULSE - கணத்தாக்கம்
IMPULSE RESPONSE - கணத்தாக்க மறுமொழி
INCIDENCE (LIGHT) - ஒளிப்படுகை
INDERMINATE - தேரா, தேரப்பெறாத
INDIUM - அவுரியம்
INDUCTIVE REACTANCE - தூண்ட எதிர்வினைப்பு
INERTIA - சடத்துவம், ஜடத்துவம்
INFINITE IMPULSE RESPONSE (=IIR) FILTER - முடிவற்ற கணத்தாக்க மறுமொழி வடிப்பி - பின்னூட்டு கொண்ட இலக்க வடிப்பி; இவை கொடுத்த மறுமொழியை செயல்படுத்த சிக்கனமானவை
INFINITY - முடிவிலி
INGRESS - உள்வாய்
INITIATOR - துவக்கி
INITIALIZATION - முன்னமைவு
INSTRUMENT LANDING SYSTEM - தரையிறங்கு கருவி அமைப்பு - விமானம் தரையிறங்க பாதை மற்றும் வழிகாணலை அறிவிக்கும் தரையமைந்த துள்ளியமான கருவி
INSULATE, INSULATION - மின்காப்பிடுதல், மின்காப்பு
INSULATED - மின்காப்பிடப்பட்ட(து)
INTELLIGENCE - நுண்ணறிவு
INTEGER - முழு எண்
INTEGRAL, INTEGRATION, INTEGRATOR - தொகையிடு, தொகையீட்டல், தொகையீட்டி
INTERLACE - தொடர்பின்னல்
INTERLACED SCANNING - பின்னிய துருவுதல்
INTERMEDIATE FREQUENCY (IF) - இடைநிலை அலைவெண், இடையலை
INTERFERENCE - இடையீடு
INTERPOLATE, INTERPOLATION (DSP) - வீதமேற்று, வீதமேற்றம் - மாதிரித் தரவுகளை குறைந்த வீதத்திலிருந்து அதிக வீதத்திற்கு மாற்றுதல்; புதிதாக செருகப்படும் தரவுகள் சராசரி அல்லது பூச்சியமாக கருதப்படுகின்றன
INTERPOLATE, INTERPOLATION (STATISTICS) - இடைச்செருகு, இடைச்செருகல்
INTERRUPT - குறுக்கீடு
INVARIANT, INVARIANCE - மாற்றமுறாதது, மாற்றமுறாமை
INVERTER - மாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம்
INVERSE SQUARE LAW - எதிர் வர்க்க விதி
INVOLUTE, INVOLUTION - சுருட்சிவரை, சுருட்சி
ISOLATION - தனிமையாக்கம் - குறிகைகள், சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல்
IRIDIUM - உறுதியம்
IRREGULARITY - ஒழுங்கின்மை
IRON LOSS - இறும்பு இழப்பு
ISA - INDUSTRY STANDARD ARCHITECTURE - தொழிலக நெறிக் கட்டமைப்பு
JACKET - உறை
JAM - நெரிசல்
JAW - தாடை
JOB - பணி
JUMP - தாவு
JUNCTION - சந்தி
JUNCTION DIODE - சந்திப்பு இருமுனையம்
JUNCTION TRANSISTOR - சந்திப்புத் திரிதடையம்
JOYSTICK - இயக்குப்பிடி
KEY BOUNCE - விசைத் துள்ளல்
KEYBOARD (COMPUTER, TYPEWRITER) - விசைப்பலகை
KEYBOARD (MUSIC) - இசைப்பலகை
KEY BOUNCE - சாவித் துள்ளல், விசைத் துள்ளல்
KEY WAY - சாவித் துளை
KINETIC ENERGY - இயக்க ஆற்றல்
KLYSTRON, KLYSTON OSCILLATOR - மின் கற்றையலைக் குழல், மின் கற்றையலைவி/கற்றையலைப்பி - நுண்ணலைகளை எற்படுத்தும் ஒரு சாதனம்
KNOB - குமிழ்
KNEE POINT - திருப்பும் முனை
KEYING - இணைத்தல்
KRYPTON - மறைவியம் - நிறமற்ற மந்த வளிமம்; சூழலில் 1ppm அளவுடையது; குழல்விளக்குகளில் (fluorescent lamps) பயன்பெறுகிறது
LASER - ஊடொளி
LASER DIODE - ஊடொளி இருமுனையம்
LATCH - தாழ்ப்பாள்
LATENCY - சுணக்கம்
LATENT HEAT - உள்ளுறை வெப்பம்
LATTICE - உருபொருள்
LAYOUT (IC, PCB) - மனையமைவு
LIGHT EMITTING DIODE - ஒளி உமிழ் இருமுனையம்
LINEAR (PARTICLE) ACCELERATOR - நேரியல் (துகள்) முடுக்கி
LINEAR IC - நேரியல் ஒருங்கிணைச்சுற்று
LINKER - தொடுப்பி
LIQUID CRYSTAL DISPLAY (LCD) - திரவப் படிகக் காட்சி
LITHIUM - மென்னியம் - குறையளவு எடைக்கொண்ட உலோகம்; வெள்ளி நிறமானது; கத்தியால் வெட்டக்கூடியது
LOAD, LOAD (v.), LOADING - சுமை, சுமைக்கொடு, சுமைக்கொடுத்தல்
LOCUS - நியமாப்பாதை
LOG IN - புகுபதிகை
LOG OUT - விடுபதிகை
LOGIC - தருக்கம், ஏரணம்
LOGIC ELEMENT- தருக்கத் தனிமம்
LOGARITHM - மடக்கை
LOGIC DESIGN - தருக்க வடிவமைப்பு
LOGIC LOCK REGION - தருக்கம் அடைப்பு மண்டலம்
LONGITUDE - நெட்டாங்கு
LOW DROP OUT REGULATOR - தாழ்வீழ்ச்சி சீர்ப்படுத்தி, தாழ்வீழ்ச்சி சீர்ப்பி
LOW PASS FILTER - தாழ்பட்டை வடிப்பி
LOW NOISE - தாழ் இரைச்சல்
LOW NOISE BLOCK DOWNCONVERTER (LNB) - தாழ்விறைச்சல் பட்டை கீழ்மாற்றி (பட்டைமாற்றி) - செயற்கைக்கோள் குறிகையை L-பட்டை இடையலையாக மாற்றும் சாதனம்
LUMINANCE - ஒளிர்மை
LUMPED CIRCUIT ELEMENTS - திரண்ட சுற்றுருப்புக்கள் - வானலை குறிகைப்பாதையில் போலி சுற்றுருப்புக்கள் - மின்தடையம், மின்தேக்கம் மற்றும் மின்தூண்டல் ஆகியவற்றை கருதியல் மின்தடங்களுடன் (ideal conductors) தனத்தனியான சுற்றுருப்புக்களாக பிரதிபலிக்க இயலும்; இச்சுற்றுருப்புக்கள் திரண்ட சுற்றுருப்புகள் எனப்படுகின்றன
MACRO - குறுநிரல்
MAGNETOGRAPH - காந்தவரைவி
MAGNETOMETER - காந்தமானி
MAGNETRON - காந்த அலைவி
MAGNIFICATION - உருப்பெருக்கம்
MAGNITUDE - வீச்சளவு
MANTISSA - அடிஎண்
MASS - நிறை
MASTER CLOCK - முதன்மைக் கடிகாரம்
MASS STORAGE - திரள் சேமிப்பகம்
MATH COPROCESSOR - கணித இணைச்செயலி
MATRIX - அணி
MEMORY ADDRESS - நினைவக முகவரி
MEMORY ALLOCATION - நினைவக ஒதுக்கீடு
METAL LAYER - உலோக அடுக்கு
METALLIZATION - உலோகப்பூசு, உலோகப்பூசல்
MICROPHONE - ஒலிவாங்கி
MICROSTRIP - நுண்கீற்று - மின்சுற்றுப்பலகைகளில் வெளி அடுக்குகளில் அச்சிடப்பட்ட மின்தடங்கள்
MICROWAVE OVEN - நுண்ணலை அடுப்பு
MIXER - கலப்பி
MODEL - மாதிரியுரு
MODEM - இணக்கி
MODULATION INDEX - பண்பேற்ற குறியெண்
MODULATOR - பண்பேற்றி
MOMENT - திருப்பம்
MOMENTUM - உந்தம்
MOTHERBOARD - தாய்ப்பலகை
MOTOR - மின்னோடி
MULTIMEDIA - பன்னூடகம்
MULTIMETER - பன்னளவி
MULTIPROCESSOR SYSTEM - பல்செயலி முறைமை
MULTIRATE SYSTEM - பல்வீத அமைப்பு - பல மாதியெடுப்பு வீதங்கள் கோண்ட அமப்பு; ஒரு மாதியெடுப்பு வீதத்திலுள்ள தரவு வேறொரு வீதத்தில் எதிர்ப்பார்க்கும் அமைப்பிற்கு அளிக்கும் போது, ஒரு பல்வீத அமைப்பு தேவைப்படுகிறது
MULTISWITCH - பன்னிலைமாற்றி - ஒரு செயற்கைக்கோள் பெறு அமைப்பில் பல செயற்கைக்கோள் குறிகைகளை தனிமையோடு பல மேலமர்வுப் பெட்டிகளுக்கு தேர்வு செய்யும் சாதனம். இது கிண்ண அலைக்கம்பத்திற்கும் மேலமர்வுப் பெட்டி(களு)க்கிடையே அமைந்திருக்கும்
MULTISTAGE AMPLIFIER - பலகூற்று மிகைப்பி
NAND GATE - இல்-உம்மை வாயில்
NAVIGATIONAL AID (=NAVAID) - வழிகாணுதவி - பார்வை அல்லது தரவு மூலமாக விமானப் பாதையை தெரிவிக்கும் தரை அல்லது வானமைந்த கருவி
NEAR-FIELD REGION - அருகுபுல மண்டலம்
NETWORK - பிணையம்
NETWORK ANALYSIS - பிணையப் பகுப்பாய்வு
NEUTRON - நொதுமின்னி
NIBBLE - நாலெண்
NICKEL - வன்வெள்ளி
NO LOAD CHARECTERISTIC - சுமையில் சிறப்பியல்பு
NO LOAD CURRENT - சுமையிலோட்டம்
NODE - கணு
NOISE - இரைச்சல்
NOISE FIGURE, NOISE FACTOR - இரைச்சல் அளவெண், இரைச்சல் காரணி - ஒரு செயல்படு சாதனத்தின் வெப்ப இரைச்சல் அளிப்பு தனது வெளியீட்டில் குறிப்பிடும் அளவு; உண்மை மிகைப்பியின் வெளி வெப்ப இரைச்சல்/கருதியல் மிகைப்பியின் வெளி வெப்ப இரைச்சல் என்ற விகிதம், dB அளவில்
NOISE RESISTANCE - இரைச்சல் மின்தடை
NOISE SUPPRESSION - இரைச்சல் நீக்கம்
OBJECTIVE LENS - பொருள்நோக்கு வில்லை
OBSERVER - நோக்காளன்
OBLIQUE - சாய்வான
OCTET (= BYTE) - எண்ணெண்
OMNIDIRECTIONAL ANTENNA - சமதிசை அலைக்கம்பம் - எல்லா திசைகளிலும் சமமாக மின்காந்த ஆற்றலை கதிர்வீசும் கருதியல் அலைக்கம்பம்
OPEN CIRCUIT - திறந்த மின்சுற்று, திறந்த மின்பாதை
OPEN LOOP GAIN - திறந்த வளையப் பெருக்கம்
OPERATING RANGE - இயக்க நெடுக்கம்
OPERATIONAL AMPLIFIER (OP-AMP) - செயல்படு மிகைப்பி (செய்மிகைப்பி)
OR GATE - அல்லது வாயில்
ORBIT - சுற்றுப்பாதை
ORIENTATION - திசையமைவு
OSCILLATION - அலைவு
OSCILLOSCOPE - அலை(வு)நோக்கி
OVERFLOW - வழிவு
OVERSHOOT - மேல்பாய்வு
PANAROMIC - அகலப் பரப்பு
PARABOLIC REFLECTOR - பரவளைய எதிரொலிப்பி
PARALLAX - இடமாறு தோற்றம்
PARALLEL CONNCETION - பக்க இணைப்பு
PARALLELLOGRAM - இணைகரம்
PARA-MAGNET - இணைக்காந்தம்
PARAMETER - கூறளவு
PARASITIC ANTENNA - போலி அலைக்கம்பம்
PARASITIC CAPACITANCE - போலி மின்தேக்கம், போலி மின்கொண்மம்
PARASITIC INDUCTANCE - போலி மின்தூண்டம்
PARASITIC IMPEDENCE - போலி மின் மறுப்பு
PARITY BIT - சமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது, கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை, பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின், அவைகளை நீக்கவும் இயல்கின்றன
PARITY CHECK - சமநிலை சரிபார்ப்பு
PASS BAND - கடத்துப் பட்டை
PASSIVE LOAD - உயிர்ப்பில் சுமை, உயிர்பற்றச் சுமை
PATCH CORD - எளிதிணைப்பு வடம்
PEER - ஒப்பி
PEER-PEER TRANSFER - ஒப்பி-ஒப்பி பரிமாற்றம்
PENTODE - ஐம்முனையம்
PERIODIC TABLE - தனிம அட்டவணை
PERIPHERAL COMPONENT INTERCONNECT (PCI) - புறக்கருவி இணைமுகம்
PERMEABILITY - காந்த உட்புகு திறன்
PERMITTIVITY - மின் தற்கோள் திறன்
PERMUTATION, PERMUTATION GROUP - வரிசைமாற்றம், வரிசைமாற்றக் குலம்
PHASE (ANGULAR) - கட்டம்
PHASE (EG. 3-PHASE CIRCUIT) - தறுவாய்
PHASED ARRAY RADAR - கட்டஅணி கதிரலைக் கும்பா
PHASE LOCKED LOOP (PLL) - கட்டமடைவு வளையம்
PHASE SHIFT KEYING (PSK) - கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு அலைக்கட்டங்களாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை
PHOSPHOROUS - தீமுறி, பிரகாசிதம்
PHOTON - ஒளித்துகள்
PHOTOSPHERE - ஒளிமண்டலம்
PICTURE TUBE - படக் குழாய்
PICK-UP - அலையெடுப்பி
PIEZO-ELECTRIC CRYSTAL - அமுக்கமின் பளிங்கு
PLACE AND ROUTE - இடவமைவு-திசைவு
PLACEMENT - இடவமைவு
PLANE POLARIZED WAVE - தள முனைவாக்கப்பட்ட அலை
PLASMA - மின்மம்
PLATINUM - வெண்தங்கம்
PLOTTER - வரைவி
PLUG - செருகி
PLUTONIUM - அயலாம்
POLE (NORTH/SOUTH) - முனை
POLE (OF A TRANSFER FUNCTION) - முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
POLAR AXES - துருவ அச்சுக்கள், முனையச்சுக்கள்
POLAR COORDINATES - துருவ ஆயங்கள், முனை ஆயங்கள்
POLARIMETER - முனைவாக்கமானி - ஒளி அல்லது மின்காந்த அலையின் முனைவாக்க நிலையை கண்டறியும் சாதனம்
POLARITY (POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) - கதிர்வு
POLARIZER, POLAROID - முனைவாக்கி - முனைவாக்கமற்ற ஒளி அல்லது மின்காந்த அலையை முனைவாக்கப்பட்ட ஒளி அல்லது மின்காந்த அலையாக மாற்றும் கண்ணாடி உட்பொருள்
POWER PLANE - திறன் தளம்
POWER SPECTRUM - திறனிறமாலை
POWER SPECTRAL DENSITY - திறனிறமாலை அடர்வு - ஒரு குறிகையின் திறன் பரவல், அலைவெண்ணின் சார்பாக; இதன் மதிப்பு அக்குறிகையின் தன்னொட்டுறவின் ஃபுரியர் உருமாற்ற வீச்சளவின் இருபடியாகும் (square of magnitude of auto-correlation)
PROBE - தேட்டி
PRISM - அரியம், பட்டகம்
PROBABILITY - நிகழ்தகவு
PROBABILITY DENSITY FUNCTION - நிகழ்தகவு அடர்சார்பு
PROGRAMMER - நிரலி (DEVICE), நிரலர் (PERSON)
PROGRAMMABLE LOGIC DEVICE - நிரல்படு தருக்கக் கருவி
PROPOGATION - பரப்புகை
PROTON - நேர்முன்னி
PULSE AMPLIFIER - துடிப்பு மிகைப்பி
PULSE CODE MODULATION - துடிப்பு சங்கேத பண்பேற்றம் - நிகழ்நேர (real-time) தரவுகளை இணைநிலை இலக்கமாக்கி (parallelized digital) செலுத்துதல்
PULSE COUNTER - துடிப்பு எண்ணி
PULSE GENERATOR - துடிப்பாக்கி
PULSE SHAPER - துடிப்பு உருமாற்றி
PULSE TRANSFORMER - துடிப்பு மின்மாற்றி
PUMP - எக்கி
PYRAMID - கூம்பகம்
Q (QUALITY) FACTOR - தரக் காரணி
QUADRATURE PHASE SHIFT KEYING (QPSK) - பரப்புக்காண் கட்டப் பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு வீச்சு மற்றும் அலைக்கட்டம் சேர்வாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை
QUADRILATERAL - நாற்கரம்
QUANTIZATION - சொட்டாக்கம் - தொடர்ச்சியுள்ள அளவுக் கணத்தை தனித்த அளவுக் கணமாக தோராயப்படுத்தி மாற்றுத்துதல்ல்; உதாரணமாக ஒரு ஒப்புமைக் குறிகையை ஒரு குறிப்பிட்ட படிநிலைகளில் இலக்கப்படுத்துதல்
QUANTIZATION LEVEL - சொட்டாக்க படிநிலை
QUANTIZER - சொட்டாக்கி
QUANTUM - துளிமம்
QUARTER WAVE ANTENNA - கால் அலைக்கம்பம்
QUARTZ - பளிங்கு
RADAR - கதிரலைக் கும்பா
RADIAN - ஆரகம்
RADIATION PATTERN - கதிர்வீச்சு உருபடிவம்
RADIATOR - கதிர்வீசி
RADIO ACTIVITY - கதிரியக்கம்
RADIO BEACON - வழிக்காணலை - விமானம் வழிகாணலுக்கான தரையமைந்த செலுத்தி எல்லா திசைகளிலும் கதிர்வீசும் வானலை
RADIO BEACON (TRANSMITTER) - வழிகாணலை செலுத்தி
RADIO CHANNEL - வானலைத் அலைவரிசை
RADIUM - கருகன் - உற்பத்தியாகுபோது வெள்ளி நிறமாகவும், காற்றில் பட்டதும் உடனே கருக்கும் கதிரியக்க உலோகம்
RADIUS - ஆரம்
RADON - ஆரகன்
RANDOM VARIABLE - சமவாய்ப்பு மாறி
RATING - செயல்வரம்பு
REACTANCE - எதிர்வினைப்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் எதிர்க்கும் தன்மை; மின்தூண்டியில் jwL மற்றும் மின்தேக்கியில் 1/jwC என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது
REACTIVE COMPONENT - எதிர்வினை உறுப்பு
RECIPROCAL, RECIPROCITY - ஏற்றெதிர், ஏற்றெதிர்மை
RECONFIGURATION - மீள்உள்ளமைவு
RECTIFIER - (மின்)திருத்தி
RECEIVER - பெறுவி
REFLEX KLYSTRON OSCILLATOR - எதிர்வினை மின் கற்றையலைவி/கற்றையலைப்பி
REFRACT - திரிபுறு
REFRACTION - ஒளித்திரிபு
REFRACTIVE INDEX - ஒளித்திரிபுக் கெழு
REFLECTION (LIGHT, IMAGES) - எதிரொளி
REFLECTION (ELECTRIC SIGNALS) - எதிரலை - முடிப்பு மின்தடை மற்றும் மின்செலுத்துத்தடங்களின் சிறப்பு மின்தடையம் பொறுந்தாததால் செலுத்தும் குறிகைக்கு எதிர்திசையில் குறிகைககள் எழும்பப்படுதல்
RELATIVE MOTION - சார்பியக்கம்
RELATIVITY THEORY - சார்பியல் கோட்பாடு
RELAY - அஞ்சல் சுருள்
RESET - மீளமை, மீளமைவு
RESISTANCE - தடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது
RESOLUTION - பிரித்திறண்
RESONANCE - ஒத்திசை
RESONATOR - ஒத்திசைவி
RETRACE - மீள்வரைவு - ஒரு பரவல் காட்சியில் (rastor display) மின்னி கற்றை திரையின் விளிம்பை எட்டியதும் விரைவாக அதன் துவங்கிடத்திற்கு வரைவாக பின் செல்லுதல்; கிடை மீள்வரைவு (horizontal retrace), நெடு மீள்வரைவு (vertical retrace) என வகைப்படுகிறது
REVERSE BIAS - பின்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) குறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை நிறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் தடையம் ஏற்படும்
REVOLUTION - சுற்று
RF (RADIO FREQUENCY) - வானொலி அலை, வானலை
RF ENGINEERING - வானலையியல்
RF FREQUENCY - வானலைவெண்
RF GROUND - வானலை நிலம்
RHEOSTAT - தடைமாற்றி
RHOMBUS - சாய்வுசதுரம்
RIPPLE - குறுவலை - மாறுதிசையை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றும்போது, திகழும் மாறுதிசையோட்டத்தில் தோன்றும் ஏற்றத்தாழ்வுகள்
RISE TIME - எழுநேரம்
RISING EDGE - எழுவிளிம்பு
ROTATION - சுழற்சி
ROTOR - சுற்றகம்
SAMPLE - மாதிரி
SAMPLING - மாதிரி எடுத்தல்
SAMPLING RATE, SAMPLING FREQUENCY - மாதிரி வீதம் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மாதிரியெடுப்பின் எண்ணிக்கை
SAMPLING THEOREM - மாதிரி எடுப்புத் தேற்றம் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் ஒரு குறிகையின் (கருதியலான) இழப்பின்றி மறுமீட்பிற்கு குறைந்தபட்ச மாதிரி வீதம் அக்குறிகையின் அதிக அலைவெண்ணின் இருபடியாவது இருத்தல் வேண்டிய நிபந்தனை
SANDPAPER - மண்காகிதம்
SATURATION - தெவிட்டு நிலை
SATELLITE - செயற்கைக் கோள்
SCANNER - வருடி
SCATTERING PARAMETERS (S-PARAMETERS) - சிதறல் பண்பளவுகள் - ஒரு பலதுறை பிணையத்திற்கு (multi-port network) வழங்கும் அளிப்பு திறனின் எதிரொளிப்பு/பரப்புகை பண்புகளை (reflected/transmission charecteristics of power applied) விவரிக்கும் பண்பளவுகள்; இது அணியாக (matrix) வகைக்குறிக்கப்படுகிறது
SCRAMBLING - கலரீடு
SENSOR - உணரி
SERDES - இயைப்பி
SERIES CONNECTION - தொடர்நிலை இணைப்பு
SERVER - வழங்கி
SET - கணம்
SET TOP BOX - மேலமர்வுப் பெட்டி - மறையிடப்பட்ட வடம் அல்லது செயற்கைக்கோள் குறிகைகளை தொலைக்காட்சியில் பெற இயலும் சாதனம்
SHORT CIRCUIT - குறுக்கு மின்பாதை, குறுக்கிணைப்பு
SHORT CIRCUIT (FAULT, ACCIDENT) - மின்கசிவு
SHOT NOISE - மாது இரைச்சல் - ஒரு முடிவுறு எண்ணிக்கை துகள், எ.டு. கடத்திகளில் மின்னிகள், அல்லது ஒளியின் துளிமங்கள் ஆற்றலை ஏற்றிச்செல்லும்போது ஏற்படும் இரைச்சல்; இது அளவையில் புள்ளியியல் ஏற்றிறக்கங்களை அளிக்கிறது.
SIDE BAND - பக்கப்பட்டை - ஒரு சுமைப்பி குறிகையின் பண்பேற்றத்தால் சுமைப்பியின் அலைவெண்ணிற்கு இருபுறமும் உருவாகும் அலைவெண் பட்டைகள்--இவைகளில் ஒன்று
SIGNAL - குறிகை
SIGNAL INTEGRITY - குறிகை மெய்மை
SILICON - மண்ணியம்
SIMULATION - பாவனை
SIMULATOR - பாவிப்பி
SINGLE PHASE - ஒற்றைத் தறுவாய்
SINGLE SIDE BAND (SSB) MODULATION - ஒருபக்கப்பட்டைப் பண்பேற்றம் - வீச்சுப் பண்பேற்றத்தில் இரண்டில் ஒரு பக்கப்பட்டை நீக்கப்பட்ட வீச்சு பண்பேற்றம்; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது
SINGLE-STUB (IMPEDENCE) MATCHING - ஒருமுளை (மின் மறுப்பு) பொறுத்தம்
SKEW - இடைச்சுணக்கம் - இரு/பல (இணைக்)குறிகைகளுக்கிடையே உள்ள பரப்புகையில் கால வேறுபாடு
SKIN EFFECT - பரிதி விளைவு - உயர் மாறுதிசை அலைவெண்களில், மின்னோட்டம் ஒரு கடத்தியின் மேல்பரப்பில் மட்டும் கட்டுப்படுதல்
SKYSCRAPER - வானளாவி
SKYWAVE - விண்ணலை
SOCKET - பொறுந்துவாய்
SODIUM - உவர்மம்
SOLID ANGLE - திண்மக் கோணம்
SOLDER FLUX - சூட்டிணை மெழுகு
SOLDER IRON - சூட்டிணைக் கோல்
SOLDER LEAD - சூட்டிணை உருகுகம்பி
SONAR - ஊடொலிக் கும்பா
SOUND CARD - ஒலி அட்டை
SOURCE CODE - மூலக் குறியீடு
SPEAKER - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி
SPECTROMETER - நிறமாலைமானி
SPECTRUM ANALYZER - நிறமாலைப் பகுப்பி
SPHERE - கோளம்
SPREAD SPECTRUM - பரவல் நிறமாலை
SPREADSHEET - விரிவுத்தாள்
STABILITY - நிலைப்புத்தன்மை
STABILITY CONDITION - நிலைப்பு நிபந்தனை - ஒரு முறைமையின் நிலைப்பை உறுதிபடுத்த அதன் மாற்றுச்சார்பின் கதிர்களின் (poles) இருப்பிடத்தை (குறிப்பாக s-தளத்தின் வலது பாதியில் அமைவது) நிர்ணயிக்கும் நிபந்தனை
STANDING WAVE - நிலையலை
STANDING WAVE RATIO (SWR) - நிலையலை (மின்னழுத்த) விகிதம்; காண்க VOLTAGE STANDING WAVE RATIO
STATIC ELECTRICITY - நிலைமின்சாரம் - ஒரு மின்காக்கும் பொருளில் சேரக்ரிக்கப்படும் மின்னூட்டம்
STOP BAND - தடைப் பட்டை
STRAIN - திரிபு, விகாரம்
STREAM (OF BITS, DATA ETC.) - தாரை
STRESS - தகைவு
STRIPLINE - கீற்றுத்தடம் - மின்சுற்றுப் பலகைகளில் உள்ளடுக்குகளில் அச்சிடப்பட்ட மின்தடங்கள்
STUB - முளை - ஒரு குறிப்பிட்ட நீளத்திலுள்ள திறந்த அல்லது குறுக்கிணைந்த (short-circuited) பரப்புத் தடம்
SUBSYSTEM - துணைமுறைமை, துணையமைப்பு
SUPERPOSITION THEOREM - மேல்படி தேற்றம் - ஒரு நேரியல் அமைப்பில் பல உள்ளீடுகளின் உடன்பாடாக ஏற்படும் வெளியீடு, அவைகளின் தனித்தனியாக ஏற்படும் வெளியீடுகளின் கூட்டுத்தொகைக்கு சமம்
SUPPLY VOLTAGE - வழங்கல் மின்னழுத்தம்
SURGE - எழுச்சி
SURFACE MOUNT COMPONENT - மேல்பரப்பு உறுப்பு - மின்சுற்றுப் பலகைகளில் மேல்புறத்தில் பிணைக்கப்பட்ட உறுப்பு
SUSCEPTANCE - ஏற்பு - ஒரு மின்தேக்கி அல்லது மின்தூண்டியின் மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மின்தூண்டியில் 1/jwL மற்றும் மின்தேக்கியில் jwC என்கிற மதிப்புகள் கொண்டுள்ளது
SWITCH, SWITCHING - நிலைமாற்றி, நிலைமாற்றம்
SWITCHER, SWITCHING REGULATOR - நிலைமாற்றுச் சீர்ப்படுத்தி
SYNCHRONIZATION - ஒத்தியக்கம்
SYNCH CHARECTER - இசைவு உரு - ஒரு அமைப்பு மற்றொன்றுடன் ஒத்தியங்க செலுத்தப்படும் (இணை அல்லது தொடர்வரிசை) தரவு உருபடிவம் (data pattern)
SYNCHRONOUS - ஒத்தியங்கு
SYNTHESIS - இணைபடுத்தல்
SYNTHESIZER - இணைபடுத்தி
TACHOMETER - சுழற்சிமானி, சுழற்சி அளவி
TANGENT - தொடுகோடு
TANK CIRCUIT - தொட்டிச் சுற்று
TANTALLUM - இஞ்சாயம்
TAPE RECORDER - நாடாப் பதிவி
TARGET (IN A BUS ETC.) - இலக்கு
TELESCOPE - தொலைநோக்கி
TENSION - இழுவிசை
TERMINATE (TRANSMISSION LINES) - முடித்துவிடு - எதிரலைகளை கட்டுப்படுத்த மின்தடையங்களை பரப்புத் தடங்களில் சேர்த்தல்
TERMINATION RESISTOR, TERMINATION RESISTANCE - முடிப்பு மின்தடை, முடிப்பு மின்தடையம் - எதிரலைகள் ஏற்படுதலை தடுக்க மின் தடங்களின் சேர்க்கப்படும் அல்லது தற்செயலாக திகழும் மின்தடையம்
TERRESTRIAL, TERRESTRIALLY - புவிப்பரவு, புவிப்பரவாக
TEST BENCH - சோதனை மேடை
TETRODE - நான்முனையம்
THERMISTOR - வெப்பத்தடையம்
THERMAL NOISE - வெப்ப இரைச்சல் - ஒரு கடத்தியில் மின்னிகளின் துள்ளலால் ஏற்படும் இரைச்சல்
THERMOCOUPLE - வெப்ப இரட்டை
THERMODYNAMICS - வெப்ப இயக்கியல்
THICK FILM - தடிபடலம்
THICK LENS - தடிவில்லை
THIN FILM - மென்படலம்
THIN LENS - மென்வில்லை
THORIUM - இடியம்
THROUGH-HOLE COMPONENT - துளைப்புகு உறுப்பு - மின் சுற்றுப்ப்லகைகளில் துளை வழிமங்கள் (through-hole vias) மூலம் பிணைக்கப்பட்ட உறுப்புக்கள்
THROUGH-HOLE VIA - துளை வழிமம் - ஒரு சுற்றுப்பலகையின் இரு முகங்களையும் எட்டும் வழிமம்
THROUGHPUT - செய்வீதம்
THYRATRON - வளிமும்முனையம்
TIMEBASE - காலவடி
TITANIUM - வெண்வெள்ளி
TONE - தொனி
TOROID(AL COIL) - நங்கூரச்சுருள்
TRANSPONDER - செலுத்துவாங்கி - வானலைக் குறிகையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் பெற்று இன்னொரு நிர்ணயிக்கப்பட்ட அலைவெண்ணில் திரும்ப அக்குறிகையை செலுத்தும் சாதனம்; செயற்கைக்கோள்கள், விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றில் இவை பொறுத்தப்படுகின்றன
TRANSFER FUNCTION - மாற்றச் சார்பு
TRANSFORM - உருமாற்று, உருமாற்றம்
TRANSCEIVER - செலுத்துப்பெறுவி
TRANSIENT - மாறுநிலை
TRANSMISSION LINE - பரப்புத் தடம், செலுத்துத் தடம்
TRANSMITTER - செலுத்தி
TRAVELLING WAVE TUBE (TWT) - இயங்குஅலைக் குழல் - நுண்ணலையை ஏற்படுத்தும் ஒரு சாதனம்
TRIAC (TRIODE FOR AC) - மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (SCR) சமம்
TRIODE - மும்முனையம்
TRIGGER(ING) - குதிரை(யிடல்)
TRIPPLER - மும்மடங்காக்கி
TROPOSHERE - அடிவளிமண்டலம்
TRUTH TABLE - மெய் அட்டவணை
TUNER - இசைப்பி
TUNED - ஒத்தியைந்த, சுரம்கூட்டிய
TUNED AMPLIFIER - இசைப்புறு மிகைப்பி
TUNNEL DIODE - சுரங் இருமுனையம், சுரங்கி
TUNGSTEN - மெல்லிழையம்
TURBINE - சுழலி
TWEETER - மேல்சுர ஒலிபெருக்கி
TWINAX CABLE - ஈரச்சு வடம்
ULTRAVIOLET - புறஊதா
ULTRA HIGH FREQUENCY (UHF) - அதிஉயர் அலைவெண்
ULTRASONIC - கேளாஒலி
ULTRASOUND - ஊடொலி
UNDERFLOW - குறைப்பாய்வு
UNDERSHOOT - கீழ்பாய்வு
UNIFORM QUANTIZATION - சீரானச் சொட்டாக்கம் - உள்ளீட்டுக் குறிகை வீச்சை சீரான படிநிலைகளாக பிரிக்கும் சொட்டாக முறை
URANIUM - அடரியம் - அதிகளவு அடர்த்தியான கதிரியக்க உலோகம்; வெள்ளி நிறமானது
VANADIUM - பழீயம்
VARIANCE - மாறுபாட்டெண்
VECTOR QUANTIZATION - நெறிமச் சொட்டாக்கம் - நெறிமங்களை வகைக்குறிக்கும் சொட்டாக முறை; உள்ளீடு குறிகையை ஒரு நெறிம வெளியை (vector space) சேர்ந்ததாக கருதினால், அதை குறைந்த நெறிமங்களில் தோராயப்படுத்தும் சொட்டாக்க முறை
VELOCITY - திசைவேகம்
VERTICALLY POLARIZED WAVE - செங்குத்து/நெடு முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் நெடுதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை
VESTIGIAL SIDE-BAND MODULATION - எச்சத்தக்கப் பக்கப்பட்டை பண்பேற்றம் - ஒரு வகையான வீச்சு பண்பேற்றம்; இதில் ஒரு பக்கப் பட்டையின் ஒரு பகுதியும் மற்றது முழுமையாகவும் செலுத்தப்படுகிறது; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது
VIA - வழிமம் - ஒரு பன்னடுக்கு மின் சுற்றுப்பலகையில், மின் தடம் ஒரு அடுக்கிலிருந்து மற்ற அடுக்கிற்கு கடப்பதற்கு அமைக்கபடும் சிறுதுளை
VIDEO - ஒளிதோற்றம்
VIDEO RECORDER - ஒளிதோற்றப் பதிவி
VOLTAGE REGULATOR - மின்னழுத்தச் சீர்ப்பி
VOLTAGE STABILIZER - மின்னழுத்த நிலைப்பி
VOLTAGE STANDING WAVE RATIO (VSWR) - நிலையலை (மின்னழுத்த) விகிதம் - எதிரலையின் வலுமையை குறிப்படும் அளவு; இது 1 அருகில் இருப்பதே சிறந்தது; அதிக அளவு என்பது முனைப்படுத்தல் மின்தடையத்தின் பொறுந்தாநிலை; நிலையலையின் அதிகபட்ச-குறந்தபட்ச மின்னழுத்த விகிதம்
WAFER - சீவல்
WAVE FRONT - அலை முகப்பு
WAVE PROPAGATION- அலைப் பரவுதல்
WAVEGUIDE - அலையடை, அலைவழிகாட்டி, அலைவழிபடுத்தி
WAVEFORM - அலைவடிவம், அலைப்படம்
WAYPOINT - பாதைப்புள்ளி - கடல், தரை அல்லது வான வழிக்காட்டலுக்கு மேற்கோள்ளாக பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட புவி இருப்பிடம்; இது உலக இடம் காட்டும் அமைப்பில் (GPS) பயனாகிறது
WEATHER RADAR - வானிலை கதிரலைக் கும்பா
WHITE NOISE - வெண்ணிறைச்சல்
WIRELESS FIDELITY (WI-FI) - கம்பியில்லா மெய்நிலை
WOOFER - அடிச்சுர ஒலிபெருக்கி
WORD (= DOUBLE-BYTE) - ஈரெண்ணெண்
X-RAY - ஊடுக்கதிர்
YOKE - நுகம்
ZERO (OF A TRANSFER FUNCTION) - சுழியம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுபடுக் கோவையின் மூலங்கள்
தொடரும்...
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment