Wednesday, 1 February 2012

நடிகர் அஜித்தின் திரைப்பட வரலாறு



நடிகர் அஜித் குமார் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் நாள் ஹைதராபாத் நகரில் பிறந்தார். இவரின் அண்ணன் பெயர் அனில் தம்பி பெயர் அனுப் குமார். 1986 ஆம் ஆண்டு இவர் ஆசன் மெமோரியல் சீனியர் செகண்டர் பள்ளியிலிருந்து விலகி பகுதி நேர இரு மற்றும் நான்கு சக்கர வாகன மெக்கானிக்காக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் 1990 வரை ஈரோட்டில் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் சிறிது காலம் மாடலிங் வேலையும் செய்தார். ஒரு சமயம் இவர் மோட்டர் சைக்கிள் விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டதால் கால்கள் உணர்விழந்தன. ஆனால் இவர் விடாமுயற்சியுடன் அதிலிருந்து மீண்டு சென்னையிலுள்ள அவரின் வீட்டிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 1996 ஆம் வருடத்தில் அஜித் குமார்-நடிகை ஹீரா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அந்த காதல் 1999 ஆம் வருடத்தின் முற்பகுதியில் முடிவுக்கு வந்தது.

அஜித் குமார் அமர்க்களம் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஷாலினியை 2000 ஆம் வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார். 03-01-2008 அன்று அஜித்-ஷாலினி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அனுஷ்கா என பெயரிட்டுள்ளனர்.

     அஜித் குமார் ஒரு சிறந்த மோட்டார் பந்தய வீரர். அவர் ஜெர்மனி மற்றும் மலேசியாவில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். அவர் பார்முலா 3 கார் பந்தயங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.


அஜித் பெற்ற விருதுகள்:

அஜித் குமார் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.


ரஜினியுடன் அஜித்

சர்ச்சைகள்:
பிப்ரவரி 06 2010 அன்று நிகழ்ந்த கலைஞர் கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.


2011 ம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை சில பல காரணங்களால் கலைத்தார்.



அஜித் நடித்துள்ள படங்கள்:

1. பிரேம புஸ்தகம் - (தெலுங்கு) - 1992 - பவன்
2. அமராவதி - (தமிழ்) - 1993 - ரமேஷ் குமார்
3. பாசமலர்கள் - (தமிழ்) (நட்புக்காக) - 1994 - ரமேஷ் குமார்
4. பவித்ரா - (தமிழ்) - 1994 - நிதின்
5. ராஜாவின் பார்வையிலே - (தமிழ்) (நட்புக்காக) -1995 - மன்மோகன்
6. யுவா ரக்தம் - (தெலுங்கு) (நட்புக்காக) - 1995 - மன்மோகன்
7. ஆசை - (தமிழ்) - 1995 - வசந்த்
8. ஆசா ஆசா ஆசா - (தெலுங்கு) - 1995 - வசந்த்
9. வான்மதி - (தமிழ்) - 1996 - அகத்தியன்
10. கல்லூரி வாசல் - (தமிழ்) - 1996 - பவித்ரன்
11. காலேஜ் கேட் - (தெலுங்கு) - 1996 - பவித்ரன்
12. மைனர் மாப்பிள்ளைகள் - (தமிழ்) (நட்புக்காக) - 1996 - ஏ. மனோகர்
13. காதல் கோட்டை - (தமிழ்) - 1996 - அகத்தியன்
14. நேசம் - (தமிழ்) - 1997 - நாராயண்
15. ராசி - (தமிழ்) - 1997 - முரளியப்பாஸ்
16. உல்லாசம் - (தமிழ்) - 1997 - ஜேடி-ஜெர்ரி
17. உல்லாசம் - (தெலுங்கு) - 1997 - ஜேடி-ஜெர்ரி
18. பகைவன் - (தமிழ்) - 1997 - டி. ராஜசேகர்
19. ரெட்டை ஜடை வயசு - (தமிழ்) - 1997 - சிவக்குமார்
20. காதம் மன்னன் - (தமிழ்) - 1998 - சரண்
21. அவள் வருவாளா - (தமிழ்) - 1998 - ராஜ் கபூர்
22. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - (தமிழ்) (நட்புக்காக)- 1998 - விக்ரமன்
23. உயிரோடு உயிராக - (தமிழ்) - 1998 - சுஷ்மா
24. தொடரும் - (தமிழ்) - 1999 - ரமேஷ் கண்ணா
25. உன்னைத் தேடி - (தமிழ்) - 1999 - சுந்தர் சி
26. பிரேமடோ பிலிசா - (தெலுங்கு) - 1999 - சுந்தர் சி
27. வாலி - (தமிழ்) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
28. வாலி - (தெலுங்கு) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
29. வாலி - (இந்தி) - 1999 - எஸ்.ஜே. சூர்யா
30. ஆனந்த பூங்காற்றே - (தமிழ்) - 1999 - ராஜ் கபூர்
31. நீ வருவாய் என - (தமிழ்) (நட்புக்காக) - 1999 - ராஜகுமாரன்
32. அமர்க்களம் - (தமிழ்) - 1999 - சரண்
33. அத்புதம் - (தெலுங்கு) - 1999 - சரண்
34. முகவரி - (தமிழ்) - 2000 - துரை
35. சிறுநாமா - (தெலுங்கு) - 2000 - துரை
36. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - (தமிழ்) - 2000 - ராஜீவ் மேனன்
37. பிரியுரலு பிலிச்சிண்டி - (தெலுங்கு) - 2000 - ராஜீவ் மேனன்
38. உன்னைக் கொடு என்னைத் தருவேன் - (தமிழ்) - 2000 - கவி காளிதாஸ்
39. தீனா - (தமிழ்) - 2001 - ஏ.ஆர். முருகதாஸ்
40. சிட்டிசன் - (தமிழ்) - 2001 - சரவண சுப்பையா
41. சிட்டிசன் - (தெலுங்கு) - 2001 - சரவண சுப்பையா
42. பூவெல்லாம் உன் வாசம் - (தமிழ்) - 2001 - எழில்
43. அசோகா - (இந்தி)(நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
44. சாம்ராட் அசோகா - (தமிழ்) (நட்புக்காக) - 2001 - சந்தோஷ் சிவன்
45. ரெட் - (தமிழ்) - 2002 - ராம் சத்யா
46. ராஜா - (தமிழ்) - 2002 - எழில்
47. நூவு நாக்கு காவாலி - (தெலுங்கு) - 2002 - எழில்
48. வில்லன் - (தமிழ்) - 2002 - கே.எஸ். ரவிக்குமார்
49. வில்லன் - (தெலுங்கு) - 2002 - டாக்டர் ராஜசேகர்
50. என்னை தாலாட்ட வருவாளா - (தமிழ்) (நட்புக்காக) - 2003 - கே.எஸ். ரவீந்திரன்
51. ஆஞ்சநேயா - (தமிழ்) - 2003 - மகராஜன்
52. ஆச்சார்யம் - (தெலுங்கு) - 2003 - மகராஜன்
53. ஜனா - (தமிழ்) - 2004 - ஷாஜி கைலாஷ்
54. ரௌடி டான் (தெலுங்கு) - 2004 - ஷாஜி கைலாஷ்
55. அட்டகாசம் - (தமிழ்) - 2004 - சரண்
56. ஜீ - (தமிழ்) - 2005 - லிங்குசாமி
57. ஜீ - (தெலுங்கு) - 2005 - லிங்குசாமி
58. பரமசிவன் - (தமிழ்) - 2006 - பி. வாசு
59. பரமசிவம் - (தெலுங்கு) - 2006 - பி. வாசு
60. திருப்பதி - (தமிழ்) - 2006 - பேரரசு
61. திருப்பதி - (தெலுங்கு) - 2006 - பேரரசு
62. வரலாறு - (தமிழ்) - 2006 - கே.எஸ். ரவிக்குமார்
63. ஆழ்வார் - (தமிழ்) - 2007 - செல்லா
64. கிரீடம் - (தமிழ்) - 2007 - விஜய் ஆனந்த்
65. பில்லா - (தமிழ்) - 2008 - விஷ்ணுவர்த்தன்
66. ஏகன் - (தமிழ்) - 2008 - ராஜு சுந்தரம்
67. அசல் - (தமிழ்) - 2010 - சரண்
68. மங்காத்தா (தமிழ்) -வெங்கட் பிரபு
69. பில்லா - 2 - தயாரிப்பில்

நன்றி: பல இணைய தளங்கள்

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: