Sunday, 5 February 2012

போதி தருமன்

போதி தர்மன் வரலாறு

போதி தருமன் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன்.இவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது.


    புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.


குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று

சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

 2.டான்லின் பதிவுகள் (Tánlín)

டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān

டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்

தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது

ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué

யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது.

அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.

கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்

1.நந்திவர்மன் 2.குமாரவிஷ்ணு 3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)

கால ஒற்றுமை


1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.


2001 இல் வெளியிடப்பட்ட ''Bodhidarma's Teaching'' என்ற நூலில் அவரின் பிறப்பு பற்றி இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.


தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட எழுநூறு ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய புகழ் பெற்ற பல்லவ அரச வம்சத்தில் வந்த அரசனான சிம்மவர்மனின் மூன்றாவது மகனாக கி.பி. 440 ஆம் ஆண்டளவில் பிறந்தார்.


சிறுவயதிலேயே புத்த மதத்திற்கு மாறிய அவன் சகல கலைகளிலும் புகழ்பெற்று மன்னனதும் மக்களதும் நன்மதிப்புக்கு உரியவனாக இருந்தான். தந்தைக்கு பிரியமானவனாக இருந்ததால் அவனின் மூத்த சகோதரர்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளானான்... சகோதரர்கள் அரசுரிமை போட்டி காரணத்தினால் இவனை கொல்ல முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வேளையில்தான் அவன் தனது விருப்பம் அரசு அல்லவென்றும் புத்த மதத்தின் மேலுள்ள தனது பற்றினையும் மன்னனுக்கு வெளிப்படுத்தினான். 

     இதனையறிந்த மன்னன் தனது பிரிய மகனுக்காக அப்போது மகத நாட்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய புத்த துறவியான பிரஜ்னதாரா என்பவரை வரவளைத்ததாகவும் கூறப்படுகிறது. இவரே சீனாவில் இன்று மிகவும் புகழ்பெற்று விளங்கும் ஷாவ்ளின் தேவாலயத்தை தாபித்தவர் என சீன வரலாறு சொல்கிறது.. மகாயான புத்த மதத்தின் இருபத்து ஏழாவது மதகுருவான இவரின் பிரதம சீடராக போதிதர்மன் விளங்கினான். இந்தியா மகாயான புத்தமதகுருக்களின் வரிசையில் இருபத்து எட்டாவதும் கடைசியுமான மதகுருவாகவும் போதிதர்மன் மதிக்கப்படுகிறார்.. இவரின் சீன பயணமும் அங்கு இவர் நிகழ்த்திய அற்புதங்களும் சீன வரலாற்றில் மிக முக்கியமானவை.

     ஒருமுறை போதிதர்மன் தனது குருவிடம், அவர் காலமான பின்னர் என்ன செய்யவேண்டும் என வினாவுகையில்.. அதற்கு பிரஜ்னதரா அவரை சீன செல்லுமாறு பணித்ததாக கூறப்படுகிறது. தனது குருவின் இறுதி விருப்பத்தின் பேரில் மூன்றாண்டு காலம் தரை வழியாக பயணம் செய்து சீனாவை அடைந்தார். இவரின் தோற்றம் பற்றிய சீனர்களின் விவரணை சுவாரசியமானது.. அகன்ற சிவந்த கண்களை உடைய காட்டு மிராண்டித்தனமான இந்திய துறவி.... என நீள்கிறது.

     பிற்காலத்தில் சீன ஓவியர்களால் வரையப்பட்ட அவரின் உருவங்கள் கூட இதையே பிரதிபலிக்கின்றன. அடர்ந்த தாடி மீசை வழுக்கையான தலை, மார்பில் உள்ள அடர்த்தியான ரோமங்கள். வெறித்த பார்வை. கருஞ்சிவப்பு நிற அங்கி என ஆஜானுபாகுவான ஒரு திராவிடனின் தோற்றம் தான் கண்ணில் நிற்கின்றது.

     சீனா சென்றதும் அவருக்கு shaolin தேவாலயத்தில் இருந்து உரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அது வரை அவர் தேவாலயத்தின் முன்னே இருந்த ஒரு மலைக்குகையில் தியானத்தில் இருந்ததாக தெரிகிறது. அவர் ஒன்பது ஆண்டுகள் அந்த குகையில் சுவரை நோக்கியவாறு தியானத்தில் அசையாமல் இருந்ததாகவும் அதனால் அந்த குகை சுவரில் அவரின் நிழல் பதிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. [அவரின் நிழல் பதிந்ததாக கூறப்படும் அந்த கல் இன்றும் shaolin தேவாலயத்தினுள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.]. அதன் பின்னரே அவரின் தவ வலிமையை உணர்ந்த shaolin துறவிகள் அவரை அழைத்து தங்களுக்கு தலைமை தாங்கும்படி கேட்டார்கள். 

     மெலிந்த வலுவற்ற உடலமைப்புள்ள துறவிகளை வலுவானவர்களாக்கும் பொருட்டு தான் அறிந்த போர் கலையை உடற்பயிற்சி முறைகளாக அவர்களுக்கு கற்பித்தார். அதுவே இன்றும் உலகமெங்கும் புகழ் பெற்று விளங்கும் ஷாவ்ளின் குங்க்பு எனப்படுகின்ற, அனைத்து விதமான சீன தற்காப்பு கலைகளுக்கும் தாயாக விளங்குகின்ற கலையாகும். மகாயான பௌத்தத்தை தழுவி போதிதர்மரால் உருவாக்கப்பட்ட புதிய மதமே சென் புத்த மதமாகும். இதன் முதலாவது தலைவராகவும் போதிதர்மர் மதிக்கப்படுகிறார். இன்றைய சனத்தொகை கணக்கெடுப்புகளின் படி கிட்டத்தட்ட உலக மக்கள் அரைவாசியினரால் இந்த தமிழன் தெய்வமாக வழிபடப்படுகிறான்.
போதிதர்மன் நிகழ்த்திய அற்புதங்கள்.

     போதிதர்மரை பற்றிய ஆயிரக்கணக்கான நாட்டுப்புறக் கதைகள் இன்றும் சீனாவின் கிராமங்களில் வழக்கில் உள்ளன. சீன வரலாற்றிலும் அவை பதியப்பட்டுள்ளன. தா மோ என சீனர்களாலும் தருமா மாஸ்டர் என ஜப்பநியர்களாலும் அழைக்கப்படுகிற போதிதர்மர் நிகழ்த்தியதாக சீன வரலாறு கூறும் அற்புதங்கள் சிலவற்றை பார்ப்போம்.
யான்ஷி நதியினை கடத்தல்.

ஒருமுறை போதிதர்மர் தனது பயணத்தின் போது இடையில் எதிர்பட்ட ஆசியாவின் நீளமான நதியான யான்ஷி நதியினை ஒரு நாணலின் மீது நின்று சமநிலை செய்து கடந்ததாக கூறப்படுகிறது..''ஹுய் கே'' வினை சீடனாக ஏற்றுக்கொள்ளுதல்.

     ஒரு பனிக்காலத்தின் போது போதிதர்மரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இராணுவ வீரனான ஹுய் கே என்பவன் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி போதிதர்மரை வேண்டியதாகவும் அவர் பதிலேதும் சொல்லாமல் தியானத்தில் இருந்ததால் அவர் தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்வரை ஹுய் கே தேவாலயத்தின் வெளியே பணியில் காத்திருந்ததாகவும், அதன் பின்னரும் போதிதர்மர் கண் திறக்காததால் தான் கையை வெட்டி அவருக்கு சமர்பித்து தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளாவிடில் தனது தலையையும் துண்டிக்கப்போவதாகவும் போதிதர்மரிடம் கூறினான். அதற்கு போதிதர்மர், அந்த தலையினால் ஆக வேண்டியவை நிறைய உள்ளதாக கூறி அவனை தனது பிரதம சீடனாக ஏற்றுக்கொள்கிறார்.

போதிதர்மரின் மரணம்

     போதிதர்மரை தெய்வ நிலைக்கு உயர்த்துவது அவரது மரணத்தின் பின்னரான உயிர்தெழுதல் ஆகும். உரிய காலத்தின் பின் தனது பிரதம சீடனான ஹுய் கே இனை அழைத்த போதிதர்மர் தனக்கு பின்னால் நடக்கவேண்டியவற்றை விளக்கமாக கூறிய பின் சென் புத்த மதத்தின் ஆறாவது மதகுரு தான் கடைசியானவராக இருக்கவேண்டும் என்றும் கூறியபின் மரணமானதாக கூறப்படுகிறது. [அவர் மீது பொறாமை கொண்ட சக மதகுரு ஒருவரால் நஞ்சூட்டப்பட்டு இறந்ததாகவும் இன்னுமொரு வரலாறு கூறுகிறது.] அவரின் உடல் shaolin தேவாலயத்தின் பின் புதைக்கப்பட்டது. ஆனாலும் சிறிது காலத்தின் பின் பாரசீகம் சென்று திரும்பிய சீன அரசனின் அமைச்சர் ஒருவர் அவரை ஒற்றை காலணியோடு இன்றைய திபெத்தில் இருக்கும் பமீர் பீடபூமிப்பகுதியில் கண்டதாக வந்து சொன்னார். தாம் தனது சொந்த நாட்டுக்கு செல்வதாகவும் மற்றைய காலனி பற்றி அவர் தா மோ விடம் கேட்கையில் ''தலை நகர் சென்றதும் அதற்கான பதில் கிடைக்கும்'' என்று சொல்லிவிட்டு சென்றதாகவும் கூறினார்.

 அமைச்சரின் பேச்சினை நம்பத அரசன் அவரை சிறையிலிட்ட பின் போதிதர்மரின் சமாதியை தோண்டும்படி shaolin மதகுருக்களை வேண்டியதாகவும், அப்படி தோண்டியபோது அங்கே போதிதர்மரின் உடல் காணாமற் போயிருந்ததாகவும் அவருடைய ஒற்றை காலனி மட்டுமே அங்கே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின் shaolin மதகுருக்கள் தங்களின் தலைவர் உயிரோடு இருப்பதாக அறிவித்தார்கள் எனவும் நீள்கிறது சீன வரலாறு.

இப்படிப்பட்ட உலகப்புகள் பெற்ற ஒரு தமிழனின் வரலாறு இவளவு காலமாக தமிழகத்தில் மறக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையானது.

உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் 
http://rajasekaranmca.blogspot.com

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: