Thursday, 2 February 2012

ஆண் பெண் ஒப்பீடு

ஆண் பெண் சிறந்தவர்கள் யார்?

நட்சத்த்திரகளில், ஆண் நட்சத்திரங்கள் 8 , பெண் நட்ச்சத்திரங்கள் 16 என உள்ளன .

தமிழ் சொற்களில் கூட ' அ ' முதல் ' ஒள ' வரை உள்ள 12 எழுத்துக்கள் ஆண் எழுத்துக்கள் . மீதமுள்ள 217 எழுத்துக்கள் பெண் எழுத்துக்கள் ஆகும்.

யோகங்களில் கூட சக்திக்குரிய யோகங்கள் எட்டு . சிவனுக்குரிய யோகங்கள் மூன்று . இதில் கூட ஆனான சிவனின் யோகங்களை விட பெண்ணான சக்தியின் யோகன்களே அதிகம் .

உடலில் உள்ள எலும்புகளில் கூட ஆண்களை விட பெண்களுக்கு ஒரு எலும்பு அதிகம் .

நாம் சுவாசிக்கும் பொழுது சூரிய கலையாகிய சிவன்(ஆண்) பகுதியில் 8 அங்குலம் சுவாசம் ஓடும் . ஆனால் சக்தி (பெண்) பகுதியில் 16 அங்குல சுவாசம் ஓடும்.

தத்துவங்கள் 96 ல் உட்கருவின் தத்துவங்கள் 36 கூறுகள், சிவத்தின் கூறுகளாகும். புறக்கருவின் 60 கூறுகள் சக்தியின் கூறுகளாகவும் உள்ளது . இதில் சிவனின் கூறுகளை விட சக்தியின் கூறுகளே அதிகம் .

ஜாதக திருமண பொருத்தம் பார்க்கும் போது கூட பெண்ணின் நட்சத்திரத்தை முதன்மையாக வைத்து தான் ஆணின் நட்சத்திரத்தை பொருத்தம் பார்க்கின்றோம் .

சிவபெருமான் வலது புறம் சிவனாகவும் , இடது புறம் சக்தியாக அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கின்றார் .

கைரேகை பார்த்தால் கூட பெண்ணிற்கு இடது கையையும் , ஆணிற்கு வலது கையையும் பார்ப்பார்கள் .

மருத்துவர்கள் நாடி பார்த்தால் கூட பெண்ணிற்கு இடது கையிலும் ஆணிற்கு வலது கையிலும் பார்ப்பார்கள் .

பாம்புகளில் கூட பெண் பாம்பு கடித்தால் கண்ணில் உள்ள கருப்பு விழி கிழ்நோக்கியும் , ஆண் பாம்பு கடித்தால் கருப்பு விழி மேல்நோக்கியும் இருக்கும்.

பெண்கள் மூக்குத்தி அணிந்தால் கூட இடது மூக்கில் தான் அணிய வேண்டும் . வலது மூக்கில் அணியக் கூடாது . மதுரையில் உள்ள மீனாட்சி அம்மனை பார்த்தால் அம்மன் இடது மூக்கில் தான் மூக்குத்திஅணிந்திருக்கிறார் .

அதே போல் திருமணம் செய்யும் பொழுது கூட தாலி கட்டும் போது பெண்ணை இடது புறம் வைத்து தான் தாலி கட்ட வேண்டும் .வலது புறம் வைத்து தாலி கட்டகூடாது .

தாயின் கருவறையில் கூட பெண் சிசுவே பத்து நாட்கள் அதிகமாக தங்கி வெளிவருகிறது .

பெண்களின் பத்தினி , சித்தினி ,சங்கினி , அத்தினி என்று நான்கு ஜாதியினர் உள்ளனர் .

ஆனால் ஆண்களுக்கு , மான் ,பட்சி , அசுவ என்று முன்று ஜாதியினர் உள்ளார்கள் .

பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும்
http://rajasekaranmca.blogspot.com

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: