அசுர வளர்ச்சி கண்டுள்ள ஃபேஸ்புக் சமூக வலைதளம் பங்குச் சந்தையில் நுழைய முடிவுசெய்துள்ளது.
தனது பங்குகளை விற்பதன் மூலம் இன்னும் 5 பில்லியன் டாலர்களை ஈட்ட முடிவுசெய்துள்ளது. கூகுள் நிறுவனத்திற்குப் பிறகு பங்குச் சந்தையில் நுழையும் இரண்டவாது பெரிய தொழில்நுட்ப நிறுவனம் இதுவாகும்.
ஃபேஸ்புக்கின் மொத்த சொத்து மதிப்பில் சிறிதளவே முதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகின்றது.
அதே சமயம் அதன் பங்குகள் விலை அறிவிக்கப்படவில்லை. சொத்துமதிப்பு 75 முதல் 100 பில்லியன் டாலர் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆண்டு வருமானம் 3.7 பில்லியன் டாலர்கள்.இதில் லாபம் மட்டும் 1 பில்லியன் டாலர் (100 கோடி டாலர்).
8 ஆண்டுகளுக்கு முன் 27 வயது மாணவரால் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக்கை, மாதத்திற்கு 85 கோடி பேர் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment