Monday, 12 March 2012

பறவைகள்(Birds) பற்றிய தகவல்களை சொல்லும் இணையதளம்.

உலகில் இருக்கும் அனைத்து வகையான பறவைகள் பற்றி விரிவாகவும்
ஒவ்வொரு பறவையும் எந்த நாட்டில் வசிக்கின்றது அதற்கான
குணநலன்கள் என்ன, என்பதை துல்லியமாகவும் , பறவையினை
வீடியோவுடனும் பறவையின் சத்தத்தை ஆடியோவுடனும் சேர்த்துக்
கொடுக்க ஒரு பயனுள்ள தளம் உள்ளது. 



உலகில் இருக்கும் பல்வேறு வகையான பறவைகள் பற்றிய
தகவல்களை நம் குழந்தைகளுக்கு வெறும் வார்த்தையால்
சொல்வதைவிட அதைப்பற்றிய வீடியோவையும் ஆடியோவையும்
காட்டி கூறினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணும்
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி: http://www.allaboutbirds.org

ஒவ்வொரு பறவைக்கும் அதன் அழகான புகைப்படமும் இந்தப்பறவை
எந்த நாட்டில் அதிகமாக வசிக்கும் , இதன் குணநலன்கள், இதன்
வடிவம் , சராசரியாக இதன் எடை என்ன என்பதில் இருந்து தொடங்கி
நாம் தேர்ந்தெடுத்த பறவையின் ஆடியோ தனியாகவும் வீடியோவும்
கொடுத்துள்ளனர். உலகில் இருக்கும் லட்சக்கணக்கான பறவைகளைப்
பற்றிய தகவல்களை நாமும் நம் குழந்தைகளும் தெரிந்து கொள்ள
இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: