Friday, 16 March 2012

பிவோட் பாயிண்ட் (Pivot Point)கண்டுபிடிக்க?

நமக்கு தேவையான தகவல்கள் :

முந்தைய நாளின் அதிகபட்ச விலை(High), குறைந்தபட்ச விலை(Low), முடிவுற்ற விலை(Close)  இம்மூன்றும் தான் ....



இப்போது பிவோட் நி(வி)லை, சப்போர்ட் நி(வி)லைகள், ரெசிச்டென்ஷ் நி(வி)லைகள் போன்றவற்றை கீழ்க்கண்ட சூத்திரம் மூலம் கணக்கிட வேண்டும்...

PIVOT  கண்டுபிடிக்க :

பிவோட் வி(நி)லை = ( அதிகபட்ச விலை+ குறைந்தபட்ச விலை+முடிவுற்ற விலை) / 3.

RESISTANCE  கண்டுபிடிக்க  :

ரெசிச்டென்ஷ் 1 = (பிவோட் விலை *2) - குறைந்தபட்ச விலை

ரெசிச்டென்ஷ் 2 = பிவோட் விலை +( அதிகபட்ச விலை - குறைந்தபட்ச விலை )
ரெசிச்டென்ஷ் 3 = அதிகபட்ச விலை+{2*( பிவோட் விலை - குறைந்தபட்ச விலை)}

SUPPORT கண்டுபிடிக்க :

சப்போர்ட் 1 = (பிவோட் விலை *2) - அதிகபட்ச விலை

சப்போர்ட் 2 = பிவோட் விலை - ( அதிகபட்ச விலை - குறைந்தபட்ச விலை )

சப்போர்ட் 3 = குறைந்தபட்ச விலை – {2 * (அதிகபட்ச விலை - பிவோட் விலை )

உதாரணமாக,

STERLITE ன்

அதிகபட்ச விலை (High)= Rs 94

குறைந்தபட்ச விலை (Low)= Rs 90

முடிவுற்ற விலை(Close) = Rs 92 என்று வைத்து கொள்வோம்...

PIVOT:

பிவோட் விலை = (94+90+92) / 3 = Rs 92

RESISTANCE:

ரெசிச்டென்ஷ் 1 = (92 * 2) – 90 = Rs 94

ரெசிச்டென்ஷ் 2 = 92 + (94-90) = Rs 96

ரெசிச்டென்ஷ் 3 = 94 + {2* (92 – 90)} = Rs 98

SUPPORT:

சப்போர்ட் 1 = ( 92 *2 ) – 94 = Rs 90

சப்போர்ட் 2 = 92 – ( 94 -90 ) = Rs 88

சப்போர்ட் 3 = 90 – { 2*( 94 -92 ) } = Rs 86

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: