Wednesday, 14 March 2012

டைட்டானிக் கப்பலை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள

டைட்டானிக் கப்பலின் பாகங்கள் எப்படி சிதைவுற்றது என்பது பற்றிய முழுமையான விபரங்களை வீடியோவுடன் அனைவருக்கும் புரியும்படி சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது.டைட்டானிக் கப்பல் எப்படி எங்கே சென்று என்னவாகி இருக்கும்? என்ற பல கேள்விகளுக்கான பதில் தரும் வகையில் இந்தத் தளம் அமைந்துள்ளது. டைட்டானிக் கப்பல் எப்படி பாதிப்புக்குள்ளாயிருக்கும் என்பதை நமக்கு உயிரோட்டமாக அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்தத் தளம்.

கோடிக்கணக்கான பணத்தை அள்ளி குவித்த டைட்டானிக் படம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் டைட்டானிக் கப்பல் பற்றிய அறிய பல தகவல்களை கற்பனையான தோற்றத்துடன் நம் கண் முன் காட்டுகிறது இந்தத்தளம்.

Expedition titanic என்பது தான் இத்தளத்தின் பெயர். டைட்டானிக் கப்பலின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் உள்ளது. இத்தளம் கப்பலுக்குள் நாம் செல்வது போலவே உருவாக்கப்பட்டுள்ளது.

கப்பலின் உயரம் என்ன என்பது முதல் அதன் அடிப்பாகம் வரை அனைத்தையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றாக சொடுக்கி ஒவ்வொரு பாகத்தைப் பற்றியும் விரிவாக படத்துடனும், வீடியோவுடனும் தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி:

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: