Friday, 30 March 2012

பறவை வளர்ப்பு(Birds)

எந்தெந்த பறவைகளை கூண்டில் வளர்க்கலாம்? 




கிளி, லவ் பேர்ட்ஸ், மைனா, கொண்டை குருவி, கௌதாரி ....,,


 பழக விரும்பாத பறவைகள் 




சில பறவைகள் அபூர்வமாக பறந்து போய் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தப்பிக்க முயற்சி செய்யலாம். அப்படிப்பட்ட பறவைகளைத் தப்பிக்க விட்டு விட வேண்டும். ஏனென்றால், அம்மாதிரி இயல்புடைய பறவைகள் அனைத்தும் ஒவ்வொரு வினாடியும் தப்பிக்கும் எண்ணத்துடனேயே இருக்கும். அதனால் மகிழ்ச்சி ஏற்படுவதற்குப் பதில் துக்கமே நேரும். 


பூனையிடம் பிடிபடாமல் கூண்டை அமைக்க வேண்டும்.


பறவைகளின் இயல்பு



 பொதுவாக பறவைகள் தங்களின் அலகுகளை அடிக்கடி தீட்டிக் கொள்ளும். கூண்டிலே வளர்க்கப்படும் பறவைகளுக்கும் இந்நியதிக்கு விதி விலக்கல்ல.
  எனவே அவற்றுக்கு வசதியாகக் கட்டைஒன்றினை கட்டி வைத்து விட்டால், அக்கட்டையில் தங்கள் அலகைத் தீட்டி கொள்ளும். 

பறவைகளுக்கு நோய் வராமலிருக்க 

பறவைகளின் கூண்டில் அடுப்பு கரித்துண்டு ஒன்றையும், வசம்பு ஒன்றையும் கட்டி வைக்க வேண்டும்.  பறவைகளின் காலிலும் வசம்பு ஒன்றை கட்டி வைக்கலாம்.


எப்போது எடுத்து வளர்க்கலாம்




>>>அவை தன்னுடைய தாயின் வாயிலிருந்து இரையைப் பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் எடுத்து வளர்க்க முயலக் கூடாது.
>>> பறக்கக் கற்று கொள்வதற்கு முன்பே அவற்றை எடுத்து வந்து வளர்த்து விட வேண்டும். 


லவ் பேர்ட்ஸ் வளர்க்க டிப்ஸ் இங்கே http://rajasekaranmca.blogspot.in/2012/02/blog-post_25.html

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



தமிழ் திரைப்படங்களை இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்

தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று புதிய(லேட்டஸ்ட்) ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.

1) Movie Lanka


இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.


2) Tamil Flix


இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது.


3) Padangal



நீங்கள் இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடி தேடி அலுத்து போய் விட்டீர்களா ஆம் என்றால் உங்களுக்கான சிறந்த தளம் இது தான். இந்த தளத்தில் பழைய திரைப்படங்கள் கொட்டி கிடக்கிறது. பழைய பட விரும்பிகள் இந்த தளத்தை பயன் படுத்தி கொள்ளுங்கள்.


4) Tamil Peek

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

5) Tamil tvs.com

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

6)Good Lanka


இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாட்டுக்களை கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உங்களுக்கு தேவையான வீடியோ பாட்டுக்களை இந்த தளத்தில் கேட்டு மகிழலாம்.

7) Tube Kolly

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.

8)TamilVix


இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளமும் இலவசமாக திமில் திரைப்படங்களை காண சிறந்த தளமாகும்.


9) Rajshree


இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



முகவரி அடையாள அட்டை(Identity Card-02)

"முகவரி அடையாள அட்டை' திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட், புதிய காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் போன்றவற்றிற்கு முகவரிக்கான அத்தாட்சி கேட்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. 



இதுபோன்றதேவைகளுக்கு பயன்படுத்த "முகவரி அடையாள அட்டை'திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. மாவட்ட தபால் நிலையத்தில் இதற்கான விண்ணப்பம் ரூ.10க்கு தரப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ. 240 கட்டணம் செலுத்த வேண்டும். 

முகவரி குறித்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். பின்மத்திய அரசு, தபால்துறை முத்திரையுடன் லேமினேசன் செய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லும். 

திண்டுக்கல் தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்,

"அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெற முகவரிக்கான அத்தாட்சி தருவதற்கு பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். தபால் துறையின் முகவரி அடையாள அட்டை இச்சிரமத்தை போக்கும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இந்த அட்டை வழங்கப்படும்,'' என்றார்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 26 March 2012

விக்ரம் திரைப்பட வரலாறு

விக்ரம் வினோத் ராஜுக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ் நாட்டில் உள்ள பரமக்குடியில், 17ம் ஏப்ரல் 1966 அன்று பிறந்தார்.  


சிறு வயதிலே இவர் கென்னெடி என்னும் பெயர் மாற்றம் பெற்று கிறித்தவம் தழுவினர். இவரது தந்தையும் ஒரு நடிகர் ஆவார். விக்ரமுக்கு அனிதா என்கிற தமக்கையும் அர்விந்த் என்கிற அண்ணனும் உள்ளனர்.

விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார்.

 திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் M.B.A படிப்பை இலயோலாக் கல்லோரியில்படித்து முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்தவமனையிலிருந்தார். தன் கால் செயலிழக்காமிலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.


விக்ரம்தமிழ்த் திரைப்பங்களில்பிரதானமாக தோன்றும் ஒரு இந்தியநடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம் பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். மிலான் பல்கலைக்கழகம் மே 2011 அன்று இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இவரது நடிப்புத்திறனால் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றுக் கொண்ட நடிகர் இவர்


விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியானஎன் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவற்றுள் பல திரைப்பட ரசிகர் மத்தியில் பிரபலம் இல்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற வெற்றிமிக்க மசாலா படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் கொண்டார். 

இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். அதன் பின் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது. 

அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகுராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011ம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்து பல பாராட்டுகள் பெற்றார்.

விக்ரம் வெவ்வேறு சமூக நிகைச்சிகளை முன்னேர்த்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவணம் மூலம் பல நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.


நடித்த திரைப்படங்கள்
நடிகராக
ஆண்டு
திரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்புகள்

1990 என் காதல் கண்மணி (தமிழ்)
1991 தந்துவிட்டேன் என்னை ராஜு (தமிழ்)
1992 காவல் கீதம் அசோக் (தமிழ் )
மீரா ஜீவா  (தமிழ்)
1993 துருவம் பத்ரன் (மலையாளம் )
சிருன்னவுலா வரமிஸ்தாவா (தெலுங்கு )
மாபியா ஹரி ஷங்கர் (மலையாளம்)
1994 சைன்யம் கேடட் ஜீஜி (மலையாளம் )
பங்காரு குடும்பம் (தெலுங்கு)
புதிய மன்னர்கள் சத்யமூர்த்தி  (தமிழ்)
1995 ஸ்ட்ரீட் (மலையாளம்)
அடால மஜாக்கா (தெலுங்கு )
1996 மயூர ந்ரிடம் (மலையாளம் )
அக்கா பாகுன்னாவா (தெலுங்கு )
இந்திரப்ரச்தம் பீட்டர் (மலையாளம் )
ராசபுத்திரன் மனு (மலையாளம் )
1997 இது ஒரு சிநேஹகதா ராய் (மலையாளம் )
உல்லாசம் தேவ் (தமிழ்) 
குரல்ல ராஜ்ஜியம் (தெலுங்கு )
1998 கண்களின் வார்த்தைகள்  (தமிழ்)
1999 ஹவுஸ் புள் ஹமீது (தமிழ்) 
சேது சியான் (எ) சேது  (தமிழ்)  வென்றவர்: சிறந்த நடிகர், தமிழ் நாடு மாநில பட விருது (சிறப்பு பரிசு)
2000 ரெட் இந்தியன்ஸ் (மலையாளம்)
2001 இந்த்ரியம் (மலையாளம்)
9 நேலாலு வீரேந்திரா (தெலுங்கு )
யூத் (தெலுங்கு)
விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம்  (தமிழ்)
தில் கனகவேல்  (தமிழ்)
காசி காசி (தமிழ்) வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2002 ஜெமினி  ஜெமினி(தமிழ்)  வென்றவர்: ஐ டி எப் எ சிறந்த நடிகருக்கான விருது
சாமுராய் தியாகராஜன்  (தமிழ்)
கிங் ராஜா சண்முகம்  (தமிழ்) 
2003 தூள் ஆறுமுகம்  (தமிழ்) 
காதல் சடுகுடு சுரேஷ்  (தமிழ்) 
சாமி ஆறுசாமி  (தமிழ்) பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பிதாமகன் சித்தன்  (தமிழ்)  வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது
2004 அருள் அருள்குமரன் (தமிழ் )
2005 அந்நியன் இராமானுசம்
அந்நியன்
ரெமோ (தமிழ்) வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
மஜா அறிவுமதி (தமிழ் )
2008 பீமா சேகர் (தமிழ்) பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2009 கந்தசாமி கந்தசாமி (தமிழ்) பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2010 ராவணன் வீரையா (தமிழ் )
ராவன் தேவ் பிரதாப் சர்மா (ஹிந்தி )
2011 தெய்வத்திருமகள் கிருஷ்ணன் (தமிழ் )
2011 ராஜபாட்டை 'அனல்' முருகன் (தமிழ் )

படப்பிடிப்பில்  

2012 மெரினா தானாகவே (தமிழ்)
2012 கரிகாலன் கரிகால் சோழன் (தமிழ்)
2012 தாண்டவம் சிவா (தமிழ்)
2012 டேவிட் டேவிட் (இந்தி) அறிவிக்கப்பட்டது.

நன்றி:- பல்வேறு இணையதளங்கள்  

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



சிவாஜி கணேசன் திரைப்பட வரலாறு

சிவாஜி கணேசன் (Sivaji Ganesan) (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ்திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம்சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

வாழ்க்கைக் குறிப்பு

'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாகவிழுப்புரத்தில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைப்பட வாழ்க்கை



'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பதுதெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒருமலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

     நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன்போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.



விருதுகளும் கௌரவங்களும்



ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.

நடித்த திரைப்படங்கள்

  1. படையப்பா (1999) .... படையப்பாவின் தந்தை வேடம்
  2. மன்னவரு சின்னவரு (1999)
  3. பூப்பறிக்க வருகிறோம் (1999)
  4. என் ஆசை ராசாவே (1998)
  5. ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
  6. கோபுர தீபம் (1997)
  7. ஒன்ஸ் மோர் (1997)
  8. பசும்பொன் (1995)
  9. பாரம்பரியம் (1993)
  10. சின்ன மருமகள் (1992)
  11. நாங்கள் (1992)
  12. முதல் குரல் (1992)
  13. க்னோக் அவுட் (1992)
  14. தேவர் மகன் (1992) .... பெரிய தேவராக
  15. ஞானப் பறவை (1991)
  16. காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
  17. புதிய வானம் (1988)
  18. என் தமிழ் என் மக்கள் (1988)
  19. அன்புள்ள அப்பா (1987)
  20. வீரபாண்டியன் (1987)
  21. தாம்பத்தியம் (1987)
  22. கிருஷ்ணன் வந்தான் (1987)
  23. குடும்பம் ஒரு கோயில் (1987)
  24. முத்துக்கள் மூன்று (1987)
  25. ராஜ மரியாதை (1987)
  26. ஜல்லிக்கட்டு (1987)
  27. விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
  28. தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
  29. சாதனை (1986)
  30. மண்ணுக்குள் வைரம் (1986)
  31. லக்ஸ்மி வந்தாச்சு (1986)
  32. ஆனந்தக் கண்ணீர் (1986)
  33. விடுதலை (திரைப்படம்) (1986)
  34. மருமகள் (1986)
  35. முதல் மரியாதை(1985) .... மலைச்சாமி வேடம்
  36. படிக்காதவன் (1985)
  37. ராஜ ரிஷி (1985)
  38. பந்தம் (1985)
  39. நீதியின் நிழல் (1985)
  40. படிக்காத பண்ணையார் (1985)
  41. நாம் இருவர் (1985)
  42. நேர்மை (1985)
  43. இரு மேதைகள் (1984)
  44. வாழ்க்கை (1984)
  45. வம்ச விளக்கு (1984)
  46. சரித்திர நாயகன் (1984)
  47. சிரஞ்சீவி (1984)
  48. எழுதாத சட்டங்கள் (1984)
  49. தராசு (1984)
  50. திருப்பம் (1984)
  51. சிம்ம சொப்பனம் (1984)
  52. தாவனிக் கனவுகள் (1983)
  53. உருவங்கள் மாறலாம் (1983)
  54. சுமங்கலி (1983)
  55. சந்திப்பு (1983)
  56. உண்மைகள் (1983)
  57. மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
  58. நீதிபதி (1983)
  59. வெள்ளை ரோஜா (1983)
  60. காஷ்மிர் காதலி (1983)
  61. வசந்தத்தில் ஒரு நாள் (1982)
  62. வா கண்ணா வா (1982)
  63. தியாகி (1982)
  64. துணை (1982)
  65. தீர்ப்பு (1982)
  66. சங்கிலி (1982)
  67. பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
  68. ஊரும் உறவும் (1982)
  69. ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
  70. நெஞ்சங்கள் (1982)
  71. ஹிட்லர் உமாநாத் (1982)
  72. கருடா சௌக்கியமா (1982)
  73. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
  74. கீழ்வானம் சிவக்கும் (1981)
  75. கல் தூண் (1981)
  76. அமரகாவியம் (1981)
  77. சத்ய சுந்தரம் (1981)
  78. ரிஷி மூலம் (1980)
  79. இரத்த பாசம் (1980)
  80. விஷ்வரூபம் (1980)
  81. எமனுக்கு எமன் (1980)
  82. தர்ம ராஜா (1980)
  83. மோகனப் புன்னகை (1980)
  84. மாடி வீட்டு ஏழை (1980)
  85. நான் வாழ வைப்பேன் (1979) .... ரவி வேடம்
  86. வெற்றிக்கு ஒருவன் (1979)
  87. திரிசூலம் (1979)
  88. பட்டாகத்தி பைரவன் (1979)
  89. நல்லதொரு குடும்பம் (1979)
  90. நான் வாழவைப்பேன் (1979)
  91. கவரி மான் (1979)
  92. இமயம் (1979)
  93. வாழ்க்கை அலைகள் (1978)
  94. என்னைப் போல் ஒருவன் (1978)
  95. ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
  96. ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
  97. பைலட் பிரேம்நாத் (1978)
  98. தியாகம் (1978)
  99. புண்ணிய பூமி (1978)
  100. அந்தமான் காதலி (1977)
  101. சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
  102. அண்ணன் ஒரு கோயில் (1977)
  103. தீபம் (1977)
  104. இளைய தலைமுறை (1977)
  105. நாம் பிறந்த மண் (1977)
  106. அவன் ஒரு சரித்திரம் (1976)
  107. உத்தமன் (1976)
  108. உனக்காக நான் (1976)
  109. சத்தியம் (1976)
  110. ரோஜாவின் ராஜா (1976)
  111. கிரகப் பிரவேசம் (1976) 
  112. டாக்டர் சிவா (1975) .... டாக்டர் சிவா வேடம்
  113. அன்பே ஆருயிரே (1975)
  114. அவன் தான் மனிதன் (1975)
  115. தங்கப்பதக்கம் (1974)
  116. அன்பைத்தேடி (1974)
  117. என் மகன் (1974)
  118. தீர்க்க சுமங்கலி (1974)
  119. பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
  120. கௌரவம் (1973)
  121. ராஜபாட் ரங்கதுரை
  122. இராஜராஜசோழன் 1973)
  123. பாரத விலாஸ் 1973)
  124. பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
  125. ஞான ஒளி (1972) .... அந்தொனி வேடம்
  126. வசந்த மாளிகை (1972)
  127. நீதி (1972)
  128. சவாலே சமாளி (1971)
  129. மூன்று தெய்வங்கள் (1971)
  130. சுமதி என் சுந்தரி (1971)
  131. பாபு (1971)
  132. குலமா குணமா (1971)
  133. தங்கைக்காக (1971)
  134. இரு துருவம் (1971)
  135. வியட்னாம் வீடு (1970) .... பத்மநாப ஐயர் வேடம்
  136. விளையாட்டுப் பிள்ளை (1970)
  137. எங்கிருந்தோ வந்தான் (1970)
  138. எங்கள் தங்கம் (1970)
  139. எங்க மாமா (1970)
  140. பாதுகாப்பு (1970)
  141. காவல் தெய்வம் (1969)
  142. தெய்வ மகன் (1969)
  143. சிவந்த மண் (1969)
  144. தங்கச் சுரங்கம் (1969)
  145. குருதட்சனை (1969)
  146. தில்லானா மோகனாம்பாள் (1968) .... சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்
  147. உயர்ந்த மனிதன் (1968)
  148. கௌரி (1968)
  149. எங்க ஊரு ராஜா (1968)
  150. திருமால் பெருமை (1968)
  151. கலாட்டா கல்யாணம் (1968)
  152. என் தம்பி (1968)
  153. இரு மலர்கள் (1967)
  154. கந்தன் கருணை (1967) .... வீரபாகு வேடம்
  155. தங்கை (1967) .... மதன் வேடம்
  156. திருவருட்செல்வர்(1967)
  157. மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) .... சுந்தரம் பிள்ளை
  158. மகாகவி காளிதாஸ் (1966)
  159. செல்வம் (1966)
  160. திருவிளையாடல் (1965) .... சிவனின் அவதாரங்களாக
  161. சாந்தி (1965)
  162. பழனி (1965)
  163. அன்புக்கரங்கள் (1965)
  164. புதிய பறவை (1964)
  165. கை கொடுத்த தெய்வம் (1964)
  166. நவராத்திரி (1964)
  167. ராமதாசு (தெலுங்கு) (1964)
  168. பச்சை விளக்கு (1964)
  169. இருவர் உள்ளம் (1963) .... செல்வம் வேடம்
  170. கர்ணன் (1963) .... கர்ணன் வேடம்
  171. பார் மகளே பார் (1963)
  172. ரத்த திலகம் (1963) .... குமார் வேடம்
  173. அறிவாளி (1963)
  174. குலமகள் ராதை (1963)
  175. குங்குமம் (1963)
  176. அன்னை இல்லம் (1963)
  177. பலே பாண்டியா (1962)
  178. பார்த்தால் பசி தீரும் (1962)
  179. பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
  180. ஆலயமணி (1962)
  181. நிச்சய தாம்பூலம் (1962)
  182. படித்தால் மட்டும் போதுமா (1962)
  183. வடிவுக்கு வளைகாப்பு (1962)
  184. கப்பலோட்டிய தமிழன் (1961) .... வ. உ. சிதம்பரம்பிள்ளை வேடம்
  185. பாலும் பழமும் (1961)
  186. பாப்பா பரிகாரம் (1961)
  187. பாசமலர் (1961) .... ராஜசேகரன் வேடம்
  188. பாவ மன்னிப்பு (1961) .... ரஹிம் வேடம்]
  189. புனர் ஜென்மம் - (1961)
  190. படிக்காத மேதை (1960)
  191. பாவை விளக்கு (1960)
  192. இரும்புத்திரை (1960)
  193. தெய்வப் பிறவி (1960)
  194. பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
  195. மரகதம் (1959) .... வரேந்திரன்
  196. வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) .... கட்டப்பொம்மன் வேடம்
  197. பாகப்பிரிவினை (1959)
  198. தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)
  199. சபாஷ் மீனா (1958)
  200. ஸ்கூல் மாஸ்டர் (1958)
  201. சாரங்கதார (1958)
  202. உத்தமபுத்திரன் (1958)
  203. காத்தவராயன் (1958)
  204. அம்பிகாபதி (1957) .... அம்பிகாபதி வேடம்
  205. மக்களை பெற்ற மகராசி (1957) .... செங்கோடையன்
  206. தங்கமலை இரகசியம் (1957)
  207. வணங்காமுடி (1957)
  208. தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
  209. புதையல் (1957)
  210. பாக்யவதி (1957)
  211. அமரதீபம் (1956) .... அசோல்
  212. பெண்ணின் பெருமை(1956)
  213. ரங்கூன் ராதா (1956) .... தர்மலிங்க முதலியார் வேடம்
  214. தெனாலி இராமன் (1956) .... தெனாலி இராமக்கிருஷ்ணா
  215. கள்வனின் காதலி (1955) .... முத்தையன்
  216. மங்கையர் திலகம் (1955) .... வாசு வேடம்
  217. முதல் தேதி (1955) .... சிவஞானம்
  218. கூண்டுக்கிளி (1954)
  219. அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன் வேடம்)
  220. எதிர்பாராதது (1954) .... சுந்தர் வேடம்
  221. மனோகரா (1954) .... மனோகரா வேடம்
  222. அன்பு (1954)
  223. பூங்கோதை (1954)
  224. பர்தேசி (1953) .... ஆனந்த் வேடம்
  225. பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
  226. பராசக்தி (1952) .... குணசேகரன் வேடம்
நன்றி:- பல்வேறு இணையதளங்கள்  

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



சூர்யா திரைப்பட வரலாறு


சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர்சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ்கார்த்தியின் அண்ணனும் ஆவார்.



மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளைவென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பிசெப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார். இவர்களிற்கு ஓர் பெண்குழந்தை 10 ஏப்ரல் 2007இல் பிறந்தது.


இயற் பெயர்

சரவணன்


பிறப்பு

சூலை 23, 1975(அகவை 36)


தொழில்     நடிகர்


நடிப்புக் காலம்   1997 – முதல்


துணைவர்      ஜோதிகா (2006)


பிள்ளைகள   தியா, தேவ்


ஆண்டு

திரைப்படம்

உடன் நடித்தவர்கள்

இயக்குனர்

பாத்திரத்தின் பெயர்



2011

ஏழாம் அறிவு

சுருதி ஹாசன்

ஏ. ஆர். முருகதாஸ்

போதிதர்மர், அரவிந்த்


2010

ரத்த சரித்திரம்

ப்ரியா மணி

ராம் கோபால் வர்மா

சூரி


2010

சிங்கம்

அனுசுகா செட்டி

ஹரி

துரைசிங்கம்


2009

ஆதவன்

நயன்தாரா

K.S ரவிக்குமார்

மாதவன்/ஆதவன்


அயன்

தமன்னா

K.V ஆனந்த்

தேவா


2008

வாரணம் ஆயிரம்

சமிரா, சிம்ரன், திவ்யா

கௌதம் மேனன்

சூர்யா, கிருஷ்ணன்


2007

வேல்

அசின்

ஹரி

வெற்றிவேல், வாசு


2006

சில்லுனு ஒரு காதல்

ஜோதிகா, பூமிகா சாவ்லா

என். கிருஷ்ணா

கௌதம்


ஜூன் R

ஜோதிகா

ரேவதி எஸ். வர்மா

ராஜா


2005

ஆறு

த்ரிஷா

ஹரி

ஆறு


கஜினி

அசின்

ஏ. ஆர். முருகதாஸ்

சஞ்சய் ராமசாமி


மாயாவி

ஜோதிகா

சிங்கம்புலி

பாலையா


2004

ஆய்த எழுத்து

ஈஷா தியோல்

மணிரத்னம்

மைக்கேல்


பேரழகன்

ஜோதிகா

சசி சங்கர்

சின்னா, கார்த்திக்


2003

பிதாமகன்

லைலா

பாலா

சக்தி


காக்க காக்க

ஜோதிகா

கௌதம் மேனன்

அன்புச்செல்வன்


2002

மௌனம் பேசியதே

த்ரிஷா, லைலா

அமீர்

கௌதம்


ஸ்ரீ

ஸ்ருதி

நரசிம்மன்

ஸ்ரீ


உன்னை நினைத்து

ஸ்னேகா, லைலா

விக்ரமன்

சூர்யா


2001

நந்தா

லைலா

பாலா

நந்தா


பிரெண்ட்ஸ்

விஜயலட்சுமி

சித்திக்

சந்த்ரு


2000

உயிரிலே கலந்தது

ஜோதிகா

K.R ஜெயா

சூர்யா


1999

பூவெல்லாம் கேட்டுப்பார்

ஜோதிகா

வசந்த்

கிருஷ்ணா


பெரியண்ணா

மானஸா

எஸ். ஏ. சந்திரசேகர்

சூர்யா


சந்திப்போமா

ப்ரீதா விஜயகுமார்

ரமேஷ்குமார்

சந்துரு


1998

காதலே நிம்மதி

கவிதா

இந்திரன்

சந்த்ரு


1997

நேருக்கு நேர்

சிம்ரன்

வசந்த்

சூர்யா

படப்பிடிப்பில் 
மாற்றான் 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 25 March 2012

மொபைலின் அனைத்து தகவல்களையும் ஒரே கிளிக்கில் அழிக்க

கைபெசியில் அதிகமான வைரஸ் இருந்தது என்றால் மொபைலில் தகவல்கள் அனைத்தையும் அழித்து விட்டு மீண்டும் பயன் படுத்துவோம் என்றால் வைரஸ் அகன்று விடும் . நம் மொபைலில் அனைத்து தகவல்களையும் முழுவதையும் ஒரே கிளிக்கில் எப்படி அழிக்கலாம் .இது ஒரு தீர்வு உள்ளது .





மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில்அழிப்பதற்கு :


1.உங்கள் கைபேசியை Switch off செய்யுங்கள் .


2. SIM card & memory chip இரண்டையும் தனியே எடுத்து வையுங்கள் .


3. 3 , * , call Button இந்த மூன்று பொத்தான்களையும் விடாமல் அழுத்தி கொண்டிருங்கள் .


4.அதை அழுத்தி கொண்டிருக்கும் போதே power button - ஐ அழுத்துங்கள் .


5.இப்போது எல்லா தகவல்களும் அழிய தொடங்கும் .


படத்தை பார்த்தல் உங்களுக்கு தெளிவாக புரியும் .


உங்கள் தொடர்புகள் (contacts),அலைப்பேசி நினைவகம்(phone memmory). ஆகியவற்றில் உங்களுக்கு பயன்படும் அல்லது முக்கியமான கோப்புகள் இருந்தால் அதை தனியே எடுத்து வைத்து விட்டு இதனை மேற்க்கொள்ளவும் .


நன்றி .... 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



இன்டர்வியூ(Interview)

வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க.

 அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க.

அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க..

1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்?

இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..)

2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?

இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல்லணும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)

3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

அனுபவம்ங்குறது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதா மாறிடுச்சு. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..)

4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?

தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏன்னா கேள்விகள் அதப்பத்தியும் வரக்கூடும்.

5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?

“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொம்ம்ம்ம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நெனைக்கிற மாதிரியான காரணத்தை சொல்லணும்.

6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?

இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)

7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?

இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல்லிட்டு பம்மிடலாம்..)

8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?

இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கீங்கங்குறத காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.. ஜாஆஆஆஆக்கிரதை. (அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தியெல்லாம் ஓப்பனா சொல்லப்படாது..)

9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?

இது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பத்தியும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குறது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளை பண்ணேன், தட்ஸ் ஆல்“னு தெனாவெட்டா பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..)

10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?

வேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதுக்கு நீங்க தயாரா இருக்கிங்களானு முன்னாடியே தீர்மானிச்சு வச்சுக்குறது அவசியம். (கூட வேலைபாக்குற பொண்ணை துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...)

11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலைபார்த்த அனுபவம் இருந்துச்சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்மளோட திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு சமாளிச்ச அனுபவத்த சொல்லி வச்சுடாதீங்க..)

12. தனித்து செயல்பட விருப்பமா? அல்லது குழுவாக செயல்பட விருப்பமா?

இது அவங்கவங்க, தன்மேல வச்சிருக்குற நம்பிக்கையப் பொறுத்து பதிலளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)

13. இங்கு வேலை கிடைக்காதபட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்“னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம்.

14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?

“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எதுவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்லணும். தொடர்ந்து வேலைசெய்ய முன்வரும்பட்சத்துல வாய்ப்புகள் தரப்படலாம்.

15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



மொபைல் இணையதளம்(wap site)

தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை
மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.

இந்த வசதியினை நமக்கு இலவசமாக தருவது WAPKA.MOBI என்னும் ஒரு மொபைல் இணையதளம் .இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு கணக்கைதொடங்கி இதில் MP3 SONGS.VIDEO SONGS ,WALLPAPERS,THEMES,GAMES,APPLICATIONS, TEXT SMS,LINKS,TRIKS,LIVE TV,TAMIL SONGS என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் .

YOUENAME.WAPKA.MOBI YOURNAME என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரில்
உருவாக்கி கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு அந்த தளத்திற்கு சென்று
TERMS & CONDTION ஐ படித்து தெரிந்து கொள்ளவும் .


புதிய மொபைல் இணையதளத்தை தொடங்குவதற்கு REGISTRATION செய்து கொண்டு தொடங்குங்கள் .


http://wap.wapka.mobi/wapka_index.xhtml


மேலும் சில தளங்கள் :

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு

பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள்
காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன.

இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சிலபாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம்.

1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திடஅனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போதுகண்டறிந்து, மைக்ரோசாப்ட்இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை
இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில்இருக்கையில், தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, பதியும் படி அமைக்கவேண்டும்.

2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில்
வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்கவேண்டும்.

3. ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து
வைத்து, தேவைப்படும்போதுஇயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவைகிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்துடன் பாதுகாப்பு தரும் இத்தகையபுரோகிராம்களைத் தருகிறது.

4. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட்தரும் புரோகிராமினைக்காட்டிலும் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

5. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான்ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும்.

6. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா?அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ்கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும்.அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@ virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன்என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ்
சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

7. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள்
மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும்.

8. விண்டோஸ் தன் இயக்கத்தின் போது, பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக்கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்னபுரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன என்று பார்த்து அவற்றின் மேல் ஒருகண் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான புரோகிராம்கள் இருப்பின், உடனேஅவற்றை நிறுத்தினால், சிஸ்டம் இயங்குவதற்கு அது தேவையா எனத் தெரிந்துவிடும்.

9. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில்
அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே மைக்ரோசாப்ட் தளம் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

10. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும்.நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயலவில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

11. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

12. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம்.ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

13. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறியஅளவில் அதனை மாற்றிக் கொள்ளலாம்.

14. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளைகிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.

15. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள்நண்பர்களின்பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

16. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

17. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக்கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனேஅதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான்ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காகஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.

19.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள்உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன் களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக்கூடாது.

20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகி றீர்களா? அந்ததளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ்சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டுஅடையாளம் இருக்க வேண்டும்.

21. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பானஇன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அதுஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.

22.முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால்இப்போது குக்கிகள் நம் வேலையை இன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லைஎன்றால் நம் பெயரையும் தகவல்களை யும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு
படுத்த வேண்டும். இருப்பினும் ஆண்ட்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளைஎடுத்து விடுவதால் அத் தொகுப்பு களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

23. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும்.
இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளன.

24. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம்.அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

25. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை
ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளி யேறுங்கள். அதேபோல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.

26. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைஉறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்திஅனுப்பப்படும் என்று செய்தி வரும்.

     அப்போது தற்காலிக இமெயில் முகவரிதரும் 10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம்பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

27. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்குமட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ்மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக்
கொள்ளலாம்.

28. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டுவந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்துபடித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

29. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர் பேர்ட்
தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும்அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப்பயன்படுத்துகின்றன.

   இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அதுஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த
குறைபாடும் இன்றி உள்ளது.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஷாப்பிங் டிப்ஸ்(Shopping Tips)

ஷாப்பிங் முடிந்தவுடன் உங்கள் ‘பில்’லை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருந்தால் உடனடியாகச் சரி செய்வதுதான் நல்லது.

ஒரு பொருளை வாங்கினால், அது சம்பந்தமான கடிதங்கள், ரசீதுகள்,கியாரண்டி/வாரண்டி கார்டுகள் எல்லாவற்றையும் அந்தப் பொருள் உங்களிடம் இருக்கும் வரை சேமித்து வையுங்கள். பொருட்கள் பழுதடைந்திருந்தால் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு கட்டாயம் பில்கள் தேவைப்படும். 



 கியாரண்டி மற்றும் வாரண்டி என்றால் என்ன என்பதே பலருக்கும் குழப்பமான விஷயம். கியாரண்டி என்றால், ‘குறைபாடுள்ள பொருளை மாற்றித் தருவதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதாக அர்த்தம். இதுவே வாரண்டி என்றால், ‘குறைபாடினை சரிசெய்து கொடுப்போம்’ என்ற உத்தரவாதத்தைத் தருவதாக அர்த்தம்.

 பொருட்களை வாங்கும்போது ‘கியாரண்டி கார்ட்’ பார்க்க வேண்டியது அவசியம். வாங்கிய பொருளை எப்படி இயக்குவது, எப்படிப் பராமரிப்பது போன்ற விஷயங்களைக் கேட்டறியுங்கள்.



 வாங்கிய பொருளில் ஏதேனும் குறை இருந்தால் நீங்களே மெக்கானிக்காக மாறி களத்தில் குதிக்காதீர்கள். கடைக்காரருக்கோ, சர்வீஸ் சென்டருக்கோ தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் பொருளைப் பிரித்தால் அதுதான் சாக்கு என ”ஸாரி… ஓப்பன் பண்ணிட்டீங்க. அதனால கியாரண்டி கிடையாதுங்க” என்று மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

 ‘இப்போது புதிய கைப்பிடியுடன்…’, ‘இப்போது புதிய ஸ்பீக்கருடன்…’இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு வரும் பழைய பொருட்களின் புதிய அவதாரங்களை அதிகமாக ரசித்தால்… பர்ஸூக்குத்தான் ஆபத்து.

 ‘பதினைந்து பொருட்கள் வெறும் 2,000 ரூபாய்க்கு’ என்று கூவும் விளம்பரங்களை கண்டு மயங்காதீர்கள். அத்தனை பொருட்களை அள்ளிக் கொண்டு வந்து, விளம்பரமும் செய்து கொடுக்கிறார் என்றால்… நிச்சயமாக அதைவிட மிகவும் குறைவான விலையில்தான் அவை வாங்கப்பட்டிருக்கும் என்பதுதானே உண்மை!

 ஒரு சேலை வாங்கினால் மூக்குத்தி இலவசம், பிளாஸ்டிக் வாளி இலவசம் என்று விற்பதைக் கொஞ்சம் கழுகுக் கண்களுடன் கவனியுங்கள். பிளாஸ்டிக் வாளியின் அழகைப் பார்த்துவிட்டு, மோசமான சேலையை வாங்கிவிடப் போகிறீர்கள்!

நுகர்வுப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., விவசாயப் பொருட்களுக்கு அக்மார்க்,தங்க நகைகளுக்கு ஹால்மார்க், பட்டுச்சேலைகளுக்கு சில்க் மார்க் என பார்த்து வாங்குங்கள். விலை கூடினாலும் தரம் நன்றாக இருக்கும். சமயங்களில் இந்த முத்திரைகளே போலியான பொருட்களிலும் இடம் பெற்றிருக்கும் உஷார்.

 தேவைகளைக் குறைப்பது, தேவையற்றவற்றை நிராகரிப்பது,பொருட்களை திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ரீசைக்கிள் பண்ணுவது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால்… நீங்கள் தலைசிறந்த கன்ஸ்யூமர்!

 ஃபேன்ஸியாக பாட்டில்களிலோ, அழகிய கவர்களிலோ விலை கூடுதலாக வைத்து விற்கப்படும் பொருட்கள்தான் தரமானவை என்று நினைக்காதீர்கள். உண்மையில் ஆரோக்கியமான பொருட்கள், பகட்டான பேக்கிங் இல்லாமல் குறைந்த விலையிலேயே கிடைத்துவிடும்.

வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்ட பின்பு ஷாப்பிங் கிளம்புங்கள். இல்லையேல் கண்ட கண்ட ஸ்நாக்ஸ், குளிர்பானம்… அது, இது என தேவையற்ற செலவு உங்கள் தோளில் வந்தமரும்.

விளையாட்டா எடுத்துக்காதீங்க!

குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்கும்போது அந்தந்த வயதினருக்கு உரியதையே வாங்குங்கள். ஐந்து வயது குழந்தைக்குரிய பொருள், இரண்டு வயது குழந்தைக்கு ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விளையாட்டுப் பொருளில் காந்தப் பொருட்கள் இல்லாமல் இருப்பதைக் கவனித்து வாங்குங்கள். சிறுசிறு காந்தப் பொருட்களை விழுங்கிவிட்டால் பெரும் ஆபத்து. அதோடு, பிளக் பாயின்ட் போன்ற எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் உள்ள இடங்களுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, அதன் மூலம் ஷாக் ஆபத்துக்கும் வாய்ப்பிருக்கிறது.

பலூன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. சாதுவாக இருக்கும் பலூன், வெடித்துவிட்டால்… மிகவும் ஆபத்தைக் கொண்டு வரும். கண்ணுக்குத் தெரியாத துகள்களாககூட வெடிக்கும் பலூன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இதனால் பல்வேறு உபாதைகள் ஏற்படலாம்.

ஒரு பொம்மையில், சிறுசிறு பாகங்கள் அதிகம் இருக்கிறதென்றால் கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். அந்தப் பொம்மை உடையும்போது,சிறு பாகங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம்.

 ‘குறைவான விலைக்குக் கிடைக்கிறதே’ என்று சீன தயாரிப்பு பொம்மைகளை வாங்க வேண்டாம். தரமற்ற பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் அந்தப் பொம்மைகளை கையில் வைத்திருப்பதே ஆபத்துதான். சமயங்களில் குழந்தைகள் அவற்றைக் கடிக்கும்போது ஆபத்து அதிகரிக்கும்.


‘ஆன்லைன்’ ஷாப்பிங்!

விழாக்காலத் ‘தள்ளுமுள்ளு’களிலிருந்து தப்பித்து ஷாப்பிங் செய்ய எளிய வழி ‘ஆன்லைன் ஷாப்பிங்’. இணையத்தில் உங்களுக்குத் தேவையான பொருட்களின் விலைகளை ஒப்பீடு செய்து உங்களுக்குத் தேவையானவற்றை வீட்டி லிருந்தே ஆர்டர் செய்யலாம். நேரமும் மிச்சம்…அலைச்சலும் மிச்சம்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். கண்ணில் படுவதெல்லாம் வாங்கிக் குவிக்க மாட்டோம். அதனால் பணமும் மிச்சம். போக்குவரத்து செலவும் மிச்சம்.

 என்னென்ன வாங்குகிறோம் எனும் பட்டியல் எப்போதும் நமது ‘கிரெடிட் கார்ட்’ ஹிஸ்டரியில் இருக்கும். ‘பணமெல்லாம் எப்படிப் போச்சுனு தெரியலையே!’ என குழம்ப வேண்டியிருக்காது.

யாருக்காவது விழாக்கால பரிசு கொடுக்க விரும்பினால், ஆன்லைனில் ஆர்டர் செய்து விலாசத்தைக் கொடுத்தால் போதும். அவர்களுடைய வீட்டுக்கே உங்கள் பெயரில் பொருள் சென்று சேர்ந்து விடும். கொடுப்பவருக்கு ஈஸி, வாங்குபவருக்கு சர்ப்ரைஸ்.


இணையத்தில் ஆர்டர் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உண்டு. முக்கியமானது இணைய தளம் நம்பிக்கையானதா, அது செக்யூர்டு சைட்தானா (பாதுகாப்பான தளம்… அதாவது, ‘SSL – Secure Sockets Layer’ என்றால்… பிரவுசரில் கீழ்ப்பாகத்தில் பூட்டு போன்ற படம் வரும்) என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

 இணைய தளத்தில் ‘ரிஜிஸ்டர்’ செய்ய வேண்டி இருந்தால், உங்கள் பாஸ்வேர்ட் ரொம்ப ஸ்டாரங்காக இருக்கட்டும். யாரும் ஊகிக்க முடியாத பாஸ்வேர்ட் முக்கியம். மாமன் பேரு, மச்சான் பேரு, போன் நம்பர், பிறந்த நாள் எல்லாம் உதவாது.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



சேமிப்பு & முதலீடு டிப்ஸ் 100 (Savings&Invesment-100Tips)

தங்கமான சேமிப்பு!


1. காலம் காலமாக பின்பற்றப்படும் சேமிப்பு, தங்கம். அதன் மீதான சேமிப்பு புத்திசாலித்தனமான ஒன்று.

2. டாலர், பவுண்ட் உட்பட எந்தப் பணமானாலும் அதன் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், தங்கத்தின் மதிப்பு மட்டும் எப்போதும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி200 சதவிகிதத்துக்கும் மேல். எனவே, தங்கத்தில் சேமிப்பது எப்போதுமே உத்தரவாதம் மிக்கது.

3. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் போல தங்கம் வாங்குவதில் சட்டச் சிக்கல்கள் இல்லை. நம்பிக்கையான தரத்தில் கிடைத்தால் சட்டென வாங்கிவிடலாம்.


4. ஸ்விஸ் கோல்ட் போன்ற நம்பிக்கையான 24 காரட் தங்கம் வாங்கினால்,அதை எந்த நாட்டுப் பணமாகவும் மாற்றலாம், எந்த நாட்டில் வேண்டுமானாலும் மாற்றலாம்.

5. தங்க முதலீட்டில் நகைகள், நாணயங்கள், தங்கப் பத்திரங்கள் என பல்வேறு வடிவங்கள், வகைகள் உண்டு. வசதி, விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

6. பொதுவாக, தங்கத்தை பிஸ்கட்டாகவோ, நாணயமாகவோ வாங்கிச் சேமிப்பதுதான் ரிஸ்க் இல்லாதது.

7. முழுவதும் நகைகளாக வாங்கி வைப்பது செய்கூலி, சேதாரம் உட்பட பல்வேறு செலவினங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

8. லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கும் தங்கம், நகைகளைப் பாதுகாக்க சில ஆயிரம் செலவு செய்யத் தயங்காதீர்கள். நல்ல நம்பிக்கையான வங்கியின் லாக்கரில் பத்திரப்படுத்துங்கள்.

9. தங்கம் வாங்கும்போது தரத்தை உறுதிபடுத்திக் கொள்வது முக்கியம். அது18 காரட்டாக கூட இருக்கலாம். திரும்ப விற்கும்போதோ அல்லது அடகு வைக்கும்போதோதான் வில்லங்கம் தெரியவரும். ஆபரண நகை என்பது 22காரட் இருந்தால்தான் தரமான தங்கம். எனவே, நம்பிக்கையான நகைக்கடைகளில் வாங்குவதே நல்லது.

10. 'கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டுங்க. ரெண்டு வருஷத்துல அஞ்சு பவுன் உங்க கையில...' என்றெல்லாம் யாராவது சொன்னால் யோசியுங்கள். சொல்லும் கம்பெனியின் தரம், வரலாறு, தற்போதைய நிலை அனைத்தையும் தெரிந்தபின் இறங்குங்கள்.

ரியல் எஸ்டேட் நல்ல தேர்வு!

11. நிலத்தில் போட்ட பணம் நிலைக்கும் என்பார்கள். படிப்படியாக நீண்டகாலத்தில் விலையேறும். அதேசமயம், வேகமாக இறங்க வாய்ப்பில்லை.

12. பக்காவான நிலத்தை வாங்கிப் போடுவதில் உள்ள முக்கியமான நன்மை,அந்த அசையா சொத்தை யாரும் திருடிக்கொண்டு போக முடியாது என்பது. சரியான டாக்குமென்ட், பத்திரம், பட்டா என சர்வமும் இருக்கிறதா என்பதை சரிபார்த்தபின் சந்தோஷமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள். வாங்கிப்போட்ட நிலத்தை யாரும் ஆக்கிரமிக்காமல் இருக்க... அடிக்கடி சென்று பார்த்துக் கொள்வது முக்கியம்.

13. நிலத்தை வாங்கினால் லோன் பெறுதல் போன்றவற்றுக்கு அது கை கொடுக்கும். நிலத்தில் வீடு கட்டிய பின்பு மார்க்கெட் விலைக்கு ஏற்ப மேலும் லோன் எடுக்க முடியும்.

14. வங்கி வட்டி விகிதம், பணவீக்கம் என எல்லாவற்றையும் மீறி வளரும் தன்மை நிலத்துக்கு உண்டு. குறிப்பாக நகர்ப்புறங்கள், அதிக போக்குவரத்து வசதியுடைய இடங்கள் போன்றவை எப்போதுமே 'ஜாக்பாட்' நிலங்கள்தான்.

15. விளைச்சல் நிலங்களில் முதலீடு செய்தால் வருடாந்திர குத்தகை போன்றவற்றின் மூலமும் லாபம் பெறலாம். ரப்பர், முந்திரி, தேயிலை போன்ற தோட்டங்களில் முதலீடு செய்தால் சிறப்பான மாதாந்திர வருமானமும் நிச்சயம்.

16. நிலத்தை நினைத்த நேரத்தில் விற்றுப் பணமாக்க முடியாது என்பது ஒரு சிக்கல். அதுபோல சமூக விரோத சக்திகள், அரசியல் பின்புலத்தில் உள்ள கில்லாடிகளெல்லாம் நம் நிலத்தை வளைத்துப் போட்டு அராஜகம் பண்ண வாய்ப்பு உண்டு. ஒரே நிலத்தை இரண்டு மூன்று பேருக்கு விற்கும் திருட்டுத்தனமும் உண்டு. இவையெல்லாம் உஷாராக இருக்க வேண்டிய சங்கதிகள்.

17. நிலத்தின் வருவாய் நீண்ட காலத்துக்கு உரியது. சரியான நிலத்தை வாங்கினால் காலம் முழுதும் நமக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும்.

18. கையில் பணம் இல்லாவிட்டாலும் வங்கிக் கடன் மூலமாக நிலத்தை வாங்க முடியும். அதேசமயம், வங்கிக் கடன் வாங்கும்போது கவனமாக இருப்பதோடு, தகுந்த ஆலோசனைக்குப் பிறகே வாங்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

ஷேர் மார்க்கெட் பாதுகாப்பானதா?

19. அதிக ரிஸ்க் உடைய ஒரு முதலீடு இது. அதேபோல அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ள இன்வெஸ்ட்மென்ட்டும் கூட! அடிக்கடி வெளியாகும் செய்திகளை வைத்து ஏகப்பட்ட நஷ்டம் போன்று தோன்றும். ஆனால்,விழிப்போடு இருந்தால்... ஷேர் என்பது பெரும்பாலும் லாபகரமானதே! திறமையும் பொறுமையும் இருந்தால் கலக்கலாம்.

20. நல்ல நம்பிக்கையான கம்பெனிகளில் இன்வெஸ்ட் செய்தால் அதிக லாபம் கிடைப்பது உறுதி. அதற்கு நல்ல அலசல் திறமை அவசியம். கம்பெனிகளின் வரவு, செலவு, லாப விவரங்கள் தெரிந்திருப்பது அவசியமானது.

21. போனஸ் ஷேர்ஸ் கிடைப்பது ஷேர் மார்க்கெட்டில் உள்ள ஒரு அட்வான்டேஜ்.

22. வங்கி வட்டியை விட பலமடங்கு அதிக பணம் டிவிடென்ட் மூலம் வருவதற்குரிய வாய்ப்பு உண்டு. மார்க்கெட் நன்றாக இருந்தால் அதிக லாபம் ஈட்டலாம்.

23. ஷேரை எளிதில் பணமாக்கிக் கொள்ளலாம். அதிக அலைச்சலோ,குழப்பமோ, பயமோ இல்லாமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே'ஆன்லைன்' மூலமாகப் பணமாக்கிக் கொள்ளும் வசதி இதில் உண்டு.

24. எந்த கம்பெனி ஷேர் ரிஸ்க்கானது என தோன்றுகிறதோ அதை சட்டென விட்டுவிட்டு வேறொன்றை வாங்குவது வெகு எளிது.

25. ஷேரில் உள்ள மிகப் பெரிய சிக்கல், நம்பகத்தன்மை. இன்று ஒரு லட்சம்... நாளை பத்து லட்சம்... என்று உயரும். அதேசமயம், மறுநாள் பத்தாயிரம்... வெறும் ஜீரோ என்றுகூட ஏற்ற, இறக்கங்கள் இங்கே சர்வசாதாரணம். எனவே, தொடர்ந்து கவனிக்க இயலாதவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஷேர் மார்க்கெட்டை நாடாமல் இருப்பதே நல்லது.

மேலும் பங்குச்சந்தை பற்றி தெரிந்துகொள்ள என் முந்தைய பதிவுகளை காணவும். இங்கு கிளிக் செய்யவும் .


http://rajasekaranmca.blogspot.in/2012/02/z.html 
http://rajasekaranmca.blogspot.in/2012/03/documents.html 

http://rajasekaranmca.blogspot.in/2012/03/blog-post_20.html
http://rajasekaranmca.blogspot.in/2012/03/blog-post_11.html

மியூச்சுவல் ஃபண்ட், மிக நன்மை!

26. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவர்களில் பலருக்கும் தயக்கமும் பயமும் இருக்கும். அவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்ட். இதுவும் ஷேர் சமாசாரம்தான். ஆனால், ரிஸ்க் குறைவான சமாசாரம்.

27. வங்கிக் கணக்கு, பான் கார்டு... இரண்டும் போதும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்-ல் இன்வெஸ்ட் செய்ய. அதேபோல சில நூறு ரூபாய்கள் தொடங்கி,பல லட்சக்கணக்கான ரூபாய்களையும் தாண்டி சேமிக்க இதில் வழி இருக்கிறது.

28. மற்ற முதலீடுகளைப் போலில்லாமல் 'மியூச்சுவல் ஃபண்ட்' என்பது இந்திய அரசின் 'செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்ட்'-ன் கண்காணிப்பில் வருகிறது. அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆடிட் போன்றவைகளுக்கும் கட்டுப்பட வேண்டும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கை தரும் விஷயமாகும்.

29. மியூச்சுவல் ஃபண்ட்டில் போடும் பணம், பல நிறுவனங்கள், பாண்டுகள்,அரசு நிறுவனங்கள் என கலந்து கட்டி முதலீடு செய்யப்படும். அந்த முடிவை நல்ல ஒரு திறமையான நிதி நிபுணர் குழு தீர்மானிக்கும். எனவே, ஒரு கம்பெனி வீழ்ச்சியடைந்தாலும் ஒட்டுமொத்த பணத்தையும் பாதிக்காது.

30. மியூச்சுவல் ஃபண்ட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நம்பிக்கையான பாண்ட், அரசு நிறுவனம் போன்றவற்றில் போட்டு விடுவதால் குறைந்தபட்ச லாபம் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது.

31. ஓபன் எண்ட் (open-End) மற்றும் குளோஸ்டு எண்ட் (Closed-end) என்று இரு வகைகளில் மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. ஓபன் எண்ட் என்பது... எப்போது வேண்டுமானாலும் விற்றுப் பணமாக்கிக் கொள்ளக்கூடியது. குளோஸ்டு எண்ட் என்பது குறிப்பிட்ட கால வரையறைக்குப் பிறகே விற்கக் கூடியது. தேவைக்கு ஏற்றபடி தேவை யானதை தேர்வு செய்வது நல்லது.

32. வருமான வரியை சேமிக்கும் வகையிலான மியூச்சுவல் ஃபண்டுகளும் உண்டு. அவற்றை ஈக்விடி லிங்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) என்பார்கள்.

33. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்ற முறையிலான மியூச்சுவல் ஃபண்ட்களும் உண்டு. மாதந்தோறும் சிறுசிறு தவணையாக முதலீடு செய்யலாம். மாதாந்திர சேமிப்பைக்கூட இப்படி முதலீடு செய்து நல்ல லாபம்
பார்க்கலாம்.

34. மியூச்சுவல் ஃபண்டில் வரும் லாபத்தை, அப்படியே மியூச்சுவல் ஃபண்டில் மறுபடி மறுபடி இன்வெஸ்ட் செய்வது வெகு எளிது. வேறு சிக்கல் இல்லாமல் இந்த முதலீட்டுச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.

35. லாபத்தை மீண்டும் முதலீடு செய்ய விரும்பவில்லை எனில் வீட்டுக்கே'செக்' வர வைக்கலாம். வேறு சிக்கல்களோ, கவலைகளோ,அலைச்சல்களோ இல்லை.

இன்ஷுரன்ஸ் மேல் இஷ்டமா?!

36. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பும் ஒரு முதலீடு,இன்ஷுரன்ஸ்தான். பொதுவாக இன்ஷுரன்ஸ் முதலீடு என்பது மிகக் குறைந்த வருவாய் கொண்டது என்பார்கள். ஆனால், சிறுசேமிப்பு எனும் நோக்கில் பார்த்தால் நிச்சயமாக அது லாபகரமானதுதான். அதுமட்டுமல்ல... நம்முடைய ரிஸ்க்கையும் சேர்த்து அது தாங்குகிறது என்பதுதான் முக்கியம்.

37. இன்ஷுரன்ஸ் போட்டால்... எதிர்காலம் பாதுகாப்பானது என்பதனால் மக்களின் முதல் தேர்வு இதுவாகிறது. கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி... சுமார் 44 சதவிகித மக்கள் இன்ஷுரன்ஸைத்தான் விரும்புகிறார்கள்.

38. முதலீடு எனும் நிலையைத் தாண்டி, விபத்து, மரணம் போன்ற எதிர்பாராத சிக்கல்களுக்குக் கைகொடுக்கும் என்பதுதான் இன்ஷுரன்ஸ் மக்களைக் கவரக் காரணம். மெச்சூரிட்டி அல்லது அசம்பாவித சமயங்களில் பணம் கிடைக்கும்.

39. இன்ஷுரன்ஸில் பலவிதங்கள் உள்ளன. அதில் மணி பேக் பாலிஸியில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு தொகை உங்களுக்கு வழங்கப்படும். மற்றபடி வழக்கமான காப்பீடு வசதியும் உண்டு.

40. ரிட்டயர்மென்ட் இன்ஷுரன்ஸ்கள், இன்னொரு வசீகரத் திட்டம். எதிர்காலத்தின் நிலையைக் கணிக்க முடியாது என்பதால் இது பரவலாக விரும்பப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட பணம் செலுத்தினால்,குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாதம்தோறும் பென்ஷன் போல பணம் வந்து கொண்டிருக்கும். இந்தப் பென்ஷனைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது நாற்பது. பென்ஷன் தொடங்கும் வயதை உங்கள் விருப்பம் போல தேர்வு செய்யலாம்.

41. இன்ஷுரன்ஸ் மூலமாக குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு லோன் எடுத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கிறீர்களோ... அதன் அடிப்படையில் உங்களுக்கு லோன் கிடைக்கும். வங்கிக் கடனைவிட வட்டி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

42. மாதாந்திர சம்பளம் வாங்குவோருக்கு இன்ஷுரன்ஸ் என்பது முதலீடு மட்டுமல்ல. அது வரி சேமிப்பு வழியும்கூட. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல. அதனாலேயே இது அவர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

43. கல்வி, திருமணம், படிப்பு, வீடு என பல்வேறு திட்டங்களுடன் இன்ஷுரன்ஸில் முதலீடு செய்யலாம். எந்தத் திட்டம் சரிவரும் என்பதை மட்டும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

44. குழந்தைகள் பெயரில் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் போடுவதுபோல,இன்ஷுரன்ஸிலும் போடலாம். இது இன்ஷுரன்ஸுக்கு இன்ஷுரன்ஸ்... முதலீட்டுக்கு முதலீடு!

45. நம்முடைய இன்ஷுரன்ஸ் பணத்தை தகிடுதத்தம் மூலம் அபகரிப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பே இல்லை. எனவே, அதிக நம்பகத்தன்மை இந்த முதலீட்டில் உண்டு.

46. இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் இப்போது அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களுடன் களமிறங்கியிருக்கின்றன. அவற்றுள் நல்ல, நம்பிக்கையான இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தேர்ந்தெடுத்துப் பயன்பெறலாம்.

வங்கிகளில் சேமிக்க வாருங்கள்!

47. வங்கியில் சேமிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் பிரசித்தம். சேமிப்பில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அதிகரிக்கலாம்... தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம் போன்றவை இதன் நல்ல அம்சங்கள்.

48. வங்கியில் குறைந்த லாபமே ஆனாலும் நிச்சயமாக அதிக நம்பிக்கை உண்டு. எனவே, வங்கிச் சேமிப்புகளில் பயம் வேண்டாம்.

49. நல்ல நம்பிக்கையான தேசிய வங்கிகள் பாதுகாப்பானவை. அதிலும்கூட,பணத்தை ஒரே வங்கியில் போடாமல், பல வங்கிகளிலும் பிரித்துச் சேமிப்பதால் உங்கள் பணம் அதிக உத்தரவாதத்துடன் இருக்கும்.

50. அதிக வட்டி கிடைக்கும் என்பதற்காக, திடீர் தனியார் வங்கிகளில் முதலீடு செய்யவேண்டாம். பின்னணியை முழுதும் அறியாமல் உங்கள் வியர்வைப் பணத்தை யாரோ ஒருவரின் பாக்கெட்டில் போடாதீர்கள்.

51. சேமிப்புக்கு வங்கியிலேயே பல திட்டங்கள் உள்ளன. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தும் ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட்,முதியோருக்கான சிறப்பு வட்டி திட்டங்கள் என பல உள்ளன. அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து முதலீட்டைத் துவக்கினால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

52. கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இந்தப் பணம் தேவைப்படாது என்பதைத் தெரிந்த பின்பே 'ஃபிக்ஸட் டெபாசிட்' செய்யுங்கள்.

53. காலம் மாறுகிறது. திட்டங்கள், லாபங்கள் எல்லாம் மாறுகின்றன. எனவே, 'ஃபிக்ஸட் டெபாசிட்' போன்றவற்றை பத்து ஆண்டு, இருபது ஆண்டு என நீட்டாமல் இருப்பது நல்லது. ஓரிரு வருடங்கள் என்பது சரியான அணுகுமுறை.

54. ஃபிக்ஸட் டெபாசிட்-ன் விதிமுறைகளை கவனமாகப் படியுங்கள். குறிப்பாக, பணத்தை எடுக்கும்போது ஏதாவது கட்டணம் வசூலிப்பார்களா... குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே திரும்பப் பெற்றால், உங்களுடைய லாபத்தில் எவ்வளவு குறையும் என்பதையெல்லாம் கண்டறியுங்கள்.

55. வங்கிகளில் நீண்டகால சேமிப்புகள் வைக்கும்போது 'வாரிசு' பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். அது சரியாகக் குறிப்பிடப்படவில்லை எனில்,சேமிப்பவருக்கு ஏதேனும் ஆபத்து நேரும்போது, 'வாரிசு' அந்தப் பணத்தை எளிதாக எடுக்க முடியாது. தேவையற்ற அலைச்சல்கள் நேரிட வாய்ப்பு உண்டு.

56. வங்கிகளில் பெரும்பாலும் சர்வீஸ் சார்ஜ், மறைமுகக் கட்டணம் போன்றவை இருப்பதில்லை என்பது வங்கி முதலீட்டின் இன்னொரு சிறப்பு அம்சம். அதேபோல எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் உங்கள் சேமிப்பை நீட்டிக் கொள்ளலாம் என்பதும் இன்னொரு சிறப்பம்சம்.

போஸ்ட் ஆபீஸில் சேமியுங்கள்!

57. கிராமப்புறங்களில் இன்றும் சேமிப்பில் சிறப்பிடம் போஸ்ட் ஆபீஸுக்குத்தான். கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கலாம், எளிதில் போய் சேமிக்கலாம், எல்லா ஊர்களிலும் சேமிக்கலாம் போன்றவையெல்லாம் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகளின் சிறப்பம்சம்.

58. கிஸான் விகாஸ், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் போன்றவை தபால் அலுவலகங்களில் உள்ள பாப்புலர் முதலீடுகள்.

59. கிஸான் விகாஸ் பத்திரங்களில் முதலீடு செய்தால், உங்கள் பணம் எட்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களில் இரட்டிப்பாகும். நூறு முதல் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். இவற்றுக்கு எட்டு சதவிகித வட்டி உண்டு.

60. 'டைம் டெபாசிட்' எனும் ஒரு ஃபிக்ஸட் டிபாசிட் திட்டமும் இங்கு உண்டு. சில நூறு ரூபாய்கள் தொடங்கி, லட்சக்கணக்கிலும் சேமிக்கலாம். ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு என நம் வசதிக்கேற்ப கால நிர்ணயம் வைத்துக் கொள்ளலாம்.

61. மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்பது அதிக வட்டி தரும் தபால் அலுவலக சேவைகளுள் ஒன்று. இதில் ஆயிரம் ரூபாய் தொடங்கி, மூன்று லட்சம் வரை சேமிக்கலாம். எட்டு சதவிகித வட்டி, வரி விலக்கு, ஆறு ஆண்டுகள் சேமித்தால் அதன் பின் பத்து சதவிகித போனஸ் என பல சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு.

62. 'பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்' (பி.பி.எஃப்), தபால் அலுவலகத்தின் சிறப்பு சேமிப்புத் திட்டங்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 முதல் 70,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

63. பி.பி.எஃப்-க்கு வரிச் சலுகை உள்ளது. சேமிப்புக்குத் தக்கபடி தபால் அலுவலகத்திலிருந்து லோன் எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் சலுகை.

64. ஊர் மாறிப் போகிறீர்கள் என்றால், நீங்கள் செல்லும் இடத்தில் உள்ள தபால் அலுவலகத்துக்கு உங்கள் சேமிப்புகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

65. 'மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்டுவது வசதியாக இருக்குமே...' என விரும்புபவர்களுக்கு இருக்கிறது 'ரெக்கரிங் டெபாசிட்'திட்டம். இதில் அறுபது மாதங்கள் தொடர்ந்து பணம் கட்ட வேண்டும்.

66. தபால் நிலைய சேமிப்புகளில் 'வாரிசு' நியமிக்கும் வசதி உண்டு. எப்போது வேண்டுமானாலும் அதை மாற்றிக் கொள்ளலாம்.

67. இந்திய அரசு சார்ந்தது, மிக அதிக பாதுகாப்பானது, நம்பிக்கையானது என்பவையெல்லாம் தபால் அலுவலகங்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கான அரண்.

குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள் சேமிப்பு பழக்கத்தை!

68. குழந்தைகள் முதலில் நாணயத்தின் மதிப்பை அறியும்படி செய்யுங்கள். 10ரூபாயில் மொத்தம் 10 ஒரு ரூபாய் இருக்கிறது போன்ற அடிப்படையான விஷயங்களை தெளிவுபட சொல்லித் தாருங்கள்.

69. கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அவர்கள் கையாலேயே பணம் கொடுக்க சொல்லுங்கள். அப்போதுதான் அந்த பொருட்களின் மதிப்பு புரியும்.

70. அவர்களை கவரக் கூடிய கலர்ஃபுல் உண்டியலை வாங்கிக் கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி, சேமிக்க உற்சாகப்படுத்துங்கள்.

71. தினமும் இரண்டு ரூபாய் அவர்களின் 'பாக்கெட் மணி' என்றால்,கூடுதலாக ஒரு ரூபாய் கொடுத்து தினமும் உண்டியலில் போடச் சொல்லுங்கள்.

72. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்குள் போட்டி போல வைத்து யார் அதிகம் சேமித்திருக்கிறார்களோ... அவர்களுக்கு சின்னச் சின்ன பரிசுகள் கொடுக்கலாம். இதனால் சேமிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும்.

73. மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தேதியில் அவர்கள் சேர்த்த பணத்தை அவர்களையே எண்ணச் சொல்லி, ஒரு நோட்டில் எழுதச் சொல்லுங்கள்.

74. குழந்தைகள் அடிக்கடி கேட்டு அடம்பிடிக்கும் தேவையில்லாத பொருட்களை அந்த சேமிப்பு பணத்தில் இருந்தே வாங்கிக் கொடுங்கள். அப்போதுதான் அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் மீது அவர்களுக்கு மோகம் குறையும்.

75. நீங்கள் போடும் மாத பட்ஜெட்டை குழந்தை களுக்கும் காண்பியுங்கள். அப்போதுதான் அவர்களுக்காக நீங்கள் செய்யும் செலவு அவர்களுக்குப் புரியும்.

கலைப் பொருட்களிலும் சேமிக்கலாம்!

76. கலைப் பொருட்களில் சேமிப்பது என்பது ஒரு தனி ரகம். அதற்கு கொஞ்சம் விஷய ஞானமும், ரிஸ்க் எடுப்பதும் தேவைப்படும். ஆனால்,ஜாக்பாட் அடித்தால் ஒரு சேமிப்பே நமது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடக் கூடும்.

77. கலைப் பொருட்கள் வாங்கும்போது அதன் காலத்தை அறிந்து கொள்ளுங்கள். அந்த கலைப்பொருளுக்குச் சொந்தக்காரர் யார் என தெரிவதும், அது நிரூபிக்கக் கூடியதாக இருக்க வேண்டியதும் மிக முக்கியம்.

78. பெயின்ட்டிங் பொருட்களை வாங்கிச் சேமிப்பாக வைக்கலாம். ஆனால்,அவை ஒரிஜினல் பெயின்ட்டிங்காக இருந்தால்தான் பயனளிக்கும். விலை குறைவான டிஜிட்டல் பிரின்ட்டுகள் பார்க்க ஒரிஜினல் போலவே இருக்கும். மலிவான விலைக்குக்கூட கிடைக்கும். ஆனால், அவை பிற்காலத்தில் விலை போகாது.

79. மிக அதிகமான ஏமாற்றுகள் நடப்பதும் இந்த கலைப் பொருள் விற்பனையில்தான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். குறிப்பாக,இணையம் மூலமாக எந்தக் கலைப்பொருளையும் வாங்காமல் இருப்பது உசிதம். கலைப்பொருட்களை அந்தந்த கலை ஏரியாவில் கில்லாடியான நபர் மூலமாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

வளமான வாழ்க்கைக்கு சேமிப்புதான் ஆக்ஸிஜன்!

80. குழந்தைகளின் எதிர்கால படிப்பு, வீடு வாங்குவது போன்ற தெரிந்த தேவைகள் முதல், உடல் நலம், அவசர பயணம் போன்ற திடீர் தேவைகள் வரை அனைத்துக்குமே சேமிப்பு மிக முக்கியம்.

81. தொடர்ச்சியான சேமிப்புகளில் நிலைத்திருங்கள். உங்களுக்கு நீங்களே தரும் சம்பளமாக அதைக் கணக்கில் வையுங்கள். எல்லா மாதமும் உங்களுக்குச் சம்பளம் கொடுங்கள்.

82. சேமிப்பு சமாசாரங்களுக்கென ஒரு தனி வங்கிக் கணக்கு வைத்திருப்பது நல்லது. நாம் எப்போதும் பயன்படுத்தும் டெபிட் கார்டுடன் இருக்கும் வங்கியிலேயே அந்தப் பணமும் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது.

83. தொழில் தொடங்குவது, கடை ஆரம்பிப்பது என உங்களுடைய தீவிரமான லட்சியங்களுக்கு சேமிப்பு கை கொடுக்கும். அதற்காக குறைந்தபட்சம் 20%சம்பளத்தை ஒதுக்கி வைப்பது பயன் தரும்.

84. ஓய்வு பெற்றபின் வரும் தேவைகளுக்காக சேமியுங்கள். உங்கள் சேமிப்பு உங்கள் முதுமையை தன்னம்பிக்கையுடனும், இயல்பாகவும், மனஉளைச்சல் இல்லாமலும் அனுபவிக்க உதவும். எவ்வளவுதான் அன்பைப் பொழியும் பிள்ளைகள் இருந்தாலும் முதுமைக்காக சேமிக்கத் தவறாதீர்கள்.

85. எதற்காக சேமிக்கிறோம், எவ்வளவு சேமிக்கப் போகிறோம் என்பதை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள். குழப்பமில்லாத தெளிவான திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

86. 'ஒரு மாதம் என்னென்ன செலவு செய்கிறோம், அதில் எவையெல்லாம் தவிர்க்க முடியாதவை, எவையெல்லாம் தவிர்க்கக் கூடியவை...' எனப் பட்டியலிடுங்கள். அதன்படி செலவிடுங்கள்.

87. வீட்டுக் கடன் வட்டி, மின்சார பில், ஸ்கூல் ஃபீஸ் என்று வரும் தவிர்க்க முடியாத செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஹோட்டல், சினிமா,கேளிக்கை போன்ற தவிர்க்கக் கூடியவற்றுக்கு பின்னுரிமை கொடுங்கள்.

88. மிச்சமிருப்பதைச் சேமிப்பது என்று நினைத்தால் சேமிக்கவே முடியாது. சேமித்தபின் மிச்சமிருப்பதை செலவு செய்ய முடிவெடுங்கள். அப்போது சேமிப்பும் நிற்காது... வாழ்க்கையும் முடங்காது.

89. உங்கள் சேமிப்புப் பணத்தை உப்பு சப்பில்லாத காரணங்களுக்கெல்லாம் எடுக்காதீர்கள். தவிர்க்கவே முடியாத இயற்கைச் சீற்றம், மருத்துவத் தேவை போன்றவை தவிர எதற்கும் தொடாதீர்கள்.

90. குடும்பத்தினருக்கு பரிசுகள் கொடுப்பது, அன்பை வெளிப்படுத்துவதையெல்லாம் கொஞ்சம் பயனுள்ள வகையில் செலவிடலாம். சேமிப்புக்கு உதவும் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கிப் பரிசளிக்கலாம்.

பொதுவான எச்சரிக்கைகள்!

91. 'அதிக லாபம்' என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள். அந்த கம்பெனி அதிக வருடங்களாக நம்பகத்தன்மையுடன் இருக்கிறதா, அதற்கு அரசின் அங்கீகாரம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். அந்த கம்பெனி கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டது என்பதையும் அலசுங்கள்.

92. 'உடனே முதலீடு செய்யுங்கள்... இன்றே கடைசி!' என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள். இவையெல்லாம் உங்களை சிந்திக்க விடாமல் திடீரென முடிவெடுக்க வைப்பவை. இவை, பெரும்பாலும் ஏமாற்று வேலைகளாகத்தான் இருக்கும்.

93. மற்றவர்கள் வாங்குகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டாதீர்கள். பெரும்பாலான சிக்கல்களுக்கு இதுதான் காரணம். உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வராவிட்டால் எதிலும் இறங்காதீர்கள்.

94. முதலீடு செய்யும்போது அது தொடர்பான எல்லா ஆவணங்களையும் பாதுகாத்து வையுங்கள். பணம் கட்டிய ரசீது, கடிதங்கள்... அது, இது என அனைத்து சமாசாரங்களையும் பத்திரப்படுத்துங்கள். எதுவும் தேவையில்லை என உதாசீனப்படுத்தாதீர்கள். எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் இல்லாத முதலீடுகள் ஆபத்தானவை. அவற்றில் இறங்க வேண்டாம்.

95. முதலீட்டில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தெரிவியுங்கள். நீங்கள் அனுப்பும் கடிதங்களின் ஒரு காப்பியையும், அதற்கு வரும் பதில்களையும் பாதுகாத்து வையுங்கள்.

96. இணையம் மூலமாக ஏதேனும் இன்வெஸ்ட் செய்கிறீர்கள் என்றால் இரட்டைக் கவனம் தேவை.

97. ஒருவருடைய முதலீட்டு திட்டங்கள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. எனவே, 'கலைவாணி போட்டிருக்கா, நானும் போடறேன்' என ஓடாதீர்கள்.

98. 'கோயில்ல உங்களைப் பார்த்தேன். எனக்கும் வாரத்துக்கு எட்டு நாள் (!) கோயிலுக்கு போகலேனா தலையே வெடிச்சுடும்...' என்றெல்லாம் ஒரு பில்டப் கொடுத்து உங்களிடம் கொஞ்ச நாளாக பழகும் நபர், நைஸாக முதலீட்டுத் திட்டத்தை அவிழ்த்தால், எச்சரிக்கையாக இருங்கள். பகவான் பக்தன் என ஏமாந்து விடாதீர்கள். இது போன்ற எமோஷனல் ஏமாற்றுவேலை இப்போது பெருகிவருகிறது... உஷார்.

99. 'ஆஸ்திரேலியாவில் தேக்குத் தோட்டம். அற்புதமான ஒரு வீடு. அடிக்கடி நீங்கள் போய் தங்கலாம்...' என்றெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் முதலீடுகளை மறுதலிப்பதே புத்திசாலித்தனம்.

100. 'ஒரு செமினாருக்கு வாங்க, சாப்பாடு ஃப்ரீ...' என்றெல்லாம் விளம்பரம் வந்தால் போகாதீர்கள். கோட்டு, சூட்டுடன் பத்து பேர் உங்களைச் சுற்றி உட்கார்ந்து முதலீட்டு விஷயம் பேசுவார்கள். கொஞ்சம் ஏமாந்த சோணகிரிகளைக் கொண்டு அவர்கள் பணத்தைப் பிடுங்குவதே இவர்களின் ஒரே நோக்கம்.

'சிக்கனமே சிறந்த சேமிப்பு!'

சேமிப்போம்... சாதிப்போம்!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



வாடகை வீடு (Rented Home)

வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாராட்டாமல் இருக்க சில விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது அவசியம்!

புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிடம் போய் எதற்காக வீடு கட்டியிருக் கிறீர்கள் என்று கேளுங்கள்... சிலர், ''வசதி வந்துவிட்டது; கட்டிவிட்டேன்'' என்பார்கள். வேறு சிலர், ''சொந்தக்காரர்கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் கட்டிவிட்டேன்'' என்பார்கள். ஆனால், பெரும் பாலானோர் கடனோ உடனோ வாங்கி கஷ்டப்பட்டு சொந்தவீடு கட்டக் காரணம், முன்பு வாடகைக்கு இருந்த போது பழைய ஹவுஸ் ஓனர்கள் படுத்தியபாடுதான்! ஹவுஸ் ஓனர்களின் நச்சரிப்பு தாங்காமல் சொந்த வீடு கட்டிக் கொண்டு தப்பிப் போனவர்கள் தான் ஏராளம்!

ஹவுஸ் ஓனர்கள் கதை இப்படி என்றால், இன்னொரு பக்கம் வாடகைக்கு என உள்ளே புகுந்து, பிற்பாடு வீட்டுக் காரரையே துரத்திவிட்டு ஆட்டையை போட்டுவிடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை! இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட அவசியமில்லாமல், உறவு நீடித்து நிலைத்து நிற்க சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது நல்லது!

இதுகுறித்து சென்னையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான பி.பி. சுரேஷ்பாபுவை சந்தித்துப் பேசினோம்... கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கியமான வற்றை பட்டியல்போட்டுச் சொன்னார் அவர்.

அக்ரிமென்ட் அவசியம்..!

''வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வருபவர் இருவரும் முதலில் ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம். பிற் காலத்தில் ஏதாவது பிரச்னை வரும்போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டார் என்பார்.

வீட்டு உரிமையாளர் அட்வான்ஸே கொடுக்கவில்லை என்பார். யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடும். அதனால், 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு என்பதை எல்லாம் அக்ரிமென்ட் ஆக எழுதிக் கொள்வது அவசியம்.

பொதுவாக, வீட்டு உரிமை யாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதென்ன 11 மாத கணக்கு என்கிறீர்களா? ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பணம் மற்றும் நேரம் செலவாகும் என்பதால்தான் 11 மாதத்துக்கு ஒப்பந்தம் போடப்படுகிறது. மற்றபடி சிலர் நினைப்பதுபோல ஒரு வருடத் துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்துவிட்டால், அது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவு வதாக அமைந்துவிடும் என்பதால் அல்ல! அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண்டாடிவிட முடியாது.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியிருந்தாலும், அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில் வழியே இல்லை!

பதிவுக் கட்டணம் எவ்வளவு?

அக்ரிமென்டில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால் அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப்பந்தம் என்றால் மூன்றாண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான்ஸ், இதர கட்டணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு சுமாராக ஒரு சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத்து, பதினைந்து ஆண்டுகள் வரை போட்டுக் கொள்ளலாம்.

அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும். அதனால், கூடுமான வரை ஆரம்பத்திலேயே தேவையான அனைத்து விஷயங்களையும் அதில் சேர்த்துவிடுவது நல்லது.

அட்வான்ஸ்

''வீட்டுக்கான அட்வான்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வாங்குகிறார்கள். பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தியம்!''

வாடகை!

''வீட்டு வாடகையை பொதுவாக இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ வாடகையை அதிகரிக்க எந்தத் தடையும் இல்லை. புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. வீட்டின் உரிமையாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொள்ளலாம்.

அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லி வீட்டு உரிமையாளரை குடித்தனக்காரர் கேட்கலாம். அதாவது தினசரி தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது குறைக்கச் சொல்லலாம்; கவர்ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினால் வாடகையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அதற்குக் குடித்தனக்காரருக்கு உரிமை உண்டு.

ரசீது அவசியம்!

வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதிவாங்கிக்கொண்டாலே போதுமானது. தேவைப் பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.

வாடகை தர மறுத்தால்..?

'வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அது போன்ற நேரங்களில் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.

வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில் மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.

இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்ப தற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.

காலி செய்ய வைக்க..!

குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்கு முன்னால் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்ற வற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.

அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்ய உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கிய தற்கான ஆதாரத்துடன் தான் வீட்டை காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடி அமர்த்த வேண்டும்.

வீட்டை இடித்துக் கட்டியபிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.

வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பவர் குறைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப் பயன்படுத்தாமல் பூட்டு போட்டு வைத்திருந்தாலும் வீட்டை காலி செய்யச் சொல்லலாம். வீட்டை உள்வாடகைக்கு விடுவது பல நேரங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. இது குறித்தும் ஆரம்பத்திலேயே அக்ரிமென்டில் தெளிவுப் படுத்திக் கொள்வது நல்லது.

வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினால் அல்லது சேதம் ஏற்படுத்தினால் வீட்டின் உரிமையாளர் இழப்பீடு பெற்றுக் கொள்ள வழி இருக்கிறது.

இப்படி வீட்டை வாடகைக்கு விடுகிறவருக்கும் குடித்தனக்காரருக்கும் சட்டப்படி பல உரிமைகள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது தெரியாததால்தான் பல சமயங்களில் மோதல் வந்துவிடுகிறது. இப்போது தெரிந்து விட்டது அல்லவா? இனி சுமூகம்தான்!

நன்றி விகடன்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



மொபைல் போனை(CELL PHONE) பயன்படுத்துவது எப்படி !!


>> ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.

>> தேவையான விசயத்த மட்டும் பேசுங்க… தேவையில்லாத அரட்டையை கொறச்சுக்கங்க. தேவையில்லாத அரட்டையினால மொபைல் பேலன்ஸ் கொறஞ்சும், டைமும் வேஸ்டா போயிரும்.

>> போன் பேசும் போது தேவையிலாத சத்தங்களை கொறச்சு வச்சிருங்க.
டி வி, ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை கொறைங்க. அதனால் எதிர் தரப்பில் பேசுபவர்க்கு தேவையில்லாத தொந்தரவை தவிர்க்கும்.
>> வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் சுவிட்ச் ஆப் போன்ற நிலைகளை தவிர்க்க பாருங்க. இதனால சில முக்கிய கால்கள் பேச முடியாமல் போயிரும்.
சார்… உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம்.

>> தேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கு இம்சை. அதோடு உங்களுக்கு பிரச்சனையும் வர வாய்ப்பு உள்ளது. 

 
>> அடுத்தவங்க மொபைல் போனை தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. அப்படி யூஸ் பண்ற நெலமை வந்துச்சுன்னா அந்த மொபைல் போனை நோன்டாதிங்க. அதுல இருக்கற எஸ் எம் எஸ் பாக்கிறது, பிக்சர்ஸ் பாக்கிறது, போன்ற விசயங்களை தவிர்த்துருங்க.

 >> அப்புறமா கான்பிரன்ஸ் கால் ஒருவருக்கு தெரியாம போடாதிங்க. எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு கான்பிரன்ஸ் போடுங்க. அது உங்களுக்கும் நல்லது எதிர் தரப்புக்கும் நல்லது.

>> ஸ்க்ரீன் சேவர் படங்கள் வச்சிருப்பிங்க. அதுல என்ன வச்சிருக்க கூடாது என்ற விசயத்தில் கவனமா இருங்க. நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும் படி வைக்காதிங்க.

 >> ஆபீஸ் லீவு, இறப்பு அறிவிப்பு, விபத்து போன்ற சில விசயங்களை எஸ் எம் எஸ் மூலமா அனுப்பாதிங்க. கால் பண்ணி பேசிருங்க. அது தான் நல்லது.

>> ஆபீசில் உங்கள் மேல் அதிகாரிக்கு தெரிவிக்கும் அன்றாட விசயங்களை தினமும் போன் செய்து இன்பார்ம் செய்யாமல் அவர் அனுமதி வாங்கி எஸ் எம் எஸ் அனுப்பிருங்க. அவரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் தொந்தரவு இல்லாம சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிரலாம். 

>> ஆபீஸ்ல உங்க மொபைல் பில்லை கட்டினாலும் நீங்க வரைமுறை தாண்டாம அளவா யூஸ் பண்ணுங்க. தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. கரெக்டா யூஸ் பண்ணினா உங்களை பத்தி ஆபீசுல நல்ல நேம் கிடைக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்