Friday, 23 November 2012

கணித பெருக்கல்களை சரி பார்க்க

கணித பெருக்கல்களை சரி பார்க்க சுலபமான வழி


How do you verify your multiplication? Here is a simple method.
Always reduce computations to a single digit.

43
x 92
------
3956

Add 4 + 3 = 7
Add 9 + 2 = 11 then reduce to a single digit 1 +1 = 2
Multiply 2 x 7 = 14 then reduce to a single digit 1 + 4 = 5
Add 3+9+5+6 = 23 then reduce to a single digit 2 + 3 = 5
Both numbers (5) are equal, therefore multiplication is correct.

Another example

358
x 492
-------
176136

Add 3 + 5 + 8 = 16 then reduce to a single digit 1 + 6 = 7
Add 4 + 9 + 2 = 15 then reduce to a single digit 1 + 5 = 6
Multiply 7 x 6 = 42 then reduce to a single digit 4 + 2 = 6
Add 1+7+6+1+3+6 = 24 then reduce to a single digit 2 + 4 = 6
Both numbers (6) are equal, therefore multiplication is correct.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Maths Birthday Tips

Find a calculator or a pencil and paper.
Ask your friend or eveyone to write down their birthday.
Example : September 28, 1986

Ask your friend (or everyone in the room) to write down the number of the monthhe/she/they were born.
Example : 9 (born in September)

Multiply the month by 4
9 x 4 = 36

Add 13
36 + 13 = 49

Multiply by 25
49 x 25 = 1225

Subtract 200
1225 - 200 = 1025

Add the day of the month he/she/they were born
1025 + 28 = 1053

Multiply by 2
1053 x 2 = 2106

Subtract 40
2106 - 40 = 2066

Multiply by 50
2066 x 50 = 103300

Add the last two digits of your year of birth (1986)
103300 + 86 = 103386

Ask your friend to give you their result
103386

Now you can magically tell them their birth date.
Here's how to do it:

Subtract 10500 from their result
103386 - 10500 = 92886

9 = month of September
28 = day of birth
86 = year of birth

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 2 November 2012

AIRTEL- இலவச Missed Call Alert

AIRTELவழங்கும் இலவச Missed Call Alert சேவை ஆக்டிவேட் செய்ய


பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற நிறுவனங்களோடு உள்ள போட்டியை சமாளிக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் ஏதாவது வசதிகளை வாசகர்களுக்கு வழங்கி கொண்டே இருக்கும். இப்பொழுது வாசகர்களுக்கு இலவசமாக Missed Call Alert(MCA) வசதியை வழங்குகிறது.

MCA(Missed Call Alert) என்றால் என்ன:
உங்கள் மொபைல் Switch Off செய்யப்பட்டு இருக்கும் பொழுதும், சிக்னல் கிடைக்காத சமயத்திலும் யாரவது உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தால் எந்த நம்பரில் இருந்து எத்தனை மணிக்கு தொடர்பு கொண்டார்கள் என்ற விவரம் உங்களுக்கு SMS ஆக வரும்.

இலவச சலுகையை பெற:
இந்த வசதியை இலவசமாக பெற உங்கள் ஏர்டெல் மொபைலில் கீழே உள்ள ஏதாவது ஒரு எண்ணை அழையுங்கள்.

*321*880#
*321*881#
*321*882#
*321*884#
*321*885#

உங்கள் மொபைலில் கீழே இருப்பதை போல செய்தி வந்திருக்கும் வரவில்லை எனில் வேறு எண்ணை அழையுங்கள்.

Reply with 1 to subscribe MCA @ Rs.0 for 30 days and never miss your calls

இப்பொழுது Reply அழுத்தி 1 கொடுத்து SMS அனுப்பினால் இலவசமாக MCA வசதி ஆக்டிவேட் ஆகிவிடும்.

இந்த வசதி வேண்டாம் என்றால் *321*883# கொடுத்து இந்த வசதியை செயலிழக்க செய்து விடுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Thursday, 13 September 2012

சிபில் ரிப்போர்ட்

சிபில் ரிப்போர்ட் பார்ப்பது எப்படி ?

சிபில் வெப்சைட் ல CIR Reqest Form னு ஒன்னு இருக்குதுங்க, அத பிரிண்ட் அவுட் எடுத்து அதுல உங்கள பத்தின விவரம் எல்லாம் எழுதணும், அப்புறம் உங்க ID PROOF ( PAN CARD / PASS PORT / VOTER ID ) ஒண்ணும், 
ADDRESS PROOF (BANK STATEMENT / EB BILL / TELEPHONE BILL ) ஜெராக்ஸ் எடுத்து அதுல உங்க கையெழுத்த போட்டுடுங்க, கூடவே ஒரு 154 ரூபாய்க்கு டிடி Credit Information Bureau (India) Limited, payable at Mumbai கற பேர்ல எடுங்க, இது  நாலையும்  ஒன்னா பின் அடிச்சு, 

தபால்ல இல்ல ஸ்பீடு போஸ்ட்ல அனுப்பனும்னா 

Credit Information Bureau (India) Limited, 
P.O. Box 17, Millennium Business Park, Navi Mumbai- 400 710.
இந்த முகவரிக்கு அனுப்புங்க, 

இல்ல கூரியர்லயோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட்லயோ அனுப்புனம்னா

Consumer Relations, Credit Information Bureau (India) Limited, 
Hoechst House, 6th Floor, 193, Backbay Reclamation, Nariman Point, Mumbai 400 021. 

இந்த முகவரிக்கு அனுப்புங்க,

CIR FORM PDF (இந்த PDF பைல பயன்படுத்திக்கோங்க)
இந்த CIR Request Form அ ஆன்லைன்ல கூட பில்லப் பண்ணலாம், டிடிக்கு பதிலா நெட் பேங்கிங் வசதி மூலமாவும் பணம் செலுத்தலாம், ஆனா அதுக்கப்புறம் அத பிரிண்ட் அவுட் எடுத்து மேல சொன்ன மாதிரி போஸ்ட் பண்ணித்தான் ஆகணும். 

கடைபிடிக்க வேண்டியவை :

வாடிக்கையாளரின் கடன்பாக்கி, கிரெடிட் கார்டு, செக் போன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்து மார்க் போடுகிறது. 300 மார்க்கில் இருந்து 900 வரை போடுகிறது. 300 மார்க் வாங்கியிருந்தால், அந்த வாடிக்கையாளருக்கு லோன் கண்டிப்பாக கிடைக்காது. 900 வரை வாங்கியிருந்தால் லோன் கிடைக்காமல் இருக்காது.

900 மார்க் வாங்கினால்...

�சிபில்� ஏஜன்சி முழுக்க முழுக்க �நெட்� வழியாக தகவல்களை வங்கிகளுடன் பரிமாறிக்கொள்ளும். ஒரு வாடிக்கையாளருக்கு கடன் வழங்க வேண்டுமானால், சிபில் ரிப்போர்ட்டை உடனே வங்கி பார்க்கும்.

நீங்கள் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் கீழ்கண்டவற்றை பின்பற்றுங்கள்:
  1. எந்த ஒரு தவணை, கட்டணம் ஆகியவற்றை 10 ம் தேதிக்குள் கட்டி விடுங்கள்.
  2. கிரெடிட் கார்டு தவணை, வட்டியை குறித்த காலஅவகாசத்துக்கு முன்பே செலுத்தி விடுங்கள்.
  3. எந்த ஒரு வங்கி கணக்கையும் அப்படியே விட்டு விடாதீர்கள். வேண்டாம் என்றால் முறைப்படி கடிதம் தந்து அதை ரத்து செய்யுங்கள்.
  4. செக் பவுன்ஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  5. 50 ஆயிரத்துக்கு மேல் தரும் பண பரிமாற்றங்களுக்கு செக் பயன்படுத்துங்கள்.இப்படி செய்தால் நீங்கள் கிரெடிட் ரேட்டிங்கில் உயர்ந்து விடுவீர்கள். அப்புறம் லோன் உங்களை தேடி வரும்.
What is the CIR?
CIBIL CREDIT REPORT 

What is the CIBIL TransUnion Score?

The CIBIL TransUnion Score is a 3 digit numeric summary of your credit history which indicates your financial & credit health. The Score is derived from your credit history as detailed in the Credit Information Report [CIR] and ranges from 300 to 900 points. Your credit score tells the lender how likely you are to pay back loan or credit card dues based on your past repayment behavior. The higher your score, the more the chance of your loan application getting approved!

Did you know, 90% of new loans sanctioned are to individuals with a credit score of 700 and higher!


Your CIBIL CIR is provided to you along with your score, because it is the basis on which your credit score is generated. It's a record of your credit history. i.e past loans or credit cards availed from various loan providers.

நன்றி:-  இணையம் 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 20 August 2012

Android Application-களை கணினியில் Download செய்ய ?

Android Mobile - கள் வைத்துள்ள நிறைய பேர் பெரும்பாலான Application-களை Google Play-வில் இருந்து டவுன்லோட் செய்வார்கள். நீங்கள் கணினியில் இருந்து இன்ஸ்டால் செய்தாலும் உங்கள் மொபைலில் இணைய இணைப்பு கிடைக்கும் போது அவை டவுன்லோட் ஆகும். சிலர் விலை குறைந்த Android Tablet/Mobile களை வாங்கி இருந்தால் Google Play-யில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியாது. இந்த நிலையில் அவற்றை கணினியில் தரவிறக்கம் செய்தால் நாம் எளிதாக அவற்றை இன்ஸ்டால் செய்யலாம். எப்படி அதை கணினியில் Download செய்வது என்று பார்ப்போம். 

1.முதலில் இந்த இணைப்பில் சென்று Real APK Leecher என்ற Application- ஐ உங்கள் கணினியில் டவுன்லோட் செய்யுங்கள். [கணினியில் இயங்கக் கூடியது]

2. இதை Extract செய்து "Real APK Leecher" -ஐ Run செய்யுங்கள். உங்கள் கணினியில் Java Install ஆகி இருந்தால் நேரடியாக Run ஆகும். இல்லை என்றால் அது டவுன்லோட் ஆகும். இப்போது கீழ் வரும் விண்டோ வரும். 



உங்களால் Google Play-யில் இருந்து டவுன்லோட் செய்ய முடியாவிட்டால் இதில் உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைய முடியாது. யாரேனும் உங்கள் நண்பரின் கணக்கை தான் இதற்கு பயன்படுத்த வேண்டும். Email, Password தெரியும் Device ID என்பதற்கு அடுத்த ஸ்டெப்பில் உள்ளதை செய்யவும். 
3.இப்போது உங்கள் அலைபேசியில் அல்லது நண்பரின் அலைபேசியில் *#*#8255#*#* என்ற எண்ணுக்கு Call செய்யவும். இதில் Gtalk Service Monitor என்ற ஒன்று வரும். [வரவில்லை என்றால் இணைய இணைப்பை Enable செய்து Gtalk-இல் Sign-in செய்து விட்டு செய்யவும்]

4. இதில் கீழே உள்ளது போல Device ID என்று ஒன்று வரும். 


5. இதனை உங்கள் மேலே உள்ள Device ID - யில் தர வேண்டும். 
6.அடுத்து எங்கே Save ஆக வேண்டும் என்பதை தெரிவு செய்து விட்டு Save கொடுங்கள். கீழே உள்ளது போன்ற விண்டோ வரும். 



7. இதில் வலது பக்கம் உள்ள சர்ச் வசதி மூலம் Application-களை தேடலாம்.கீழே அவை வரும். அவற்றின் மீது Right Click செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


8. "Download This App" என்பது Disable ஆகி இருந்தால், குறிப்பிட்ட App மீது Double Click செய்யுங்கள். அந்த App உள்ள வரிசை Blue Background க்கு மாறும். இப்போது Right Click செய்து டவுன்லோட் செய்யலாம். 

இதில் இலவச மென்பொருட்களை மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். கட்டண App-களை டவுன்லோட் செய்ய முடியாது. 
                                                                               
                                                                                                               - பிரபு கிருஷ்ணா
நன்றி :- கற்போம்  

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 6 July 2012

கள்ள நோட்டை அடையாளம் காண ?

கள்ள நோட்டை அடையாளம் காண்பது எப்படி? 


தரம்: 
பருத்தியிலிருந்து எடுக்க ப்பட்ட தனிச் சிறப்பான காகிதம் கொண்டு தயாரிக்கப்படும் பண த்தை எண்ணும்போது படபட வென சத்தம் உண் டாகும்.

வரிசை எண்:
பணத்தின் வரி சை எண் புற ஊதா விளக்கொ ளியில் ஒளிரும் வண்ணம் ஜொலிக்கும் மையினால் அச்ச டிக்கப்பட்டிருக்கும். எண்களுக் கு இடையே உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். எண்கள் சிவ ப்பு நிறத்தில் தடிமனாக இருக்கும். ஆயிரம் ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல்பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தில் சிவப்பு நிறத்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு இழை: 
மகாத்மா காந்தி படத்திற்கு இடப்புறம் இருக்கும் பாது காப்பு இழை வெளியில் பாதி தெரிந்தும், உள்ளே மறைந்தும் இருக்கும். வெளிச்சத்தில் பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். இதில் பாரத் என்று இந்தியிலும், ஆர்.பி.ஐ. என்று ஆங்கில த்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.


நிறம் மாறும் மை: 
ஐநூறு, ஆயி ரம் ரூபாய் நோட்டுக்களில் நடு வில் அச்சிடப்பட்டிருக்கும் மதிப் பு இலக்க எண்கள் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கு ம். சாய்த்துப் பார்த்தால் பச்சை நீல நிறமாக மாறிமாறித்தெரியு ம்.


நீர்க் குறியீடு: 
ரூபாய் நோட்டின் இடப்புறம் உள்ள வெள்ளைப் பகு தியில் மகாத்மா காந்தியின் உருவம் ஸ்லைடு போல தெரியும்”.

என்னதான் தீர்வு?
மொத்தமாகப் பணத்தை வாங்கும் போது வங்கி முத்திரையிடப்பட்ட நோட்டுக் கட்டுகளை மட்டுமே வாங்கலாம்.கள்ள நோட்டுகளை கண்டு பிடிக்க உதவும் புற ஊதா கருவியை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஐநூறு ரூபாய் விலை யில்கூட இந்த கருவி கிடைக்கிறது.

ஒருவர் வழக்கத்துக்கு மாறாக அதிக செலவு செய்கிறார் எனில் அவ ரிடம் எச்சரிக்கையாகவும், அவரது நடவடிக்கையில் கண்காணிப்பு டனும் இருப்பது அவசியம். எச்சரிக்கையோடு இருந்தால் கள்ள நோட்டை உங்கள் கைகளுக்கு வராமல் தடுக்கலாமே!

- விகடன்




































நன்றி : இணைய தளங்கள்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஆன்லைனில் ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய

ஒரு பொருளை வாங்க வேண்டும் கடை கடையாய் ஏறி இறங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது, பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாய் ஏறி இறங்கி சிரமப்பட வேண்டாம். இருந்த இடத்திலிருந்து ஆன்-லைன் மூலம் குறைந்த விலையில் ஷாப்பிங் செய்யும் வசதியை பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வழங்குகின்றன.


இதோ, ஷாப்பிங் செய்வதற்கான டாப்-10 இணையதளங்களின் லிஸ்ட் மற்றும் விபரங்கள்…

இபே.இன்என்ற வலைதளம் இந்தியாவில் அதிக மக்களால் ஆன்-லைன் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஜெம்ஸ்டோன், ஜுவல்லரி, எல்க்ட்ரானிக் சாதனங்கள், மேகஸைன்கள், விளையாட்டு பொருட்கள் என்று ஏகப்பட்ட விஷயங்களை ஆன்-லைன் ஷாப்பிங் வாங்கி குவிக்கலாம். ஆன்-லைன் ஷாப்பிங் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகின்ற இன்னொரு வலைதளம்பேஷன்அண்டுயூ.காம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் உருவாக்கப்படும் எந்த விதமான தரமான பொருட்களையும் இந்த வலைத்தளத்தின் மூலம் எளிதாக வாங்கலாம்.

ஃபிலிப்கார்ட்.காம்அனைவருக்கும் பரிட்சயமான ஒரு வலைதளம் தான். இதில் புத்தகங்கள், மொபைல் அக்சஸரீஸ் போன்ற ஏகப்பட்ட பொருட்களை இருந்த இடத்தில் இருந்தே அழகாக வாங்கலாம். அப்படி ஆடர் செய்த பொருட்களுக்கு நெட் பேங்கிங், க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இது போல் ஆடர் செய்யும் பொருட்கள் 3 அல்லது 4 நாட்களுக்குள் கிடைக்கும்.

மைகிரஹாக்.காம் ,
 ஃபியூச்சர்பஸார்.காம் 
ஹோம்ஷாப்18.காம்
மைன்ட்ரா.காம்,
ஸ்னாப்டீல்.காம்
லெட்ஸ்பை.காம் 
மைடாலா.காம் என்ற வலைதளங்களின் மூலமும் சிறந்த ஆன்-லைன் ஷாப்பிங் சேவையை பெறலாம்.

உலகம் போகிற வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது. இது போன்ற வலைதளங்கள் நவீன வசதிகளை வாசலில் குவிக்க காத்திருக்கிறது. உலகமே ஸ்மார்ட்டாக மாறும் பொழுது நாமும் ஸ்மார்ட்டாக வேண்டும் என்பது இன்றைய வாழ்வில் எழுதப்படாத இலக்கணம் தான். இதற்கு துணை புரிய பல வெப் சைட்கள் காத்திருக்கிறது.

நன்றி : இணைய தளங்கள் 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 25 June 2012

உயரமான குடும்பம்

இந்தியாவின் உயரமான குடும்பம்

உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர் பூனே ஐ சேர்ந்த இந்தியாவின் குடும்ப அங்கத்தவர்கள்.

குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 இஞ்ச், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்களான12 வயதாகும் ம்ருகா (6 அடி 1 இஞ்ச்), 16 வயதாகும் ஷன்யா (6 அடி 4 இஞ்ச்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள்.



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



சேகுவேரா: புரட்சி நாயகன்!

சேகுவேரா: புரட்சி நாயகன்!



சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்ஸியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடம் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடி போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சேகுவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9-1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது .

பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.

தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.

இளமைக்காலம்

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய ,பாஸ்க்கு,ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ்,போல்க்னா,கைடே,சல்காரி,வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா,காமுஸ்,லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ்,வெல்ஸ்,புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்

எழுத்தாளர்களானகுயிரோகா,அலெக்ரியா,இக்காசா,டாரியோஆஸ்ட்டுரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவன்ஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா,பெரு,ஈக்குவிடார்,பனாமா,கொஸ்தாரிக்கா,நிக்கரக்குவா,ஹொண்டுராஸ், சல்வடோ ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ்குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.

குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன.

இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்….

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பணம் சேமிக்கும் வழிகள்

பணம் சேமிக்கும் வழிகள்

1. ஒவ்வொரு மாதமும், உங்கள் வரவு மற்றும் செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள்.
2. ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்க்கு முன்பு, அது உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராய்வது மிகவும் அவசியும். நீங்கள் வாங்கும் பொருள் ஆடம்பரத்திற்க்காக இருந்தால், அதை வாங்குவதை தவிர்க்கவும்.
3. ஒவ்வொரு பொருளையும் பேரம் பேசி வாங்குகள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முன்பு அதன் விலையை 2 அல்லது 3 கடைகளில் பேரம் பேசி வாங்குவது நல்லது.
4. உணவு விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்கள் பணத்தை கரைப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடலுக்கு பல உபாதைகளை விளைவிக்கும்.
5. வங்கிகளில் கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். கடன் ஆரம்பத்தில் உங்களது தேவைகளை புர்த்தி செய்தாலும், அது போக போக உங்களுக்கு வட்டி என்ற நீண்ட கால சுமையை தரும்.
6. நீங்கள் உபயோகிக்கும் பொருள் பழுதடைந்து விட்டால், புதிய பொருளை வாங்குவதற்க்கு பதிலாக, அதே பழைய பொருளை பழுது பார்த்து உபயோகிக்கலாம்.
7. நீங்கள் குடி பழக்கம் உள்ளவரா அல்லது புகை பிடிப்பவராக இருந்தால், குடி மற்றும் புகை பழக்கத்தை குறைத்துக்கொள்வது அல்லது முற்றிலுமாக நிறுத்திக்கொள்வது நல்லது.
8. இரவு நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை தேவைபட்டால் மட்டும் உபயோகிக்கலாம். உதாரணமாக யாரும் இல்லாத அறைகளில் எரியும் விளக்குகளை அணைப்பது வீட்டிற்க்கும்/நாட்டிற்க்கும் நல்லது.
9. குண்டு மின்சார விளக்குகளுக்கு பதிலாக U–வடிவ CFL (CompactFluorescent Light) மின்சார விளக்குகளை உபயோகிகளாம். இவைகள் 40%-லிருந்து 60%-வரை மின்சாரத்தை சேமிக்கும்.
10. சத்துள்ள உணவுகளை மூன்று வேலைக்கு சாப்பிட்டு, காலையிலும், மாலையிலும் உடற்பயிர்ச்சி செய்துவந்தால் உங்களுக்கு எந்தவித நோயும் அண்டாது. இது மருத்துவத்துக்காக செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தும்.
11. உங்கள் வீட்டு மளிகை சாமான்களை மாதத்திற்க்கு ஒரு முறை வாங்கி வைப்பது நல்லது. நீங்கள் மளிகை சாமான்களை Wholesaleகடைகளில் வாங்குவது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். இருந்தபோதிலும் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்ந்து வாங்குவது நல்லது.
12. சில மளிகை சாமான்கள் சில Offer-டன் வரும். அது போன்ற சாமான்களின் தரத்தை ஆராய்ந்து வாங்குவது நல்லது.
13. நீங்கள் தொலைபேசிகளை உபயோகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தொலைபேசியில் ஒவ்வொரு முறை பேசுவதற்க்கு முன்பு, நீங்கள் அடுத்தவருக்கு என்ன தெரியபடுத்த விறும்பிகிறீர்கள் அல்லது நீங்கள் என்ன அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விறும்பிகிறீர்கள் என்பதை அராய்ந்து அதன்பின் பேசுவது நல்லது.
14. Post-paid-ஐ விட Pre-paid plan சிறந்தது. ஏனென்றால், PrePaid-ல் நீங்கள் உங்களது தொலைபேசி இறுப்பு தொகையை ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது உங்கள் பேசும் நேரத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கும்.
15. நீங்கள் செல்லும் இடம் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தால் வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து செல்வது உங்கள் பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல் உங்களது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிர்ச்சியாக இருக்கும்.
16. நீங்கள் தனியாக ஒரு இடத்திற்க்கு சில வேலை காரணமாக செல்வதாக இருந்தால் 2 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் 4 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம்.
17. உங்கள் வீட்டு மின்சாரம் மற்றும் தண்ணி கட்டனங்களை கடைசி தேதிக்குள் கட்டுவது நல்லது. மேலும் அவைகளை online-ல் கட்டுவது உங்கள் வாகன எரி பொருளை சேமிக்கும்.
18. உங்கள் வீட்டில் பயன்படுத்த படாத பழைய பொருட்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நல்ல உபயோகமான பொருட்களை வாங்களாம்.
19. நிறைய துணிகள் மிக குறைந்த விலையில் நல்ல தரத்துடன் கிடைக்கும் போது, நீங்கள் ஏன் Branded துணிகளை வாங்க வேண்டும்? எதுக்கெடுத்தாலும் Branded துணிகளையே வாங்காதிர்கள்.
20. உணவை ஒருபோதும் வீணாக்காதிர்கள். இது உங்களுக்கு நல்ல சேமிப்பை ஈட்டி தருவது மட்டுமில்லாமல், வீணாக்கபடாத அந்த உணவு ஏழை மக்களுக்கு மறைமுகமாக போய் சேரும் புன்னியத்தை அடைவீர்கள்.
21.கண்களுக்கு தென்படும் எல்லா பொருட்களையும் வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். கடைக்கு சென்றாலும் தேவையான பொருட்களை மட்டும் கொள்வனவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
22.வருமானத்துக்கு மீறிய செலவுகள் செய்ய பழகிக்கொள்ள வேண்டாம். கடன் வாங்கி நாளாந்த செலவுகளை மேற்கொள்ள வேண்டாம். கடனட்டை (Credit Card) என்றாலும் அவசியமான நேரங்களில் மட்டும் பாவிப்பது சிறந்தது. கடனட்டைக்கான மாதாந்த கட்டணங்களை வட்டி சேர்வதற்கு முன் செலுத்துங்கள்.
23.மாதாந்த மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்ற கட்டணங்களை முடியுமான அளவு குறைத்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 17 June 2012

அதிசய மனிதர்


39 பெண்களை மணந்து 160 பேருடன் ஒரே வீட்டில் வசிக்கும் அதிசய மனிதர் 

மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.


முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.

நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.

காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.

வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 15 June 2012

வங்கிகளில் பணம் அனுப்ப

ஒரே வங்கியின் இரு வேறு கிளைகளில் இருந்து பணம் அனுப்பவது எளிதான விஷயம், ஆனால், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்ப,

1) ஆர்டிஜிஎஸ் (RTGS)

2) என்இஎப்டி நம்பர் (NEFT)



ஆர்டிஜிஎஸ் என்பது Real Time Gross Settlement.
என்இஎப்டி என்றால் National Electronic Funds Transfer.

ஆர்டிஜிஎஸ் என்பது நீங்கள் பணத்தை அடுத்தவரின் கணக்குக்கு அனுப்பியவுடனே அது அவரது கணக்குக்கு உடனடியாகப் போய்விடும். என்இஎப்டியில் பணப் பரிமாற்றம் நடக்க 1 மணி நேரத்துக்கு மேலாகும்.
குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்தைத் தான் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்ப முடியும். ஆனால், என்இஎப்டி மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஆனால், என்இஎப்டி மூலம் அனுப்பினால் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும் தான் பணம் அனுப்ப முடியும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு 9 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். 

சனிக்கிழமைகளில் 5 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். நீங்கள் 9 மணிக்கு பணத்தை போட்டால் அது 10 மணிக்குத் தான் அடுத்தவர் கணக்குக்குப் போகும். 10 மணிக்குப் போட்டால் 11 மணிக்குத் தான் போகும். அதாவது 1 மணிக்கு ஒருமுறை தான் பண டிரான்ஸ்பர் நடக்கும்.
ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பினால் உடனடியாக பணம் போய்ச் சேர்ந்துவிடும்.

கட்டணம் எவ்வளவு?:

என்இஎப்டி  மூலம் 

ரூ. 1 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 5 பிளஸ் சேவை வரி.
ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 15 பிளஸ் சேவை வரி.
ரூ. 2 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 25 பிளஸ் சேவை வரி


ஆர்டிஜிஎஸ் மூலம் 

 ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைஅனுப்ப கட்டணம் ரூ. 30 கட்டணம்
ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 55 ஆகும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Thursday, 24 May 2012

முக்கிய இணைய தளங்கள் -2



1. www.downloadsquad.com : இந்த தளம் சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.


2. www.gmailtips.com : கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன. இதனை நடத்துபவர் இன்னொரு தளத்தையும் நடத்துகிறார். அதன் முகவரி www.jimsltips.com . இதில் இமெயில் தகவல்களுடன் மொபைல் குறித்த தகவல்கள் மற்றும் டிப்ஸ்கள் உள்ளன.


3. www.thegreenbutton.com : விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன்குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.



4. www.stopbadware.org : இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.

5. www.techcrunch.com : இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.


6. www.techdirt.com தொழில் நுட்ப உலகின் தில்லுமுல்லுகள் மற்றும் முக்கிய செய்திகள், ஆய்வு முடிவுகள் ஆகியவை குறித்து சுருக்கமான தகவல்களைத் தருகிறது.



சில வேடிக்கையான துணுக்கு செய்திகளும் உண்டு. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த செய்திகளையும் தகவல்களையும் அனுப்பலாம்.


7. www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.


8.www.ilounge.com இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன.


9. www.photonhead. com டிஜிட்டல் கேமரா வாங்கிவிட்டீர்களா? அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் உங்களைக் குழப்புகிறதா? உடனே இந்த தளத்திற்குச் செல்லுங்கள். இங்கு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. எனவே அப்படி எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.


10. www.crazymeds.org : மனநிலை குறையுடையவர்களுக்கான தளம் இது. இங்கு இவ்வகையில் மருந்து உட்கொள்பவர்கள், சிகிச்சை எடுப்பவர்கள் தங்களது அனுபவத்தினைத் தருகின்றனர். சும்மா தகவலுக்காக இதனைப் பார்க்கலாம்.


11.www.goaskalice.com அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.


12. www.quotedb.com சிலர் எப்போது பேசினாலும் இது அவர் சொன்னது இவர் சொன்னது என்று பிரபலங்கள் கூறியதைச் சொல்வார்கள். சிலர் பொதுமேடைகளில் பேசச் செல்கையிலும் சில ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துகையிலும் அவர்களுக்குச் சில கொட்டேஷன்கள் கட்டாயம் வேண்டியதிருக்கும். அவர்களுக்கான தளம் இது. 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற கொட்டேஷன்கள் உள்ளன.


13. www.thefreedictionary.com ஆன் லைனில் உள்ள அருமையான டிக்ஷனரி. ஒரு சொல்லுக்குப் பொதுவான பொருள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம், கம்ப்யூட்டர், நிதிச் சந்தை தொடர்பான பொருளும் தரப்படும். இவற்றுடன் ஒத்த பொருள் தரும் சொற்கள். எதிர்ப்பதங்கள், பழமொழிகள், வழக்குச் சொற்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. இவற்றுடன் பல உதிரி பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் நியூஸ் அலர்ட், வார்த்தை விளையாட்டு எனப் பிரிவுகளும் உள்ளன.


14. www.webmath.com ஒரு பெயிண்டர் ஒரு அறையை எட்டு மணி நேரத்திலும் இன்னொருவர் 10 மணி நேரத்திலும் வெள்ளை அடித்தால் இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் வெள்ளை அடிப்பார்கள்? என்ன – இதெல்லாம் ஸ்கூலில் முடித்து வந்தாச்சே ! இப்போ எதுக்கு என்கிறீர்களா? இதைப் போன்ற கணக்குகள் மற்றும் அல்ஜிப்ரா, கால்குலஸ் எனப் பல பாடப்பிரிவுகளுக்குத் தீர்வுகளை இந்த தளம் தருகிறது.


15. www.worldwidewords.org ஆங்கிலச் சொற்கள் குறித்து தெரிந்து கொள்ள அருமையான ஓர் தளம். ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு அதன் பல பரிமாணங்களை இந்த தளம் எடுத்துச் சொல்கிறது.


எடுத்துக் காட்டாக எப்போதாவது ஒரு முறை என்ற பொருளில் “blue moon” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மது அருந்துபவர்கள் பிடிபட்டால் இந்த சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இது மேலும் சில பொருளையும் தரும். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருவதையும் இந்த சொல் மூலமே குறிக்கலாம். இது போல பல விளக்கங்கள்; பல எடுத்துக் காட்டுகள். உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிந்து வைத்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சொற்கள் பயன்பாடு குறித்த இமெயில் செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 22 April 2012

எல்லோருக்கும் எதிர்காலத்தில் தம் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆா்வம் இருக்கும் தானே?

இதோ இவ் இணையத் தளம் நீங்கள் இன்னும் இருபது வருடத்தில் எப்படி இருப்பீா்கள் என்று காட்டுகின்றது. முயற்சித்துப் பாருங்களேன்.

தளம் : http://www.in20years.com/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 9 April 2012

பிரபலமான மனிதர்களின் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு..


உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள் தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது. 

சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது. உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான். வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம் முக்கிய குறிப்பு=என்னைப்பற்றி அறிய இத்தளத்தில் தேடாதிங்க நான் இத்தளத்தில் உள்ளவர்களை விட ரொம்ப பிரபல்யம்முங்கோ அதுக்கு தான் இருக்கு googleprofile

இங்கே

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



தளம்


குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச, கற்க உதவும் தளம்

http://www.starfall.com/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



படிக்காதிங்க


1)நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றதகேக்குறதா?


2)அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை..
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்ககொத்தடிமை..

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?..
சீனாவுல தான் பிறந்தது..ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசுஇல்லை..
நபர் - 2:அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1:அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்..5) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்கொடுக்குறாங்க..
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க..
என்ன கொடும சார் இது?..

6) மூன்று மொக்கைகள்: 

a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்..அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பாபிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ்ஆட முடியுமா?

7)காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது..

8) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்குமுன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்குஊதிவிட்டுதான் கெளம்பனும்...

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 30 March 2012

பறவை வளர்ப்பு(Birds)

எந்தெந்த பறவைகளை கூண்டில் வளர்க்கலாம்? 




கிளி, லவ் பேர்ட்ஸ், மைனா, கொண்டை குருவி, கௌதாரி ....,,


 பழக விரும்பாத பறவைகள் 




சில பறவைகள் அபூர்வமாக பறந்து போய் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தப்பிக்க முயற்சி செய்யலாம். அப்படிப்பட்ட பறவைகளைத் தப்பிக்க விட்டு விட வேண்டும். ஏனென்றால், அம்மாதிரி இயல்புடைய பறவைகள் அனைத்தும் ஒவ்வொரு வினாடியும் தப்பிக்கும் எண்ணத்துடனேயே இருக்கும். அதனால் மகிழ்ச்சி ஏற்படுவதற்குப் பதில் துக்கமே நேரும். 


பூனையிடம் பிடிபடாமல் கூண்டை அமைக்க வேண்டும்.


பறவைகளின் இயல்பு



 பொதுவாக பறவைகள் தங்களின் அலகுகளை அடிக்கடி தீட்டிக் கொள்ளும். கூண்டிலே வளர்க்கப்படும் பறவைகளுக்கும் இந்நியதிக்கு விதி விலக்கல்ல.
  எனவே அவற்றுக்கு வசதியாகக் கட்டைஒன்றினை கட்டி வைத்து விட்டால், அக்கட்டையில் தங்கள் அலகைத் தீட்டி கொள்ளும். 

பறவைகளுக்கு நோய் வராமலிருக்க 

பறவைகளின் கூண்டில் அடுப்பு கரித்துண்டு ஒன்றையும், வசம்பு ஒன்றையும் கட்டி வைக்க வேண்டும்.  பறவைகளின் காலிலும் வசம்பு ஒன்றை கட்டி வைக்கலாம்.


எப்போது எடுத்து வளர்க்கலாம்




>>>அவை தன்னுடைய தாயின் வாயிலிருந்து இரையைப் பெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் எடுத்து வளர்க்க முயலக் கூடாது.
>>> பறக்கக் கற்று கொள்வதற்கு முன்பே அவற்றை எடுத்து வந்து வளர்த்து விட வேண்டும். 


லவ் பேர்ட்ஸ் வளர்க்க டிப்ஸ் இங்கே http://rajasekaranmca.blogspot.in/2012/02/blog-post_25.html

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



தமிழ் திரைப்படங்களை இலவசமாக காண சிறந்த 10 தளங்கள்

தமிழ் திரைப்படங்களை இலவசமாக ஆன்லைனில் காண சிறந்த 10 தளங்கள் கீழே உள்ளது. இந்த தளங்களில் சென்று புதிய(லேட்டஸ்ட்) ரிலீஸ் தமிழ் திரைப்படங்களை ஆன்லைனில் இலவசமாக கண்டு களியுங்கள்.

1) Movie Lanka


இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.


2) Tamil Flix


இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளத்தில் 90களில் வந்த திரைப்படங்கள் கூட பார்க்க முடிகிறது.


3) Padangal



நீங்கள் இணையத்தில் பழைய திரைப்படங்களை தேடி தேடி அலுத்து போய் விட்டீர்களா ஆம் என்றால் உங்களுக்கான சிறந்த தளம் இது தான். இந்த தளத்தில் பழைய திரைப்படங்கள் கொட்டி கிடக்கிறது. பழைய பட விரும்பிகள் இந்த தளத்தை பயன் படுத்தி கொள்ளுங்கள்.


4) Tamil Peek

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

5) Tamil tvs.com

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. இந்த தளத்தில் படங்களை புதிய படங்கள் ,பழைய படங்களை என இரு வகையாக பிரித்து வைத்துள்ளனர். தமிழ் திரைப்படங்களை காண இந்த தளமும் சிறந்த தளமாகும்.

6)Good Lanka


இந்த தளத்தில் புதிய மற்றும் பழைய திரைப்படங்களின் வீடியோ பாட்டுக்களை கேட்டு மகிழலாம். அகர வரிசைப்படி படங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். உங்களுக்கு தேவையான வீடியோ பாட்டுக்களை இந்த தளத்தில் கேட்டு மகிழலாம்.

7) Tube Kolly

இந்த தளத்தில் பல புதிய தமிழ் திரைப்படங்களின் வீடியோக்கள் காணப்படுகின்றது. புதிய திரைப்படங்கள் முதல் பழைய திரைப்படங்கள் வரை வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த தளத்தில் ஒரு பகுதி முடிந்ததும் அடுத்த பகுதி தானாகவே இயங்கிவிடும்.

8)TamilVix


இந்த தளத்திலும் பல புதிய படங்கள் காணப்படுகிறது. இந்த தளத்தில் திரைப்படங்களை New Movies, Old Movies, Middle Movies என்று தனித்தனியாக வகை படுத்தி உள்ளனர். இந்த தளமும் இலவசமாக திமில் திரைப்படங்களை காண சிறந்த தளமாகும்.


9) Rajshree


இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

10) Thiruttu VCD

இந்த தளத்திலும் தமிழ் திரைப்படங்களை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



முகவரி அடையாள அட்டை(Identity Card-02)

"முகவரி அடையாள அட்டை' திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட், புதிய காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் போன்றவற்றிற்கு முகவரிக்கான அத்தாட்சி கேட்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் பயன்படுத்தப்படுகிறது. 



இதுபோன்றதேவைகளுக்கு பயன்படுத்த "முகவரி அடையாள அட்டை'திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. மாவட்ட தபால் நிலையத்தில் இதற்கான விண்ணப்பம் ரூ.10க்கு தரப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ. 240 கட்டணம் செலுத்த வேண்டும். 

முகவரி குறித்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். பின்மத்திய அரசு, தபால்துறை முத்திரையுடன் லேமினேசன் செய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லும். 

திண்டுக்கல் தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்,

"அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெற முகவரிக்கான அத்தாட்சி தருவதற்கு பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். தபால் துறையின் முகவரி அடையாள அட்டை இச்சிரமத்தை போக்கும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இந்த அட்டை வழங்கப்படும்,'' என்றார்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Monday, 26 March 2012

விக்ரம் திரைப்பட வரலாறு

விக்ரம் வினோத் ராஜுக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ் நாட்டில் உள்ள பரமக்குடியில், 17ம் ஏப்ரல் 1966 அன்று பிறந்தார்.  


சிறு வயதிலே இவர் கென்னெடி என்னும் பெயர் மாற்றம் பெற்று கிறித்தவம் தழுவினர். இவரது தந்தையும் ஒரு நடிகர் ஆவார். விக்ரமுக்கு அனிதா என்கிற தமக்கையும் அர்விந்த் என்கிற அண்ணனும் உள்ளனர்.

விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார்.

 திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் M.B.A படிப்பை இலயோலாக் கல்லோரியில்படித்து முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்தவமனையிலிருந்தார். தன் கால் செயலிழக்காமிலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.


விக்ரம்தமிழ்த் திரைப்பங்களில்பிரதானமாக தோன்றும் ஒரு இந்தியநடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம் பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். மிலான் பல்கலைக்கழகம் மே 2011 அன்று இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இவரது நடிப்புத்திறனால் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றுக் கொண்ட நடிகர் இவர்


விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியானஎன் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவற்றுள் பல திரைப்பட ரசிகர் மத்தியில் பிரபலம் இல்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற வெற்றிமிக்க மசாலா படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் கொண்டார். 

இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். அதன் பின் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது. 

அதன் பின் மஜா, பீமா, கந்தசாமி போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகுராவணன் என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011ம் ஆண்டு வெளி வந்த தெய்வத் திருமகள் என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்து பல பாராட்டுகள் பெற்றார்.

விக்ரம் வெவ்வேறு சமூக நிகைச்சிகளை முன்னேர்த்தியுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவணம் மூலம் பல நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.


நடித்த திரைப்படங்கள்
நடிகராக
ஆண்டு
திரைப்படம்பாத்திரம்மொழிகுறிப்புகள்

1990 என் காதல் கண்மணி (தமிழ்)
1991 தந்துவிட்டேன் என்னை ராஜு (தமிழ்)
1992 காவல் கீதம் அசோக் (தமிழ் )
மீரா ஜீவா  (தமிழ்)
1993 துருவம் பத்ரன் (மலையாளம் )
சிருன்னவுலா வரமிஸ்தாவா (தெலுங்கு )
மாபியா ஹரி ஷங்கர் (மலையாளம்)
1994 சைன்யம் கேடட் ஜீஜி (மலையாளம் )
பங்காரு குடும்பம் (தெலுங்கு)
புதிய மன்னர்கள் சத்யமூர்த்தி  (தமிழ்)
1995 ஸ்ட்ரீட் (மலையாளம்)
அடால மஜாக்கா (தெலுங்கு )
1996 மயூர ந்ரிடம் (மலையாளம் )
அக்கா பாகுன்னாவா (தெலுங்கு )
இந்திரப்ரச்தம் பீட்டர் (மலையாளம் )
ராசபுத்திரன் மனு (மலையாளம் )
1997 இது ஒரு சிநேஹகதா ராய் (மலையாளம் )
உல்லாசம் தேவ் (தமிழ்) 
குரல்ல ராஜ்ஜியம் (தெலுங்கு )
1998 கண்களின் வார்த்தைகள்  (தமிழ்)
1999 ஹவுஸ் புள் ஹமீது (தமிழ்) 
சேது சியான் (எ) சேது  (தமிழ்)  வென்றவர்: சிறந்த நடிகர், தமிழ் நாடு மாநில பட விருது (சிறப்பு பரிசு)
2000 ரெட் இந்தியன்ஸ் (மலையாளம்)
2001 இந்த்ரியம் (மலையாளம்)
9 நேலாலு வீரேந்திரா (தெலுங்கு )
யூத் (தெலுங்கு)
விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம்  (தமிழ்)
தில் கனகவேல்  (தமிழ்)
காசி காசி (தமிழ்) வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
2002 ஜெமினி  ஜெமினி(தமிழ்)  வென்றவர்: ஐ டி எப் எ சிறந்த நடிகருக்கான விருது
சாமுராய் தியாகராஜன்  (தமிழ்)
கிங் ராஜா சண்முகம்  (தமிழ்) 
2003 தூள் ஆறுமுகம்  (தமிழ்) 
காதல் சடுகுடு சுரேஷ்  (தமிழ்) 
சாமி ஆறுசாமி  (தமிழ்) பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
பிதாமகன் சித்தன்  (தமிழ்)  வென்றவர்: சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது
வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
வென்றவர்: சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது
2004 அருள் அருள்குமரன் (தமிழ் )
2005 அந்நியன் இராமானுசம்
அந்நியன்
ரெமோ (தமிழ்) வென்றவர்: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
மஜா அறிவுமதி (தமிழ் )
2008 பீமா சேகர் (தமிழ்) பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2009 கந்தசாமி கந்தசாமி (தமிழ்) பரிந்துரை, சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது
2010 ராவணன் வீரையா (தமிழ் )
ராவன் தேவ் பிரதாப் சர்மா (ஹிந்தி )
2011 தெய்வத்திருமகள் கிருஷ்ணன் (தமிழ் )
2011 ராஜபாட்டை 'அனல்' முருகன் (தமிழ் )

படப்பிடிப்பில்  

2012 மெரினா தானாகவே (தமிழ்)
2012 கரிகாலன் கரிகால் சோழன் (தமிழ்)
2012 தாண்டவம் சிவா (தமிழ்)
2012 டேவிட் டேவிட் (இந்தி) அறிவிக்கப்பட்டது.

நன்றி:- பல்வேறு இணையதளங்கள்  

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்