Friday 6 July, 2012

ஆன்லைனில் ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய

ஒரு பொருளை வாங்க வேண்டும் கடை கடையாய் ஏறி இறங்கிய காலம் உண்டு. ஆனால், தற்போது, பொருட்களை வாங்குவதற்கு கடை கடையாய் ஏறி இறங்கி சிரமப்பட வேண்டாம். இருந்த இடத்திலிருந்து ஆன்-லைன் மூலம் குறைந்த விலையில் ஷாப்பிங் செய்யும் வசதியை பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வழங்குகின்றன.


இதோ, ஷாப்பிங் செய்வதற்கான டாப்-10 இணையதளங்களின் லிஸ்ட் மற்றும் விபரங்கள்…

இபே.இன்என்ற வலைதளம் இந்தியாவில் அதிக மக்களால் ஆன்-லைன் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஜெம்ஸ்டோன், ஜுவல்லரி, எல்க்ட்ரானிக் சாதனங்கள், மேகஸைன்கள், விளையாட்டு பொருட்கள் என்று ஏகப்பட்ட விஷயங்களை ஆன்-லைன் ஷாப்பிங் வாங்கி குவிக்கலாம். ஆன்-லைன் ஷாப்பிங் செய்ய அதிகம் பயன்படுத்தப்படுகின்ற இன்னொரு வலைதளம்பேஷன்அண்டுயூ.காம். தேசிய மற்றும் சர்வதேச அளவில் உருவாக்கப்படும் எந்த விதமான தரமான பொருட்களையும் இந்த வலைத்தளத்தின் மூலம் எளிதாக வாங்கலாம்.

ஃபிலிப்கார்ட்.காம்அனைவருக்கும் பரிட்சயமான ஒரு வலைதளம் தான். இதில் புத்தகங்கள், மொபைல் அக்சஸரீஸ் போன்ற ஏகப்பட்ட பொருட்களை இருந்த இடத்தில் இருந்தே அழகாக வாங்கலாம். அப்படி ஆடர் செய்த பொருட்களுக்கு நெட் பேங்கிங், க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இது போல் ஆடர் செய்யும் பொருட்கள் 3 அல்லது 4 நாட்களுக்குள் கிடைக்கும்.

மைகிரஹாக்.காம் ,
 ஃபியூச்சர்பஸார்.காம் 
ஹோம்ஷாப்18.காம்
மைன்ட்ரா.காம்,
ஸ்னாப்டீல்.காம்
லெட்ஸ்பை.காம் 
மைடாலா.காம் என்ற வலைதளங்களின் மூலமும் சிறந்த ஆன்-லைன் ஷாப்பிங் சேவையை பெறலாம்.

உலகம் போகிற வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது. இது போன்ற வலைதளங்கள் நவீன வசதிகளை வாசலில் குவிக்க காத்திருக்கிறது. உலகமே ஸ்மார்ட்டாக மாறும் பொழுது நாமும் ஸ்மார்ட்டாக வேண்டும் என்பது இன்றைய வாழ்வில் எழுதப்படாத இலக்கணம் தான். இதற்கு துணை புரிய பல வெப் சைட்கள் காத்திருக்கிறது.

நன்றி : இணைய தளங்கள் 

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: