Friday 6 July, 2012

கள்ள நோட்டை அடையாளம் காண ?

கள்ள நோட்டை அடையாளம் காண்பது எப்படி? 


தரம்: 
பருத்தியிலிருந்து எடுக்க ப்பட்ட தனிச் சிறப்பான காகிதம் கொண்டு தயாரிக்கப்படும் பண த்தை எண்ணும்போது படபட வென சத்தம் உண் டாகும்.

வரிசை எண்:
பணத்தின் வரி சை எண் புற ஊதா விளக்கொ ளியில் ஒளிரும் வண்ணம் ஜொலிக்கும் மையினால் அச்ச டிக்கப்பட்டிருக்கும். எண்களுக் கு இடையே உள்ள இடைவெளி ஒரே சீராக இருக்கும். எண்கள் சிவ ப்பு நிறத்தில் தடிமனாக இருக்கும். ஆயிரம் ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல்பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தில் சிவப்பு நிறத்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு இழை: 
மகாத்மா காந்தி படத்திற்கு இடப்புறம் இருக்கும் பாது காப்பு இழை வெளியில் பாதி தெரிந்தும், உள்ளே மறைந்தும் இருக்கும். வெளிச்சத்தில் பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். இதில் பாரத் என்று இந்தியிலும், ஆர்.பி.ஐ. என்று ஆங்கில த்திலும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.


நிறம் மாறும் மை: 
ஐநூறு, ஆயி ரம் ரூபாய் நோட்டுக்களில் நடு வில் அச்சிடப்பட்டிருக்கும் மதிப் பு இலக்க எண்கள் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கு ம். சாய்த்துப் பார்த்தால் பச்சை நீல நிறமாக மாறிமாறித்தெரியு ம்.


நீர்க் குறியீடு: 
ரூபாய் நோட்டின் இடப்புறம் உள்ள வெள்ளைப் பகு தியில் மகாத்மா காந்தியின் உருவம் ஸ்லைடு போல தெரியும்”.

என்னதான் தீர்வு?
மொத்தமாகப் பணத்தை வாங்கும் போது வங்கி முத்திரையிடப்பட்ட நோட்டுக் கட்டுகளை மட்டுமே வாங்கலாம்.கள்ள நோட்டுகளை கண்டு பிடிக்க உதவும் புற ஊதா கருவியை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஐநூறு ரூபாய் விலை யில்கூட இந்த கருவி கிடைக்கிறது.

ஒருவர் வழக்கத்துக்கு மாறாக அதிக செலவு செய்கிறார் எனில் அவ ரிடம் எச்சரிக்கையாகவும், அவரது நடவடிக்கையில் கண்காணிப்பு டனும் இருப்பது அவசியம். எச்சரிக்கையோடு இருந்தால் கள்ள நோட்டை உங்கள் கைகளுக்கு வராமல் தடுக்கலாமே!

- விகடன்




































நன்றி : இணைய தளங்கள்

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: