Friday 15 June, 2012

வங்கிகளில் பணம் அனுப்ப

ஒரே வங்கியின் இரு வேறு கிளைகளில் இருந்து பணம் அனுப்பவது எளிதான விஷயம், ஆனால், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்ப,

1) ஆர்டிஜிஎஸ் (RTGS)

2) என்இஎப்டி நம்பர் (NEFT)



ஆர்டிஜிஎஸ் என்பது Real Time Gross Settlement.
என்இஎப்டி என்றால் National Electronic Funds Transfer.

ஆர்டிஜிஎஸ் என்பது நீங்கள் பணத்தை அடுத்தவரின் கணக்குக்கு அனுப்பியவுடனே அது அவரது கணக்குக்கு உடனடியாகப் போய்விடும். என்இஎப்டியில் பணப் பரிமாற்றம் நடக்க 1 மணி நேரத்துக்கு மேலாகும்.
குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்தைத் தான் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்ப முடியும். ஆனால், என்இஎப்டி மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஆனால், என்இஎப்டி மூலம் அனுப்பினால் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும் தான் பணம் அனுப்ப முடியும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு 9 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். 

சனிக்கிழமைகளில் 5 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். நீங்கள் 9 மணிக்கு பணத்தை போட்டால் அது 10 மணிக்குத் தான் அடுத்தவர் கணக்குக்குப் போகும். 10 மணிக்குப் போட்டால் 11 மணிக்குத் தான் போகும். அதாவது 1 மணிக்கு ஒருமுறை தான் பண டிரான்ஸ்பர் நடக்கும்.
ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பினால் உடனடியாக பணம் போய்ச் சேர்ந்துவிடும்.

கட்டணம் எவ்வளவு?:

என்இஎப்டி  மூலம் 

ரூ. 1 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 5 பிளஸ் சேவை வரி.
ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 15 பிளஸ் சேவை வரி.
ரூ. 2 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 25 பிளஸ் சேவை வரி


ஆர்டிஜிஎஸ் மூலம் 

 ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைஅனுப்ப கட்டணம் ரூ. 30 கட்டணம்
ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 55 ஆகும்.

Related post



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments: