Monday, 27 February 2012

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (R.T.O.) பதிவு வரிசை எண் விபரங்கள்

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (R.T.O.) பதிவு வரிசை எண் விபரங்கள்
தமிழ்நாட்டிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட பதிவு வரிசை எண்களின் விபரம் கீழே உள்ளது. இதன் மூலம் ஒரு வாகனம் எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என எளிதாக அறிந்து கொள்ள இயலும்.

TN-01 மத்திய சென்னை (அயனாவரம்)
TN-02 சென்னை-வடமேற்கு (அண்ணாநகர்)
TN-03 சென்னை-வடகிழக்கு (தொண்டியார்பேட்டை)
TN-04 சென்னை-கிழக்கு (பேசின்பாலம்)
TN-05 சென்னை-வடக்கு (வியாசர்பாடி)
TN-06 சென்னை-தென்கிழக்கு (மந்தைவெளி)
TN-07 சென்னை-தெற்கு (திருவான்மியூர்)
TN-09 சென்னை-மேற்கு (கே.கே. நகர்)
TN-10 சென்னை-தென்மேற்கு (ஆழ்வார் திருநகர்)
TN-18 ரெட்ஹில்ஸ்
TN-19 செங்கல்பட்டு
TN-20 திருவள்ளுர்
TN-21 காஞ்சிபுரம்
TN-22 மீனம்பாக்கம்
TN-23 வேலூர்
TN-24 கிருஷ்ணகிரி
TN-25 திருவண்ணாமலை
TN-28 நாமக்கல்
TN-29 தர்மபுரி
TN-30 சேலம்-மேற்கு (கொண்டலாம்பட்டி புறவழிச்சாலை)
TN-31 கடலூர்
TN-32 விழுப்புரம்
TN-33 ஈரோடு
TN-34 திருச்செங்கோடு
TN-36 கோபிசெட்டிபாளையம்
TN-37 கோவை-தெற்கு (பீளமேடு)
TN-38 கோவை-வடக்கு (துடியலூர்)
TN-39 திருப்பூர்-தெற்கு
TN-40 மேட்டுப்பாளையம்
TN-41 பொள்ளாச்சி
TN-42 திருப்பூர்-வடக்கு (அவிநாசி சாலை)
TN-43 உதகமண்டலம்
TN-45 திருச்சி
TN-46 பெரம்பலூர்
TN-47 கரூர்
TN-48 ஸ்ரீரங்கம்
TN-49 தஞ்சாவூர்
TN-50 திருவாரூர்
TN-51 நாகப்பட்டினம்
TN-52 சங்ககிரி
TN-54 சேலம்-கிழக்கு (செல்லநாயக்கன்பட்டி)
TN-55 புதுக்கோட்டை
TN-56 பெருந்துறை
TN-57 திண்டுக்கல்
TN-58 மதுரை-தெற்கு (புறவழிச்சாலை)
TN-59 மதுரை-வடக்கு (மேலூர் சாலை)
TN-60 பெரியகுளம்
TN-61 அரியலூர்
TN-63 சிவகங்கை
TN-64 மதுரை-மத்திய (மேலூர் சாலை)
TN-65 ராமநாதபுரம்
TN-66 கோவை-மத்திய (டாக்டர்.பாலசுந்தரம் சாலை)
TN-67 விருதுநகர்
TN-68 கும்பகோணம்
TN-69 தூத்துக்குடி
TN-70 ஓசூர்
TN-72 திருநெல்வேலி
TN-73 ராணிப்பேட்டை
TN-74 நாகர்கோவில்
TN-75 மார்த்தாண்டம்
TN-76 தென்காசி

மேலும் இங்கே சென்றால் வட்டார போக்குவரத்து அலுலகங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் நீங்கள் வசிக்கும் பகுதி எந்த வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்டது ஆகிய விபரங்கள் கிடைக்கும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 26 February 2012

கூகிளில் தேடுவது எப்படி? (Google Search)

கூகிள் என்ற இனையதளத்தில், நீங்கள் எதனை வேண்டுமானளும் தேடலாம். அதனை எப்படி சிறப்பாக உபயோகிப்பது என்பதை பற்றி இங்கு விவரிகின்றேன்.


1. வலைவுகளை தேட, www.google.com'க்கு சென்று, அங்குள்ள எழுத்துப்பெட்டியில் நீங்கள் தேட வேண்டிய வார்த்தயை இட்டு, செர்ச் பொட்டானை அழுத்தினால் வலைப்பதிவின் பட்டியல்கள் வரும்

2. கணக்குகளை பார்க்க கூகிளை உபயோகிகளாம். "1 + 1" என எழுத்துப்பெட்டியில் இட்டு, செர்ச் பொட்டானை அழுத்தினால், அதனுடைய மொத்தம் வரும்.

3. ஒரு வலைப்பதிவின் கிழ் தேடவேண்டுமென்றால், "site:rajasekaranmca.blogspot.com வார்த்தைகள்" என இட்டு, செர்ச் பொட்டானை அழுத்தினால், உங்களது வார்த்தைகளுக்கான வலை தொடுப்புகள்  rajasekaranmca.blogspot.com என்ற இனையதளத்திளிருந்து எடுத்துவரப்படும்.

4. ஒரு வரியை தேடவேண்டுமென்றால், டபிள் கோட்ஸில் "" பதித்து, செர்ச் பொட்டானை அழுத்தினால், உங்களது வாரிகளுக்கான வலை தொடுப்புகள் குகிள் இனையதளத்திளிருந்து எடுத்துவரப்படும்.

5. ஒரு வார்த்தையின் அர்த்தம் தெரிய, "define: வார்த்தை" என இட்டு, செர்ச் பொட்டானை அழுத்தினால், உங்களது வார்த்தைக்கான அர்த்த்தை கொடுக்கும்.

6. சில பயில்களை தேட, "filetype:pdf வார்த்தைகள்" என இட்டு, செர்ச் பொட்டானை அழுத்தினால், உங்களது வார்த்தைக்கான பயில்களை தரும்.

7. பிற மொழி பெயர்ப்புகளையும் குகிள் செய்யும். http://translate.google.com/ என்ற இனையதளத்திற்க்கு சென்று, உங்களுக்கு தேவையான மொழி பெயர்ப்புகளை செய்து கொாள்ளலாம். தமிழ் மொழி பெயர்ப்பு இல்லை என்பது வருத்ததிற்குறிய செய்தியாகும்.

8. வெளிநாட்டு பணங்களை இந்திய ரூபாய்க்கு மாற்றலாம். 1 USD in INR என இட்டு, செர்ச் பொட்டானை அழுத்தினால், ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தெரியவரும்.

9. *இது அல்லது அது*
தேடலின் போது சில சமயம் இது அல்லது அது எது இருந்தாலும் பரவாயில்லை என்ற நிலை
அடிக்கடி ஏற்படும். எ.காட்டாக சூர்யா மற்றும் ஜோதிகா யாருடைய பேர் இருந்தாலும்
அந்த முகவரிகள் தேவை என்று இருக்கின்றது என வைத்துக்கொள்வோம் அப்போது என்ன
செய்ய வேண்டும் தெரியுமா?

* Google Search:* சூர்யா OR ஜோதிகா

"சூர்யா ஜோதிகா" என்று தேட கொடுத்தால் இருவர் பெயர் இருக்கும் முகவரிகள்
மட்டும் கிடைக்கும்.

10. *அங்க என்ன நேரம்?*
உலகில் சில முக்கியமான நகரங்களின் தற்போதைய நேரம் என்ன என்பதை அறிய மிக எளிதாக
ஒரு வசதி உள்ளது.

*Google Search: "Time in Bangalore" *

என்று கொடுத்தால் போது. சென்னையை இந்த தேடலில் காணவில்லை.

11.* கணக்கில் சிங்கம்*
நமக்கு தான் இப்ப எல்லாம் 1 + 1 என்பதற்கு கூட கணிப்பான் தேவை படுகின்றது.
கூகிள் இன்னும் வாழ்வை சோம்பல் படுத்த ஒரு வசதி கொடுத்துள்ளது. எப்படி?
* Google Search:* 123 * 1234
என்று கொடுத்து பாருங்கள்

12. *வலைதளத்தில் மட்டும் எப்படி தேடுவது?*
உங்களுக்கு ஒரு வலைதளத்தில் ஏதாவது ஒரு வார்த்தை தேடவேண்டும். உதாரணத்திற்கு
திண்ணை வலைதளத்தில் இருக்கும் ஜெயமோகன் பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டும்
என்று வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன வார்த்தை தேடவேண்டுமோ அதை கொடுத்துவிட்டு,
அந்த வலைதளத்தில் முகவரியை Site:<வலைத்தள முகவரி> என கொடுத்தால் நமக்கு தேவையான
பக்கங்கள் மட்டும் கிடைக்கும்
*Google Search:* "ஜெயமோகன்" site:thinnai.com

13.*கோப்புகளில் மட்டும் தேட*
கோப்புகளுக்குள் தேடவும் கூகுளில் வசதியுள்ளது. கோப்புகள் மட்டும் தேவை என்றால் 

filetype:pdf,doc,ppt என்று தரலாம். அந்த கோப்புகள் மட்டும் கிடைக்கும்.
(குகிள் 101KB அளவுள்ள கோப்புகளை மட்டுமே பட்டியலிடுகின்றது என ஒரு வதந்தி
உள்ளது)

* Google Search:* "தமிழ்" filetype:doc
(இந்த தேடலில் நான்கு விடை மட்டும் வருகின்றது)

14.* எண் விளையாட்டு.*
பல சமயங்களில் வருடங்கள் அல்லது எண்கள் சரியாக தெரியாது. 1990ல் இருந்து 2000
வரை ஏதோ ஒரு ஆண்டு அல்லது 10ல் இருந்து 25 வரை இருக்கும், ஆனால் சரியாக எந்த
எண் என்று தெரியாது, இது போல பயங்கர இக்கட்டான் நிலையில் எப்படி கூகிள்
ஆண்டவரிடம் கோரிக்கை வைப்பது, வைக்கும் விதத்தில் கோரிக்கை வைத்தால் பலன்
கிட்டும்.
அதற்கு 1900..2000 என கொடுக்க வேண்டும்.

*Google Search:* இந்தியா 1945..1948

15.1 சில சமயம் 10க்கு மேல் அல்லது 10க்கு கீழ் என்று மட்டும் தெரியும்,
அப்பொழுது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

10.. (பத்திற்கு மேல் தேட)
..10 (பத்திற்கு கீழ் எண்களை தேட)

16. *தவிர்க்க முடியாத வார்த்தைகள்*
கூளிள் தேடலில் மொத்தம் 32 வார்த்தைகளை கொடுத்து தேடலாம். முன்னர் பத்து
வார்த்தைகள் மட்டுமே தேடிவந்தது. இந்த முப்பத்தி இரண்டில் சில வார்த்தைகள் மிக
அவசியமாக நமக்கு தோன்றலாம். அந்த வார்த்தைகளை மிக அவசியம் தேவை என்று நமக்கு
தோன்று அப்போது அந்த வார்த்தைகளை '' " உள்ளே போட்டு தேடினால் பலன் கிடைக்கும்

Google Search : "இந்தியா வெற்றி"

பல தேடும் போது இந்தியா + வெற்றி என தேடுவதை பார்த்துள்ளேன். கூகிள்
தேடுஇயந்தரத்தில் ஒவ்வொரு வார்த்தை நடுவிலும் AND தானாக சேர்த்துக்கொள்ளும்.
ஆனவே + போட வேண்டிய அவசியம் இல்லை

17. *பதிலை தேடுங்கள்.கேள்விகளை அல்ல..*
ஒரு சின்ன விடயத்தை மனிதில் வைத்துக்கொண்டால் கூகிள் தேடலில் கை
தேர்ந்தவாராகிவிடலாம். கூகிள் பதில்களில் இருந்து தான் தேடுகின்றது, ஆகவே
பதில்களை மட்டுமோ தேடல் சொற்களில் வைக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் தேடுவது போல தமிழிலும் தேட ஆரம்பியுங்கள். தேட தேட தான் பல
பக்கங்கள் வலைதலைங்கள் கூகுளுக்குள் பட்டியலிடப்படும். தமிழில் ஒருங்கிறியில்
(Unicode) பக்கங்கள் மட்டுமே தேடப்படுகின்றது.

தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க..

நன்றி : www.google.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



மின் அஞ்சல்கள் இலவசமாக உடனுக்குடன் கைப்பேசியில் பெற

மின் அஞ்சல்கள் இலவசமாக உடனுக்குடன் கைப்பேசியில் பெற 



இதை படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் கைபேசியில் காதல் டிப்ஸ்களுக்கு LOVE என டைப் செய்து ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பசொல்லி SMS வரலாம் அதற்கு வெறும் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம். இவை காதலுக்கு மட்டும் இல்லை இது போல தினசரி உங்களுக்கு SMS மூலம் உங்கள் கைபேசிக்கு வரும் தகவல்கள் ஏராளம். இப்படி ஒவ்வொரு வகை செய்திக்கும் நீங்கள் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கைபேசி பில் ஏகிறிவிடும்.

இந்த அனைத்து சேவைகளும் உங்களுக்கு இலவசமாக www.mytoday.com என்ற முகவரியில் உங்களுது கைபேசி எண்ணை பதிந்துவிட்டால் போதும். நீங்கள் விரும்பும் சேவையை இலவசமாக பெறலாம்.

என்னடா தலைப்பை பற்றி எழுதாமல் என்னமோ சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறான் என்று நினைக்கிறீர்களா??? இது ஒரு இலவச சேவை அதனால் இந்த தலைப்பில் இந்த செய்தி இலவசமாக.

மேலே சொன்ன அதே www.mytoday.com வலைத்தளம் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்களை உடனுக்குடன் உங்கள் கைபேசிக்கு SMS மூலம் தகவல் அனுப்புகிறது. இந்த சேவையை www.m3m.in வலைத்தளம் உங்களுக்கு வழங்குகிறது.

அப்பாடா இனிமேல் நீங்கள் எதிர்பார்க்கும் மின் அஞ்சல் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வந்துள்ளதா என்று இணைய வசதி இல்லாதோர் பிரௌசிங் சென்டர் தேடி உங்கள் பணத்தை செலவிட அவசியம் இல்லை.

இதற்கு www.m3m.in என்ற முகவரியில் உங்களை மின் அஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் பதிவு செய்யவும். உடனே உங்கள் கைப்பேசி எண்ணிற்கு கடவு சொல் அனுப்பிவைக்கப்படும். உடனடியாக உங்கள் கைப்பேசிற்கு ஒரு மின் அஞ்சல் முகவரி தரப்படும். அது உங்கள் கைப்பேசி எண்ணை ஒட்டியே இருக்கும். உதாரணமாக உங்கள் கைப்பேசி எண் 9842112345 என்றால் உங்களுக்கு கொடுக்கப்படும் மின் அஞ்சல் முகவரி 919842112345@m3m.in என்று இருக்கும்.

இந்த மின் அஞ்சல் முகவரிக்கு(919842112345@m3m.in) உங்கள் மின் அஞ்சல்களின் பிரதிகளை (Copy) Forward செய்யுமாறு உங்கள் மின் அஞ்சலில்(name@gmail.com) செட் செய்யவேண்டும். அவ்வளவுதான் இனிமேல் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கைப்பேசியில் உடனுக்குடன் வந்துவிடும்.

ஆனால் இந்த சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக. ஒரு வருடம் கழித்து வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். பிறகு பார்த்துக்கொல்லாம்.

மேலே உள்ள இரண்டு சேவைகளும் இந்தியாவில் உள்ள கைப்பேசி எண்ணிற்கு மட்டுமே. NRIகள் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்த நீங்கள் இந்தியா வரும் போது ஒரு Lifetime கார்டையும் ஒரு Second hand or குறைந்த விலை கைப்பேசியையும் வாங்கிகொண்டு சென்றால் உங்களுக்கு பயன் தரும். (ரோமிங்க்கில் இன்கம்மிங் SMS இலவசம்).

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday, 25 February 2012

ரஜினி காந்த்-கமலஹாசன்




"ரஜினிக்கும் எனக்கும் ஏற்பட்ட நட்பு, ஆழமானது; நிரந்தரமானது'' என்று கமலஹாசன் குறிப்பிட்டார்.

கமல் கதாநாயகனாக நடித்த "அபூர்வ ராகங்கள்'' படத்தில் ரஜினி ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து இருவரும் 15 படங்களில் சேர்ந்து நடித்தனர்.

அந்தப் படங்கள் வருமாறு:- 

(1) அபூர்வ ராகங்கள், (2) மூன்று முடிச்சு, (3) அவர்கள், (4) 16 வயதினிலே, (5) ஆடுபுலிஆட்டம், (6) இளமை ஊஞ்சலாடுகிறது, (7) அவள் அப்படித்தான், (8) அலாவுதீனும் அற்புத விளக்கும், (9) நினைத்தாலே இனிக்கும், (10) தப்புத்தாளங்கள், (11) தில்லுமுல்லு, (12) நட்சத்திரம், (13) தாயில்லாமல் நானில்லை, (14) சரணம் ஐயப்பா, (15) உருவங்கள் மாறலாம்.

இருவருக்குமே தனித்தனியாகப் பெரிய ரசிகர் கூட்டம் சேர்ந்தது. தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிப்பது, இருவர் முன்னேற்றத்துக்கும் நல்லதல்ல என்ற முடிவுக்கு இருவருமே வந்தனர். அதனால் இருவருமே சேர்ந்து, பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டினார்கள். "இனி நாங்கள் தனித்தனியாகவே நடிப்போம். சேர்ந்து நடிக்கமாட்டோம்'' என்று அறிவித்தார்கள்.

இது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாக அமைந்தது. கமலும், ரஜினியும் தனித்தனியே பல வெற்றிப்படங்களை கொடுத்தனர். கமலஹாசன் "உலக நாயகன்'' என்றும் "கலைஞானி'' என்றும் புகழ் பெற்றார். ரஜினிகாந்த் "சூப்பர் ஸ்டார்'' என்று போற்றப்படுகிறார்.

தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக எம்.கே.தியாகராஜ பாகவதர் திகழ்ந்தபோது, இரண்டாவது சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் பி.யு.சின்னப்பா. இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. இருவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. யார் சிறந்த நடிகர் என்பதில், ரசிகர்கள் மோதிக்கொள்வதுண்டு.

"பாகவதரைப்போல சின்னப்பாவால் பாட முடியுமா?'' என்று பாகவதர் ரசிகர்கள் கேட்பார்கள். "சின்னப்பாவைப்போல பாகவதரால் நடிக்க முடியுமா?'' என்று சின்னப்பா ரசிகர்கள் கேட்பார்கள். ரசிகர்கள்தான் இப்படி மோதிக் கொள்வார்கள் என்றாலும், பாகவதரும் சின்னப்பாவும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.

பிறகு எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சூப்பர் ஸ்டார் ஆனார்கள். இருவரும் நாடகங்களில் நடித்து வந்தபோதே, வறுமையை பங்கிட்டுக்கொண்டு, அண்ணன்-தம்பி பாசத்துடன் பழகியவர்கள். சினிமாவில் புகழ் பெற்ற பிறகும், இந்தக் குடும்பப் பாசம் தொடர்ந்தது. இருவரும் "கூண்டுக்கிளி'' என்ற ஒரே படத்தில் நடித்தார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. தனித்தனி பாணியில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார்கள். "இருவரில் யார் வசூல் சக்ரவர்த்தி'' என்பது குறித்து எம்.ஜி.ஆர். ரசிகர்களும், சிவாஜி ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். மதுரையில், ரசிகர்களின் ஆவேசம் கத்திக்குத்து வரை போனது உண்டு. ஆனால் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கடைசிவரை அண்ணன் - தம்பியாகவே பழகினார்கள்.

இன்று உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் கமலுக்கும், ரஜினிக்கும் தொழில் போட்டி இருந்தாலும், பொறாமை கிடையாது. "உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?'' என்று ரஜினியிடம் கேட்டபோது, "கமலஹாசன்'' என்று ரஜினி கூறியிருக்கிறார். கமல், தான் நடிக்கும் படங்கள் முடிவடைந்தபின் ரஜினிக்கு போட்டுக் காட்டுவார். இதேபோல் ரஜினி தன் படங்களை கமலுக்கு திரையிட்டுக் காண்பிப்பார்.

ரஜினியுடன் உள்ள நட்பு பற்றி ஒரு பேட்டியில் கமல் கூறியிருப்பதாவது:-

"எனக்கு ராஜன் என்கிற நண்பர் இருந்தார். 28 வயதிலேயே அவருக்கு கேன்சர். மரணத்தின் நிழல் அவர் மீது விழ ஆரம்பித்த நேரம்.

ஒருநாள் என்னுடன் ஷூட்டிங் ("அபூர்வ ராகங்கள்'') பார்க்க வந்தார். மேக்கப் அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது, சரேலென கதவைத் திறந்து கொண்டு ரஜினி உள்ளே நுழைந்தார். "குட்மார்னிங் கமல் சார்'' என்று `விஷ்' பண்ணிவிட்டு, படு ஸ்டைலாக மின்னல் மாதிரி நடந்து போனார்.

ராஜனும், ஏறக்குறைய ரஜினி மாதிரி இருப்பார்! "கமல்! இது யாரு? என்னை மாதிரியே இருக்கிறாரே!'' என்று கேட்டார், ராஜன். "இவர் பெயர் சிவாஜிராவ்! புதுசா நடிக்க வந்திருக்கிறார்!'' என்றேன். இது நடந்து 3 மாதங்களில் என் இனிய நண்பர் ராஜன் இறந்து போனார். அன்று முதல் ரஜினிதான் எனக்கு ராஜன்! அதாவது ஆப்த நண்பர்.

என்றைக்கு அவர் (ரஜினி) மேக்கப் அறையின் கதவைத் திறந்து வேகமாக உள்ளே வந்தாரோ, அன்றே என் மனக்கதவையும் திறந்து உள்ளே நுழைந்து விட்டார்!''

இவ்வாறு கூறிய கமல், இன்னொரு கட்டுரையில் ரஜினி பற்றி கூறியிருப்பதாவது:-

"நானும் ரஜினியும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்தோம். நல்ல நல்ல படங்கள் செய்தோம். "நினைத்தாலே இனிக்கும்'' படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் போயிருந்தபோது, டைரக்டருக்குத் தெரியாமல், இரவெல்லாம் ஊர் சுற்றி, திரிந்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு திருட்டுத்தனமாய் பூனை மாதிரி ஓட்டலுக்குள் ஓடி ஒளிவோம். மறுநாள் ஷூட்டிங் நேரத்தில் தூக்கம் ஆளைத் தூக்கி சாப்பிடும். ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து தூங்கி வழிவோம்.

ரஜினியும், நானும் நண்பர்களாக இருந்தாலும், எதிர் எதிர் துருவங்கள்தான். கடவுள் நம்பிக்கையில், வாழ்க்கை முறையில், நடிக்கிற படங்களில், தேர்ந்தெடுக்கப்படுகிற கதைகளில், பொழுதுபோக்குகளில் என, நானும் ரஜினியும் அப்படியே வெவ்வேறு ரசனைகளும், விருப்பங்களும் கொண்டவர்கள்.

அதுபற்றிப் பேசும்போது, இருவருக்கும் பல கருத்து வேறுபாடுகள் வந்ததுண்டு. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் இருவருக்கும் ஒற்றுமை உண்டு. அது, நாங்கள் செய்யும் தொழிலான சினிமா பற்றிய பயம்!

ரஜினி, தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும், "இதுதான் நமது முதல் படம்'' என்கிற பயபக்தியுடன் கவனம் எடுத்துச் செய்வார். நானோ, "இதுதான் நான் செய்கிற கடைசிப்படம்'' என்கிற வெறியுடனும், வேகத்துடனும் உழைப்பேன். எங்களிடையே ஏற்பட்ட அன்பு, எப்போதும் அப்படியே இருக்கிறது. எங்களுக்குள் ஈகோ எதுவும் கிடையாது.''

மேற்கண்டவாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி : தினத்தந்தி)

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஆச்சர்ய கணிதம்


1 x 1 = 1
11 x 11 = 121
111 x 111 = 12321
1111 x 1111 = 1234321
11111 x 11111 = 123454321
111111 x 111111 = 12345654321
1111111 x 1111111 = 1234567654321
11111111 x 11111111 = 123456787654321
111111111 x 111111111=12345678987654321

>>>

1 x 8 + 1 = 9
12 x 8 + 2 = 98
123 x 8 + 3 = 987
1234 x 8 + 4 = 9876
12345 x 8 + 5 = 98765
123456 x 8 + 6 = 987654
1234567 x 8 + 7 = 9876543
12345678 x 8 + 8 = 98765432
123456789 x 8 + 9 = 987654321

>>>

1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
123456789 x 9 +10= 1111111111

>>>

9 x 9 + 7 = 88
98 x 9 + 6 = 888
987 x 9 + 5 = 8888
9876 x 9 + 4 = 88888
98765 x 9 + 3 = 888888
987654 x 9 + 2 = 8888888
9876543 x 9 + 1 = 88888888
98765432 x 9 + 0 = 888888888

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



மச்சத்தின் பலன்

ஆய கலைகள் 64-ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும்.

பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்

புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் & தனயோகம்
வலது புருவம் & மனைவியால் யோகம்
வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்
வலது கண் & நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்
இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி
மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்
வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்
இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்
காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்
வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலன்

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்
நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை & பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்
வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்
இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



லவ் பேர்ட்ஸ் (Love Birds)



வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளில் லவ் பேர்ட்ஸ்க்கு தனி இடம் உண்டு. கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும் சின்ன கூண்டு வைத்து இதில் இரண்டு ஜோடி பறவைகள் வரை வளர்க்கலாம். கீச் கீச் சத்தம் கேட்டாலே மனதில் மகிழ்ச்சி குடியேறும். இந்த பறவைகளை வளர்ப்பது தனி கலை. அவற்றை குழந்தைகள் போல பராமரித்தால் நம் கைகளில் வந்து விளையாடும்.

பறவைக் கூண்டுகள்

 பறவைக் கூட்டினை வீட்டின் மூலையில் கட்டி தொங்க விட வேண்டும். கூண்டில் இரண்டு சிறிய பானைகளை கட்டி விடுவது அவை முட்டை வைத்து அடை காக்க வசதியாக இருக்கும். அவை ஊஞ்சல் விளையாட ஒரு கட்டை வைப்பது அவசியம். அப்புறம் தீனி வைக்க ஒரு கிண்ணம், தண்ணீர் பாத்திரம் வைப்பது அவசியம். தண்ணீர் பாத்திரம் பாதுகாப்பனதாக இருக்கவேண்டும். இல்லை எனில் பறவைகள் அதில் விழுந்து வெளியேற முடியாமல் தவிக்கும்.


எப்பவாவது ஒரு முறை தண்ணில வைட்டமின் B போட்டுவிடுவோம்.

பறவைகளின் உணவு




லவ் பேர்ட்ஸ் பறவைகள் திணை விரும்பி சாப்பிடும். அப்புறம் சீமைப்பொன்னாங்கன்னி கீரை, பசளிக்கீரை தரலாம். முட்டைக்கோஸ், விதை நீக்கிய ஆப்பிள், புருக்கோலி, போன்றவைகளை உணவாக தரலாம்.

கூண்டுக்குள் ஒரு கணவா ஓடு போட்டு வைத்தால் அதை கொத்தி கொத்தி அலகை கூர் தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும்.

எறும்புகள் ஜாக்கிரதை

கூண்டிற்குள் நியூஸ் பேப்பர் விரித்து வைக்கவேண்டும். அவை கழிவுகளை அகற்ற எளிதாக இருக்கும். தினமும் தண்ணீர் வைக்கவேண்டும். அதில் வைட்டமின் பி மாத்திரை கலந்து வைத்தால் பறவைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும்.


பறவைகளின் தீனிக்கு எறும்பு வருவது வாடிக்கை. இது பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முட்டை போடும் பருவத்தில் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். குஞ்சு பொறித்த நேரத்தில் எறும்புகளிடம் இருந்து அவற்றை பாதுகாப்பது அவசியம். எனவே கூண்டைச் சுற்றி எறும்புக் கொல்லி சாக்பீஸ்களை பூசுவது பாதுகாப்பானது.

வீடுகளில் ஜோடியாக லவ்பேர்ட்ஸ் வளர்ப்பவர்கள் அவற்றில் ஒன்றை ஏதாவது காரணத்தால் இழக்க நேரிடுமாயின் மற்ற பறவையை தனியாக விடக்கூடாது.

பறவை இனங்களில் சில தனது ஜோடிப் பறவையை இழக்கும் போது தனிமையில் துயரடைந்து தலைகீழாகக் குதித்துக் குதித்து இறக்க முயற்சிக்குமாம்.

அதனால் ஒரு பறவையை இழக்க நேரிட்டால் உடனேயே போய் இன்னொரு பறவையை வாங்கி வந்து அதனுடன் சேர்த்து தனிமையைப் போக்கிவிட வேண்டும் என்று பறவை வளர்ப்பு பிரியர் ஒருவர் ஆலோசனை கூறுகிறார்.
( இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை ).

லவ்பேர்ட்ஸ் அடிக்கடி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். எனவே எளிதில் குடும்பம் பெருகுவதோடு நம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்.

மேலும்  லவ் பார்ட்ஸ் பற்றி  தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்  
http://ultimateparrot.gotop100.com/index.php

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 12 February 2012

தசாவதாரம் (Dasavathaaram)


விஷ்ணு புராணத்தில் திருமால் எடுத்த மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், இராமாவதாரம், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகிய 10 அவதாரங்களுக்கும் கமலஹாசன் தனது 10 வேடங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமையை கொண்டுவந்திருக்கிறார். எந்தெந்தெ வேடங்கள் திருமாலின் தசாவதாரங்களை பிரதிபலிக்கின்றன என்று பார்ப்போம்.


மச்ச (மீன்) அவதாரம் :




மச்ச அவதாரமானது நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காப்பதற்குத் தோன்றியது போல் ரங்கராஜ நம்பி திருமால் சிலையைக் காப்பாற்றும் போராட்டத்தின் இறுதியில் கடலில் சங்கமமாகி உயிரை விடுகிறான்.

கூர்ம (ஆமை) அவதாரம் :




     திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். திருப்பாற்கடலிலிருந்து அமிருதம் சுரக்க இறுதியில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. ஜார்ச் புஷ் உருவத்தில் ஆமையாக தோன்றாவிட்டாலும், உலக அரசியலில் அவர் வகிக்கும் முக்கிய பொறுப்பை இது எடுத்துக் காட்டுகிறது. அவர் எடுக்கும் சில முடிவுகளில் உலகத்தின் தலையெழுத்தையே மாற்றி விடும் வல்லமை அவர் ஏற்றிருக்கும் பொறுப்பிற்கு உள்ளது.

வராக (பன்றி) அவதாரம் :  



பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரண்யாக்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து பூமியை மறைத்து வைத்து பின் தனது மூக்கின்மேல் வைத்து வெளிக்கொணர்ந்து காப்பாற்றினார். கிருஷ்ணவேணி பாட்டி ‘முகுந்தா முகுந்தா’ பாடலுக்கு வராக அவதாரத்தை செய்து காட்டினார். அதோடு தபாலில் வந்த கிருமியை அலமாரியில் புகுந்து மறைந்துக் கொண்டு பின் வெளியே கொண்டு வந்து கோவிந்தராஜ சிலையினுள் போட்டுவிட்டு, அனைவரையும் கோவிந்தராஜக் கடவுள் காப்பாற்றிவிட்டதாகக் கூறுகிறார்.

நரசிம்ம (பாதி சிம்மம், பாதி மனிதன் )அவதாரம் : 



     திருமால் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம். சிங்கேன் நரஹசி எனும் சப்பானிய தற்காப்புக் கலைஞனிடம் நரசிம்ம அவதாரத்தின் ஒற்றுமைகளைக் காண முடிகிறது. அவனது பெயரிலேயே ‘சிங்’ சிம்மத்தைக் குறிக்கிறது. ‘நர’ மனிதனைக் குறிக்கிறது. நரசிம்மர் தனது இரண்டு கைகளால் இரணியனைக் கொன்றது போல், சிங்கேன் நரஹசி கிறிஸ்டியன் ஃப்லேட்சரை கொல்வதற்காக தனது தற்காப்புக் கலையைக் கொண்டே, அதாவது ஆயுதமின்றி கொல்லச் செல்கிறான்.

வாமன அவதாரம் : 



வாமன அவதாரத்தில், திருமால் பிராமண சிறுவனாகத் தோன்றி, மகாபலி அரசனிடம் மூன்றடி மண் கேட்டு வானுயர வளர்ந்து மூவுலகத்தையும் அளந்து இறுதியில் மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது அழுத்தி வதம் செய்தார். அதேப்போல், வானுயர வளர்ந்த வாமனரைப் போல், கலிஃபுல்லா கான் உயர்ந்த மனிதராக வளம் வருகிறார்.

பரசுராமவதாரம் :



     பரசுராமர் ஜமதக்னி முனிவருக்குப் பிறந்தவர். பரசு என்றால் கோடரி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடரியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். பாசுராமர் தனது வில்லையும் அமபையும் கொண்டு சத்திரியர்களின் 21 பரம்பரைகளையும் அழித்தார். கிறிஸ்டியன் ஃப்லேட்சர் பரசுராமரைப் போல் பழைய ஆயுதமான கோடரி, அம்பு, வில் வைத்திருக்காவிட்டாலும், நவீன ஆயுதமான துப்பாக்கி கொண்டு அனைவரையும் கொல்கிறார்.

இராமாவதாரம் :



     இல்லறத்திற்கு உகந்த தலைவனாக எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் இராமர். இவர் தனது மனைவி சீதா பிராட்டியாரின் மீது வைத்திருந்த பாசம் அலாதியானது. தனது மனைவியை இராவணனிடமிருந்து காப்பாற்றுவதற்கு அவர் அனைத்தையும் இழந்தார். அவதார் சிங் வேடம் இராமாவதாரத்தின் ஒற்றுமைகளை வெளிப்படுத்துகிறது. இசையா அல்லது மனைவியா என முடிவெடுக்கும் ஒரு இக்கட்டான நிலைக்கு அவதார் சிங் தள்ளப்படுகிறார். இறுதியில் மனைவிதான் தனக்கு முக்கியம் என மனைவி மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறார்.

பலராமர் அவதாரம் : 



     பலராமர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் கிருஷ்ணருடைய அண்ணனாவார். பல்ராம் நாயுடு எனும் பெயர் கொண்ட சி.பி.ஐ வேடம் பலராமர் என்ற பெயருடன் ஒன்றியுள்ளது.

கிருஷ்ணாவதாரம் : 




    வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார். வின்செண்ட் பூவராகன் வேடம் கிருஷ்ணவதாரத்தை பிரதிபலிக்கிறது. நிறத்தில் இருவரும் கறுப்பு. திரௌபதியின் மானத்தைக் காப்பாற்ற கிருஷ்ணர் சேலையைக் கொடுத்ததுபோல், ஆண்டாளின் சேலையை மணல் திருடன் பிடித்து இழுக்கும் வேளையில் பூவராகன் அங்கேத் தோன்றி கற்பழிப்பு முயற்சியைத் தடுக்கிறார். கிருஷ்ணர் தனது இறுதி காலத்தில், வேடன் ஒருவன் தவறுதலாக அவரது காலில் விஷ அம்பெய்ய அவர் விண்ணுலகம் செல்கிறார். அதேப்போல், பூவராகன் சுனாமியின் போது ஒரு காரில் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு இரும்புத் தூண் அவர் காலில் குத்தி அவரை அங்கிருந்து நகரமுடியாமல் செய்து விடுகிறது. பூவராகன் இரும்புத்தூணை அகற்ற முயற்சி செய்தும் பலனளிக்காமல் நீரில் மூழ்கி இறக்கிறார்.

கல்கி அவதாரம் :



    கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும். கோவிந்த ராமசாமி என்கிற உயிரியல் விஞ்ஞானி கல்கி அவதாரத்தோடு ஒன்றிய ஒரு பாத்திரமாகும். தீயவைகளை அழித்து உலகைக் காக்க வரும் கல்கி அவதாரத்தைப்போல், கிருமி பரவாமல் உலகத்தைக் காப்பாற்ற கோவிந்த ராமசாமி கடுமையாக முயற்சிக்கிறார். இறுதியில் வெற்றியும் பெறுகிறார்.

     கிருத்துவ பைபிளில் உலகம் அழியும் தருவாயில் யேசுநாதர் ஒரு பெரிய படகை அனுப்பி பக்தர்களைக் காப்பாற்றுவார் எனக் கூறுகிறது. அதேப்போல் இப்படத்தில் சுனாமி அலையைக் கண்டதும் விஞ்ஞானியும், தற்காப்புக் கலைஞனும், ஆண்டாளும் ஒரு படகில் ஏறிக் கொள்வார்கள். சுனாமி அலை ஓய்ந்ததும் அப்படகு ஒரு தேவாலயத்தின் மீது நங்கூரமிட்டிருக்கும்.

‘கேயோசு தியாரி’ அல்லது ஒழுங்கிண்மைக் கோட்பாடு எப்படி இப்படக் கருவில் மையமிட்டு கதையின் 10 அவதாரங்களையும் பகடைக் காய்களாய் நகர்த்தியுள்ளது.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 10 February 2012

பங்குச்சந்தை (A-Z)

பங்குச்சந்தை அடிப்படைகள் :-




பங்குசந்தையில் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்

 1 . பொறுமை
 2 . கற்றல் அறிவு
 3 . அதிர்ஷ்ட்டம்.

1 . பொறுமை 

இதுதான் பங்குசந்தையில் மிக முக்கியமான ஒன்று, எந்த ஒரு நேரத்திலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து விடக்கூடாது. அதேபோல் ஒரே நாளில் பணம் சம்பாதித்து விடவேண்டும், ஒரே மாதத்தில் இரட்டிப்பாக்கி விட வேண்டும் என்று நினைத்து நீங்கள் பங்குசந்தையில் நுழைந்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.


2 . கற்றல் அறிவு

ஒரு சிலர் பங்குசந்தையில் நுழைந்தவுடனே பணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் கண்ணா பின்னவென பங்குகளை வாங்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு கை சுட்டபின் தான் தெரியும் நான் செய்தது தவறு என்று. பங்குசந்தை என்பது முழுக்க முழுக்க நிறுவனத்தின் லாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயங்குவது இல்லை. அதில் பேரு முதலீட்டாளர்களின் விளையாட்டும் அடங்கி உள்ளதால் கண்டிப்பாக அடிப்படை மற்றும் தொழில்நுட்பப பகுப்பாய்வு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை கற்றுக்கொடுக்க இன்று தகுதியான இடம் தமிழகத்தில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. காரணம் நான் பார்த்தவரை பணம் பண்ணுவதில் தான் கருத்தாக இருக்கிறார்கள்.


3 . அதிர்ஷ்ட்டம் 

பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு கண்டிப்பாக அதிர்ஷ்ட்டம் இருக்க வேண்டும்.


பங்குச்சந்தைகளில் பெரும்பாலோனர் பணத்தை இழப்பது ஏன்?




1 . பேராசை


2 . நிதானமின்மை


3 . அதிகப்படியான ரிஸ்க் எடுத்தல்.


பங்குச்சந்தையில் வெற்றி பெற வழி



1 . Stock Selection (தேர்ந்தெடுத்தல்)

2 . Entry (செயல்படுத்தல்)

3 . Exit (வெளியேறுதல் )

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது மிக கடினம் ஆனால் பணத்தை விடுவது மிக எளிது. சந்தையில் வர்த்தகம் செய்யும் எவருக்கும் இந்த உண்மை கண்டிப்பாக தெரியும்.

நீங்கள் வைத்திருக்கும் பங்கை பற்றிய தகவல்களை நிறைய படியுங்கள்.

அதிர்ஷ்டத்தை நம்பி சந்தைக்கு வராதீர்கள்.

உபரி பணத்தில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

பகுதி பகுதி யாக முதலீடு செய்யவும்.

இறங்கும் சந்தையில் குறைந்த லாபத்திலோ அல்லது நட்டத்திலோ விற்று முதலீ ட்டை காப்பாற்றவும்

நல்ல பங்குகளை சந்தை சரிவை பயன்படுத்தி வாங்குங்கள்

உங்களுக்கென ஒரு வழிவகை வகுத்துக்கொண்டு (make a set of rules) அதை கண்டிப்பாக பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.

இவை அனைத்தும் என் சொந்த அனுபவமே (தொடரும் ...)

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday, 7 February 2012

பங்கு சந்தை





பங்கு சந்தை பற்றி மேலும் பல தகவல்கள் எழுத உள்ளேன் தொடர்ந்து ஆதரவு அளிக்கவும் 


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 5 February 2012

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு



பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர்.

அதில் ஒரு முக்கியமான வசதியாக கணணி இல்லாமல் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.

இதற்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும்.






மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:


முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.

அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும்.

இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்)

நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும் மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும்.

அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை:

மொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும்.

புதிய நண்பரை சேர்க்க – add your friend name.
Subcribe செய்ய – Subscribe your friend name.









இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஆன்லைனில் போட்டோஷாப்

ஆன்லைனில் போட்டோஷாப் இலவசமாக உபயோகிக்க - FREE ONLINE PHOTOSHOP EDITOR

 ஆன்லைனில்  போட்டோஷாப்  மென்பொருளை இலவசமாக உபயோகிக்க ஒரு அருமையான தளம் உள்ளது.


இந்த ஆன்லைன் எடிட்டரில் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள பல எண்ணற்ற வசதிகளும் உள்ளது. உபயோகிப்பதும் போட்டோஷாப் போன்றே உள்ளது. போட்டோக்களை facebook, picasa, flickr போன்ற தளங்களில் இருந்து நேரடியாக அப்லோட் செய்யும் வசதியும் உள்ளது. 



போட்டோஷாப் மென்பொருளை பணம் கொடுத்து வாங்க இயலாதவர்களுக்கு இந்த தளம் மிகப்பெரிய பரிசாகும். இனி போட்டோஷாப் மென்பொருள் இல்லையே என்ற கவலை இல்லாமல் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த மென்பொருளை உபயோகித்து கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு செல்ல - http://pixlr.com/editor/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



கலைச்சொல்லாக்கம்(LOGY)


1.
Anthropology
மானுடவியல்/ மானிடவியல்
2.
Archaeology
தொல்பொருளியல்
3.
Astrology
சோதிடவியல் (சோதிடம்)
4.
Astrology
வான்குறியியல்
5.
Bacteriology
பற்றுயிரியல்
6.
Biology
உயிரியல்
7.
Biotechnology
உயிரித்தொழில்நுட்பவியல்
6.
Climatology
காலநிலையியல்
7.
Cosmology
பிரபஞ்சவியல்
8.
Criminology
குற்றவியல்
9.
Cytology
உயிரணுவியல்/குழியவியல்
10.
Dendrology
மரவியல்
11.
Desmology
என்பிழையவியல்
12.
Dermatology
தோலியல்
13.
Ecology
உயிர்ச்சூழலியல்
14.
Embryology
முளையவியல்
15.
Entomology
பூச்சியியல்
16.
Epistemology
அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17.
Eschatology
இறுதியியல்
18.
Ethnology
இனவியல்
19.
Ethology
விலங்கு நடத்தையியல்
20.
Etiology/ aetiology
நோயேதியல்
21.
Etymology
சொற்பிறப்பியல்
22.
Futurology
எதிர்காலவியல்
23.
Geochronology
புவிக்காலவியல்
24.
Glaciology
பனியாற்றியியல்/ பனியியல்
25.
Geology
புவியமைப்பியல்/ நிலவியல்
26.
Geomorphology
புவிப்புறவுருவியல்
27.
Graphology
கையெழுத்தியல்
28.
Genealogy
குடிமரபியல்
29.
Gynaecology
பெண்ணோயியல்
30.
Haematology
குருதியியல்
31.
Herpetology
ஊர்வனவியல்
32.
Hippology
பரியியல்
33.
Histrology
இழையவியல்
34.
Hydrology
நீரியல்
35.
Ichthyology
மீனியியல்
36.
Ideology
கருத்தியல்
37.
Information Technology
தகவல் தொழில்நுட்பவியல்
38.
Lexicology
சொல்லியல்
39.
Linguistic typology
மொழியியற் குறியீட்டியல்
40.
Lithology
பாறையுருவியல்
41.
Mammology
பாலூட்டியல்
42.
Meteorology
வளிமண்டலவியல்
43.
Metrology
அளவியல்
44.
Microbiology
நுண்ணுயிரியல்
45.
Minerology
கனிமவியல்
46.
Morphology
உருவியல்
47.
Mycology
காளாம்பியியல்
48.
Mineralogy
தாதியியல்
49.
Myrmecology
எறும்பியல்
50.
Mythology
தொன்மவியல்
51.
Nephrology
முகிலியல்
52.
Neurology
நரம்பியல்
53.
Odontology
பல்லியல்
54.
Ontology
உளமையியல்
55.
Ophthalmology
விழியியல்
56.
Ornithology
பறவையியல்
57.
Osteology
என்பியல்
58.
Otology
செவியியல்
59.
Pathology
நொயியல்
60.
Pedology
மண்ணியல்
61.
Petrology
பாறையியல்
62.
Pharmacology
மருந்தியக்கவியல்
63.
Penology
தண்டனைவியல்
64.
Personality Psychology
ஆளுமை உளவியல்
65.
Philology
மொழிவரலாற்றியல்
66.
Phonology
ஒலியியல்
67.
Psychology
உளவியல்
68.
Physiology
உடற்றொழியியல்
69.
Radiology
கதிரியல்
70.
Seismology
பூகம்பவியல்
71.
Semiology
குறியீட்டியல்
72.
Sociology
சமூகவியல்
73.
Speleology
குகையியல்
74.
Sciencology
விஞ்ஞானவியல் (அறிவியல்)
75.
Technology
தொழில்நுட்பவியல்
76.
Thanatology
இறப்பியல்
77.
Theology
இறையியல்
78.
Toxicology
நஞ்சியல்
79.
Virology
நச்சுநுண்மவியல்
80.
Volcanology
எரிமலையியல்
81.
Zoology
விலங்கியல்

தொடரும்...


மேலும் உங்களுக்கு தெரிந்தால் Comments-இல் எழுதவும் நன்றி!!

பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!

எப்போதும் போல் உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பாக்கும் http://rajasekaranmca.blogspot.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்