Monday, 25 June 2012

உயரமான குடும்பம்

இந்தியாவின் உயரமான குடும்பம்

உலகிலேயே உயரமான குடும்பம் என்ற உலக சாதனையை படைத்துள்ளனர் பூனே ஐ சேர்ந்த இந்தியாவின் குடும்ப அங்கத்தவர்கள்.

குடும்ப தலைவரான ஷராட் குல்கர்னி (வயது 52) 7 அடி 1.5 இஞ்ச், குடும்ப தலைவி ஷஞ்யொட் (வயது 46) 6 அடி 2.6 இஞ்ச், மற்றும் இவர்களின் மகள்களான12 வயதாகும் ம்ருகா (6 அடி 1 இஞ்ச்), 16 வயதாகும் ஷன்யா (6 அடி 4 இஞ்ச்) ஆகியோரே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரர்கள்.



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



சேகுவேரா: புரட்சி நாயகன்!

சேகுவேரா: புரட்சி நாயகன்!



சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்ஸியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடம் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடி போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சேகுவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9-1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது .

பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.

தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.

இளமைக்காலம்

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய ,பாஸ்க்கு,ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ்,போல்க்னா,கைடே,சல்காரி,வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா,காமுஸ்,லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ்,வெல்ஸ்,புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்

எழுத்தாளர்களானகுயிரோகா,அலெக்ரியா,இக்காசா,டாரியோஆஸ்ட்டுரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவன்ஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா,பெரு,ஈக்குவிடார்,பனாமா,கொஸ்தாரிக்கா,நிக்கரக்குவா,ஹொண்டுராஸ், சல்வடோ ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ்குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.

குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன.

இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்….

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பணம் சேமிக்கும் வழிகள்

பணம் சேமிக்கும் வழிகள்

1. ஒவ்வொரு மாதமும், உங்கள் வரவு மற்றும் செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள்.
2. ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்க்கு முன்பு, அது உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆராய்வது மிகவும் அவசியும். நீங்கள் வாங்கும் பொருள் ஆடம்பரத்திற்க்காக இருந்தால், அதை வாங்குவதை தவிர்க்கவும்.
3. ஒவ்வொரு பொருளையும் பேரம் பேசி வாங்குகள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முன்பு அதன் விலையை 2 அல்லது 3 கடைகளில் பேரம் பேசி வாங்குவது நல்லது.
4. உணவு விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்கள் பணத்தை கரைப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடலுக்கு பல உபாதைகளை விளைவிக்கும்.
5. வங்கிகளில் கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கவும். கடன் ஆரம்பத்தில் உங்களது தேவைகளை புர்த்தி செய்தாலும், அது போக போக உங்களுக்கு வட்டி என்ற நீண்ட கால சுமையை தரும்.
6. நீங்கள் உபயோகிக்கும் பொருள் பழுதடைந்து விட்டால், புதிய பொருளை வாங்குவதற்க்கு பதிலாக, அதே பழைய பொருளை பழுது பார்த்து உபயோகிக்கலாம்.
7. நீங்கள் குடி பழக்கம் உள்ளவரா அல்லது புகை பிடிப்பவராக இருந்தால், குடி மற்றும் புகை பழக்கத்தை குறைத்துக்கொள்வது அல்லது முற்றிலுமாக நிறுத்திக்கொள்வது நல்லது.
8. இரவு நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை தேவைபட்டால் மட்டும் உபயோகிக்கலாம். உதாரணமாக யாரும் இல்லாத அறைகளில் எரியும் விளக்குகளை அணைப்பது வீட்டிற்க்கும்/நாட்டிற்க்கும் நல்லது.
9. குண்டு மின்சார விளக்குகளுக்கு பதிலாக U–வடிவ CFL (CompactFluorescent Light) மின்சார விளக்குகளை உபயோகிகளாம். இவைகள் 40%-லிருந்து 60%-வரை மின்சாரத்தை சேமிக்கும்.
10. சத்துள்ள உணவுகளை மூன்று வேலைக்கு சாப்பிட்டு, காலையிலும், மாலையிலும் உடற்பயிர்ச்சி செய்துவந்தால் உங்களுக்கு எந்தவித நோயும் அண்டாது. இது மருத்துவத்துக்காக செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தும்.
11. உங்கள் வீட்டு மளிகை சாமான்களை மாதத்திற்க்கு ஒரு முறை வாங்கி வைப்பது நல்லது. நீங்கள் மளிகை சாமான்களை Wholesaleகடைகளில் வாங்குவது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும். இருந்தபோதிலும் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் தரமாக இருக்கிறதா என்பதை ஆய்ந்து வாங்குவது நல்லது.
12. சில மளிகை சாமான்கள் சில Offer-டன் வரும். அது போன்ற சாமான்களின் தரத்தை ஆராய்ந்து வாங்குவது நல்லது.
13. நீங்கள் தொலைபேசிகளை உபயோகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தொலைபேசியில் ஒவ்வொரு முறை பேசுவதற்க்கு முன்பு, நீங்கள் அடுத்தவருக்கு என்ன தெரியபடுத்த விறும்பிகிறீர்கள் அல்லது நீங்கள் என்ன அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள விறும்பிகிறீர்கள் என்பதை அராய்ந்து அதன்பின் பேசுவது நல்லது.
14. Post-paid-ஐ விட Pre-paid plan சிறந்தது. ஏனென்றால், PrePaid-ல் நீங்கள் உங்களது தொலைபேசி இறுப்பு தொகையை ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது உங்கள் பேசும் நேரத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கும்.
15. நீங்கள் செல்லும் இடம் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தால் வாகனத்தை பயன்படுத்தாமல் நடந்து செல்வது உங்கள் பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல் உங்களது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிர்ச்சியாக இருக்கும்.
16. நீங்கள் தனியாக ஒரு இடத்திற்க்கு சில வேலை காரணமாக செல்வதாக இருந்தால் 2 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் 4 சக்கர வாகனத்தை பயன்படுத்தலாம்.
17. உங்கள் வீட்டு மின்சாரம் மற்றும் தண்ணி கட்டனங்களை கடைசி தேதிக்குள் கட்டுவது நல்லது. மேலும் அவைகளை online-ல் கட்டுவது உங்கள் வாகன எரி பொருளை சேமிக்கும்.
18. உங்கள் வீட்டில் பயன்படுத்த படாத பழைய பொருட்களை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நல்ல உபயோகமான பொருட்களை வாங்களாம்.
19. நிறைய துணிகள் மிக குறைந்த விலையில் நல்ல தரத்துடன் கிடைக்கும் போது, நீங்கள் ஏன் Branded துணிகளை வாங்க வேண்டும்? எதுக்கெடுத்தாலும் Branded துணிகளையே வாங்காதிர்கள்.
20. உணவை ஒருபோதும் வீணாக்காதிர்கள். இது உங்களுக்கு நல்ல சேமிப்பை ஈட்டி தருவது மட்டுமில்லாமல், வீணாக்கபடாத அந்த உணவு ஏழை மக்களுக்கு மறைமுகமாக போய் சேரும் புன்னியத்தை அடைவீர்கள்.
21.கண்களுக்கு தென்படும் எல்லா பொருட்களையும் வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். கடைக்கு சென்றாலும் தேவையான பொருட்களை மட்டும் கொள்வனவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
22.வருமானத்துக்கு மீறிய செலவுகள் செய்ய பழகிக்கொள்ள வேண்டாம். கடன் வாங்கி நாளாந்த செலவுகளை மேற்கொள்ள வேண்டாம். கடனட்டை (Credit Card) என்றாலும் அவசியமான நேரங்களில் மட்டும் பாவிப்பது சிறந்தது. கடனட்டைக்கான மாதாந்த கட்டணங்களை வட்டி சேர்வதற்கு முன் செலுத்துங்கள்.
23.மாதாந்த மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்ற கட்டணங்களை முடியுமான அளவு குறைத்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 17 June 2012

அதிசய மனிதர்


39 பெண்களை மணந்து 160 பேருடன் ஒரே வீட்டில் வசிக்கும் அதிசய மனிதர் 

மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.


முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.

நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைசி திருமணம் செய்து கொண்டார். ஒட்டு மொத்த குடும்பத்தினரும், ஒரே சமையல் அறையில் சமைத்து, ஒன்றாக சாப்பிடுகின்றனர்.

காலை உணவுக்கு 50 கிலோ அரிசியும், இரவு உணவுக்கு 35 முதல் 50 கிலோ தானியத்தையும் சமைக்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு நாளும் 25 கிலோ உருளைக்கிழங்கு, 15 கிலோ பருப்பு மற்றும் ஏராளமான அளவில் காய்கறிகள் இவர்களின் வீட்டிற்கு தேவைப்படுகின்றன. மாமிசம் சமைத்தால், ஒரு நாளைக்கு 45 கிலோ மாமிசம் சமைக்கின்றனர்.

வீட்டு வேலைகளில் யார், யார் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை முதல் மனைவி தீர்மானிக்கிறார். வீட்டில் உள்ள ஆண்களை மற்ற வேலைகளுக்கு அனுப்புகிறார் சையோனா. வீடு கட்டுமானப் பணி மற்றும் தோட்ட வேலைகள் போன்றவற்றுக்கும் ஆட்களை அனுப்புகிறார்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 15 June 2012

வங்கிகளில் பணம் அனுப்ப

ஒரே வங்கியின் இரு வேறு கிளைகளில் இருந்து பணம் அனுப்பவது எளிதான விஷயம், ஆனால், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்ப,

1) ஆர்டிஜிஎஸ் (RTGS)

2) என்இஎப்டி நம்பர் (NEFT)



ஆர்டிஜிஎஸ் என்பது Real Time Gross Settlement.
என்இஎப்டி என்றால் National Electronic Funds Transfer.

ஆர்டிஜிஎஸ் என்பது நீங்கள் பணத்தை அடுத்தவரின் கணக்குக்கு அனுப்பியவுடனே அது அவரது கணக்குக்கு உடனடியாகப் போய்விடும். என்இஎப்டியில் பணப் பரிமாற்றம் நடக்க 1 மணி நேரத்துக்கு மேலாகும்.
குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்தைத் தான் ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்ப முடியும். ஆனால், என்இஎப்டி மூலம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஆனால், என்இஎப்டி மூலம் அனுப்பினால் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும் தான் பணம் அனுப்ப முடியும். திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு நாளைக்கு 9 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். 

சனிக்கிழமைகளில் 5 கட்டங்களாக பணப் பரிவர்த்தனை நடக்கும். நீங்கள் 9 மணிக்கு பணத்தை போட்டால் அது 10 மணிக்குத் தான் அடுத்தவர் கணக்குக்குப் போகும். 10 மணிக்குப் போட்டால் 11 மணிக்குத் தான் போகும். அதாவது 1 மணிக்கு ஒருமுறை தான் பண டிரான்ஸ்பர் நடக்கும்.
ஆர்டிஜிஎஸ் மூலம் அனுப்பினால் உடனடியாக பணம் போய்ச் சேர்ந்துவிடும்.

கட்டணம் எவ்வளவு?:

என்இஎப்டி  மூலம் 

ரூ. 1 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 5 பிளஸ் சேவை வரி.
ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை அனுப்ப கட்டணம் ரூ. 15 பிளஸ் சேவை வரி.
ரூ. 2 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 25 பிளஸ் சேவை வரி


ஆர்டிஜிஎஸ் மூலம் 

 ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரைஅனுப்ப கட்டணம் ரூ. 30 கட்டணம்
ரூ. 5 லட்சத்துக்கு மேல் அனுப்ப கட்டணம் ரூ. 55 ஆகும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்