Sunday, 12 May 2013

5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?


ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வசதிகள் ஏராளமானது. அந்த வசதிகளுள் ஒன்று தான் 10 GB வரையிலான File – களை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி.

10 GB வரை File களை அனுப்பும் வசதி நமக்கு கூகுள் டிரைவ் மூலம் தரப்படுகிறது. கூகுள் டிரைவில் ஜிமெயில் பயனர்கள் ஒவ்வொருவருக்கும் 5 GB இலவச Space தரப்பட்டிருக்கும். எனவே இலவசமாக 5 GB வரை அனுப்ப முடியும். 10 GB வரை அனுப்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே இலவசமாக அனுப்ப வழி தரும் 5GB யை நாம் பார்ப்போம்.



ஜிமெயிலில் இருந்து அனுப்ப:

கூகுள் டிரைவ் மூலம் என்றாலும் File – களை நீங்கள் உங்கள் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம். இதற்கு நீங்கள் புதிய Composing Method ஐ உபயோகிக்க வேண்டும்.

புதிய மெயில் Compose செய்யும் போது + Icon மீது கிளிக் செய்தால் Google Drive Icon வரும் அதை கிளிக் செய்து File ஐ Upload செய்திடலாம்.


ஏற்கனவே Upload செய்திருந்த File என்றால் My Drive என்பதில் இருந்து File – ஐ தெரிவு செய்து கொள்ளலாம்.

கூகுள் டிரைவில் இருந்தே அனுப்ப

முதலில் Google Drive தளத்துக்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் Sign in செய்து கொள்ளுங்கள். இப்போது வரும் பக்கத்தில் இடது புறம் உள்ள Upload Icon மீது கிளிக் செய்யுங்கள்.



அதில் Files அல்லது Folder என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள். ஒரே ஒரு File என்றால் File, நிறைய File என்றால் Folder.

இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு File அல்லது Folder - ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். 5GB க்கு மேல் இருந்தால் Not enough storage என்று வந்து விடும். எனவே 5GB உள்ளதை கொடுத்து விட்டால் சில மணி நேரங்களில் அது Upload ஆகி விடும்.


Upload ஆன பின் குறிப்பிட்ட File அல்லது Folder – ஐ நீங்கள் Drive – இல் காணலாம். அந்த File ஐ Check செய்து விட்டு More என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது Share பகுதியில் நீங்கள் Email As Attachment என்பதை கிளிக் செய்து File – ஐ குறிப்பிட்ட நபருக்கு மின்னஞ்சல் செய்து விடலாம்.

நன்றி - பிரபு கிருஷ்ணா

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?

தகவல்கள்



எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.



கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

- நீரை.மகேந்திரன்.

நன்றி -இணையம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 21 April 2013

டிரைவிங் லைசென்ஸ்(Driving Licence)

பழகுநர் உரிமம் எடுக்க (LLR) குறைந்தபட்ச தகுதிகள் என்ன?

உங்களுக்குப் பதினாறு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு குறைவான கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். பதினெட்டு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு மேற்பட்ட கியர் வாகனங்கள்(மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள்) , இலகு ரக (கார், ஜீப்) வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம். இருபது வயது முடிந்திருந்தால், இலகு ரக போக்குவரத்து வாகனங்கள்(வாடகை கார், ஆட்டோ, வேன்) ஓட்ட லைசென்ஸ் பெறலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

1. முகவரி ஆதாரம் (உ&ம்: குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்).

2. வயது ஆதாரம் (உ&ம்: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்).

3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகள். அதோடு படிவம் & 1 (இந்தப் படிவத்தில் ‘அ’ இணைப்பில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர் உங்களைப் பரிசோதித்து, ‘நீங்கள் வாகனம் ஓட்டத் தகுதியானவர்தான்’ எனச் சான்றளிக்க வேண்டும்), மற்றும் படிவம் & 3 (இரண்டு பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்.).

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் மட்டும் படிவம் 14 இணைக்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களை நிரப்பி, ரூ.30/& செலுத்தி பழகுநர் உரிமம் (LLR) பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமத்தை ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு, ஓட்டுநர் உரிமம்(Driving licence) லிவீநீமீஸீநீமீ) பெற கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். பழகுநர் உரிமம் பெற அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம்.

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4&ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும் (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் படிவம் 5 இணைக்க வேண்டும்).

மேலும், இத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்: 1. பழகுநர் உரிமம், 2. வாகனத்துக்கான ஆவணங்கள் (பதிவுச் சான்றிதழ், இன்ஷ¨ரன்ஸ்), 3.பிறருடைய வாகனமாக இருந்தால், அத்தாட்சிக் கடிதம், 4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

இவற்றுடன் உரிமம் வழங்க ரூ. 200&ம் தேர்வுக் கட்டணமாக ரூ.50&ம் செலுத்த வேண்டும்.

எவ்வாறு பரீட்சை நடைபெறுகிறது?

வாகனம் ஓட்டவும் சாலை விதிகளும் கற்றுக்கொண்ட பிறகு, வாகன ஆய்வாளர் முன்பு இரு சக்கர வாகனம் என்றால் 8 போன்ற வளைவுச் சுற்றுக்குள் ஓட்டிக் காட்ட வேண்டும். (இது உரிமம் வழங்கும் வழிகாட்டுதல் விதியின்படி 8 போன்ற வளைவுக்குள் ஓட்டினாலே அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், இதில் ஓட்டிக் காட்ட கூறப்படுகிறது) இலகு ரக வாகனம் என்றால், ஆய்வாளர் அருகில் அமர்ந்திருக்க, சாலையில் அனைத்து கியர்களிலும் நாம் சரியாக ஓட்டிக் காட்டினால் ஆய்வாளர் உரிமம் வழங்க பரிந்துரைப்பார். அதன் பின்னர்தான் உரிமம் வழங்கப்படும். இந்தத் தேர்வின்போது வளைவுகளில் திரும்பும்போது, நிறுத்தும்போது உரிய சைகைகள் செய்கிறீர்களா என ஆய்வாளர் கவனிப்பார். சரியாகச் சைகைகள் செய்தால்தான் உரிமம் கிடைக்கும். இதில் தோல்வி அடைந்தால், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டிக் காட்டிதான் உரிமம் பெற முடியும்.

வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்பவர்கள், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு புதிய முகவரிக்கு மாற்றுவது?

உதாரணத்துக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகிப் போகிறீர்கள் என்றால், திருச்சியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேராகச் சென்று பழைய உரிமத்தைக் கொடுத்துவிட்டு புதிய விலாசம் கொண்ட உரிமத்தை வாங்க முடியாது.

விலாசம் மாற்றப்பட்ட புதிய உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கே உங்களுக்கு பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் தேவைப்படும்.

உங்கள் பழைய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மனு ஒன்றை எழுதி, அத்துடன் உங்கள் உரிமத்தின் நகலையும் இணைத்து, சுய விலாசமிட்ட உறையுடன் அனுப்ப வேண்டும். மனுவில் நீங்கள் தற்போது மாற்றலாகிப் போயிருக்கும் ஊரின் முகவரி, அது எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சரகத்தில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். உங்கள் மனுவை பரிசீலித்து பதிவேடுகளில் உங்கள் உரிம நகலை ஒப்பிட்டுப் பார்த்து ‘உண்மையான உரிம நகல்தான்’ என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சான்றிதழ் வழங்குவார். அதை உங்களுக்கு அனுப்பி வைப்பார். அந்தச் சான்றிதழுடன் தற்போது வசிக்கும் இருப்பிடச் சான்றையும், ஒரிஜினல் உரிமத்தையும் இணைத்து புதிய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தால், முகவரி மாற்றப்பட்ட புதிய உரிமம் கொடுப்பார்கள்.

உரிமம் புதுப்பிக்காமல் பல ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் புதிதாகத்தான் எடுக்க வேண்டுமா?

இல்லை. வருடத்துக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் செலுத்தினால் புதுப்பித்துத் தரப்படும்.

உரிமம் புதுப்பிக்காமல் இருக்கும்போது, வாகனம் ஓட்டி விபத்து நேர்ந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

உரிமத்தின் கடைசி தேதி முடிந்து 30 நாட்கள் வரை அது செல்லுபடியாகும். அதற்குப் பின்னர், உரிமம் இல்லாமல் ஓட்டினால் கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதே நடவடிக்கைதான் இதற்கும் பொருந்தும். உரிமம் இல்லையென்றால் வாகனத்துக்கோ, ஓட்டியவருக்கோ அல்லது வாகனத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ஆகவே, உரிமம் இல்லையென்றால் வாகனம் ஓட்டாமலிருப்பது பொதுமக்களுக்கும், ஓட்டுபவருக்கும் நல்லது.

அசல் உரிமம் தொலைந்து போனால், வேறு புதிய உரிமம் எடுக்கலாமா?

கூடாது. ஏனென்றால், தொலைந்துபோன உங்கள் உரிமத்தை வேறொருவர் தவறாக உங்கள் பெயரில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உங்கள் உரிமம் எப்போது, எங்கு தொலைந்துபோனது என்பதைக் குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். இந்த புகாருடன் தொலைந்து போன உங்கள் உரிமத்தின் நகலையும் இணைக்க வேண்டும். அவர்கள் அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்துகொண்டு தேடிப்பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு ‘நகல் உரிமம்’ தர பரிந்துரை செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். போக்குவரத்து அலுவலகத்தில் பதிவேடுகளில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்துகொண்டு நகல் உரிமம் வழங்குவார்கள்.

உரிமத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்?

டிரைவிங் லைசென்ஸ் அதிகபட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அதாவது அந்த 20 வருடங்கள் உங்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கும்போது மருத்துவர் உங்களைப் பரிசோதித்து மனநிலை மற்றும் உடல்நிலை வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது எனச் சான்றளிக்க வேண்டும். அதேபோல் நீங்களும் ‘என் மனநிலையும் உடல்நிலையும் சரியாக இருக்கிறது’ என ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Thanks to innayam

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



மொபைல் நம்பரை கண்டுபிடிக்க

நீங்கள் எந்த ஒரு நிறுவனத்தின் அலைப்பேசி சேவையைப் பயன்படுத்தினாலும், உடனடியாக நீங்கள் உங்களுடைய அலைப்பேசி எண்ணைத் தெரிந்துகொள்ள கீழிருக்கும் குறுக்கு வழிகள் உங்களுக்குப் பயன்டும்.

  • Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
  • Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
  • Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
  • Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *777*0#
  • Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
  • Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
  • Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
  • Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# 
  • நீங்கள் Tata Decomo Mobile சேவையைப் பயன்படுத்தினால் 580# என்ற குறியீட்டை உள்ளிட்டு Ok அழுத்தினால் உங்களுடைய மொபைல் எண் அலைபேசித் திரையில் தோன்றும்.
ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்தி உடனடியாக தங்களுடைய Mobile Number - ஐ உடனடியாக தெரிந்துகொள்ள முடியும்.

நன்றி :- இணையம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



வீடியோ வெப்சைட்கள்




வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில் எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன.


நாங்கள் இங்கே 10 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.


இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.


நீங்கள் யூடியூப் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் பின்வரும் வீடியோ வெப்சைட்களையும் பாருங்கள்.


1. YouTube
Alexa Rank -3.

================

2.Netflix
Alexa Rank -100

================


3.Hulu

Alexa Rank -171

================

4.DailyMotion
Alexa Rank - 101

===============

5.MetaCafe

6.Myspace Video

7.Yahoo Screen

8.Vimeo

9.Break

10.Tv.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



புளூடூத்











900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.


தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார்.


இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர்.


இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர்.


மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday, 20 April 2013

பைல் கன்வெர்ட்டர்(File Convertor)-02

நாம் சில சமயங்கள் வேலை செய்யும் போது இன்ச் அளவுகளை செண்டிமீட்டர்களில் எவ்வளவு என தெரிந்துகொள்ள விரும்பலாம். அதற்கு எப்படி அதை செய்வது என குழம்பி கொண்டிருக்கலாம். இவ்வளவு ஏன் நாம் சமையல் செய்யும்போது ஒரு கப் சர்க்கரை, இரண்டு மேஜைகரண்டி எண்ணெய் என அளவுகளை பார்த்திருப்போம். இவற்றிற்க்கான லிட்டர் மில்லிலிட்டர் அளவுகள் நமக்கு தெரியுமா! இது போன்று அளவுகளை மாற்ற நாம் விரும்பினால் அனைத்தையும் ஒரே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

http://www.convert-me.com

நிறை மற்றும் எடை(Mass and Weight),
தூரம் மற்றும் நீளம்(Distance and Length),
கொள்ளளவு மற்றும் கனஅளவு(Capacity and Volume),
பரப்பு(Area),
வேகம்(Speed),
முடுக்கம்(Acceleration),
வெப்பநிலை(Temperature),
நேரம்(Time),
அழுத்தம்(Stress and Pressure),
ஆற்றல்(Energy and Work),
திறன்(Power),
விசை(Torque),
பாய்ம வீதம்(Flow rate by volume, Flow rate by mass),
வட்ட அளவு(Circular measure),
கணிப்பொறி(Computer storage),
தகவல் பரிமாற்றம்(Data transfer rate),
எரிபொருள் சிக்கனம்(Fuel Economy),
சமையல்(Cooking),
பின்னம் மற்றும் சதவீதம்(Fractions and Percent)
பண மாற்று வீதம்(Currency Rates)இவைகளை பல அலகுகளில்(unit) மாற்றி கண்டறியலாம்.

நன்றி:- இணையம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பைல் கன்வெர்ட்டர்(File Convertor)-01

ஒரு வகை கோப்பை மற்றொரு வகை கோப்பாக மாற்ற வேண்டியிருக்கும். இந்த வசதியை சில இணையதளங்கள் ஆன்லைனில் இலவசமாக அளிக்கின்றன.

அவற்றில் ஒன்று. http://www.youconvertit.com/

இந்த இணைய தளத்தில் நாம் இலவசமாக பதிவுசெய்து கொண்ட பிறகு நமக்கு 1GB இடம் அளிப்பார்கள், அந்த இடத்திற்குள் நாம் கோப்புகளை மாற்ற அப்லோட் செய்யலாம். மாற்றப்பட்ட கோப்புகளுக்கான லிங்க் நம் மின்னஞ்சலுக்கு வரும். மேலும் இந்த லிங்க் மேற்கண்ட இணையதளத்தில் நம் கணக்கிலும் இருக்கும்.

1GB இடம் வரை நாம் கோப்புகளை மாற்றிக் கொள்ளலாம் இடம் நிரம்பி விட்டால். ஏற்கனவே உள்ளவைகளை அழித்து விடலாம். எனவே அந்த 1GB ஸ்பேஸ் அப்படியே இருக்கும்.

இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பு pdf to wordக்கு ஒரு இணையதளம் விடியோ பைல்களுக்கு ஒரு இணையதளம், இமேஜ் பைல்களுக்கு ஒரு இணையதளம் என்றில்லாமல் எல்லாவித ஃபைல்களையும் ஒரே இடத்தில் கன்வர்ட் செய்ய முடிகிறது.

இங்கே கன்வர்ட் செய்யக்கூடிய பைல் பார்மட்டுகள்:
Document file formats: Csv, Doc, html, ods, odt, pdf, rtf, sdc, sdw, stc, stw, sxc, sxw, vor, xhtml, xls, xlt
Audio file formats: Aac, aif, aiff, mp3, ra, wav, wma
Video file formats: asf, flv, mov, mp4, mpeg, mpg, rm, swf, wmv
Image file formats: Bmp, dpx, gif, jpeg, pam, pbm, pcx, pgm, png, ppm, ras, sgi, tga, tif, tiff, yuv
Archive file formats: 7z, bz2, bzip2, gz, gzip, tar, tbz, tbz2, tgz, zip

நன்றி:-  இணையம் 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Friday, 19 April 2013

ALT+கணினி டிப்ஸ்




HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD

Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered ­ trademark symbol
Alt + 0176 ...°......degre ­e symbol
Alt + 0177 ...±....plus-or ­-minus sign
Alt + 0182 ...¶.....paragr ­aph mark
Alt + 0190 ...¾....fractio ­n, three-fourths
Alt + 0215 ....×.....multi ­plication sign
Alt + 0162...¢....the ­ cent sign
Alt + 0161.....¡..... ­.upside down exclamation point
Alt + 0191.....¿..... ­upside down question mark
Alt + 1.......☺....sm ­iley face
Alt + 2 ......☻.....bla ­ck smiley face
Alt + 15.....☼.....su ­n
Alt + 12......♀.....f ­emale sign
Alt + 11.....♂......m ­ale sign
Alt + 6.......♠.....s ­pade
Alt + 5.......♣...... ­Club
Alt + 3.......♥...... ­Heart
Alt + 4.......♦...... ­Diamond
Alt + 13......♪.....e ­ighth note
Alt + 14......♫...... ­beamed eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)
Alt + 251.....√.....s ­quare root check mark
Alt + 8236.....∞..... ­infinity
Alt + 24.......↑..... ­up arrow
Alt + 25......↓...... ­down arrow
Alt + 26.....→.....ri ­ght arrow
Alt + 27......←.....l ­eft arrow
Alt + 18.....↕......u ­p/down arrow
Alt + 29......↔...lef ­t right arrow

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday, 15 January 2013

பீடிஎஃப் ஃபைல் (pdf file)

இன்றைய கணினி பயன்பாட்டாளர்கள் பீடிஎஃப் ஃபைல்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. சில பீடிஎஃப் ஃபைல்களில் சில பக்கங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். அதுபோல சில பக்கங்களை நீக்க வேண்டி இருக்கும்.

 சில பீடிஎஃப் ஃபைல்களை ஒன்று சேர்த்து ஒரே பீடிஎஃப் ஃபைலாக மாற்ற வேண்டி இருக்கும். இந்த மென்பொருளை கீழே உள்ள லிங்க்கில் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.இதில் ADD பட்டனை கிளிக் செய்தோ டிராப் செய்தோ பீடிஎஃப் ஃபைல்களை
கொண்டு வரலாம். இதில் குறிப்பிட்ட பக்கத்தை நீக்க, சேர்க்க, பிரிக்க என பல வசதிகள் உள்ளது. நீங்கள் பக்க எண் மட்டும் கொடுத்தால் போதுமானது. ஒற்றை பக்க எண்களிலோ, இரட்டை பக்க எண்களிலோ எதை வேண்டுமானாலும் நீக்கவோ, சேர்க்கவோ, பிரிக்கவோ செய்யலாம். இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பீடிஎஃப் ஃபைல்களை ஒரே ஃபைலாக மாற்றி விடலாம். நீங்கள் பக்க வரிசைப்படி பிரித்து விடலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அவ்வாறு செய்து பின்னர் கீழே உள்ள டேக் ஆப்ஷன் கிளிக் செய்தால் போதுமானது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



சேமிப்பு & முதலீடு (Savings & Invesment)

தங்கமான சேமிப்பு!

1. காலம் காலமாக பின்பற்றப்படும் சேமிப்பு, தங்கம். அதன் மீதான சேமிப்பு புத்திசாலித்தனமான ஒன்று.

2. டாலர், பவுண்ட் உட்பட எந்தப் பணமானாலும் அதன் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு. ஆனால், தங்கத்தின் மதிப்பு மட்டும் எப்போதும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி200 சதவிகிதத்துக்கும் மேல். எனவே, தங்கத்தில் சேமிப்பது எப்போதுமே உத்தரவாதம் மிக்கது.

3. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் போல தங்கம் வாங்குவதில் சட்டச் சிக்கல்கள் இல்லை. நம்பிக்கையான தரத்தில் கிடைத்தால் சட்டென வாங்கிவிடலாம்.

4. ஸ்விஸ் கோல்ட் போன்ற நம்பிக்கையான 24 காரட் தங்கம் வாங்கினால்,அதை எந்த நாட்டுப் பணமாகவும் மாற்றலாம், எந்த நாட்டில் வேண்டுமானாலும் மாற்றலாம்.

5. தங்க முதலீட்டில் நகைகள், நாணயங்கள், தங்கப் பத்திரங்கள் என பல்வேறு வடிவங்கள், வகைகள் உண்டு. வசதி, விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

6. பொதுவாக, தங்கத்தை பிஸ்கட்டாகவோ, நாணயமாகவோ வாங்கிச் சேமிப்பதுதான் ரிஸ்க் இல்லாதது.

7. முழுவதும் நகைகளாக வாங்கி வைப்பது செய்கூலி, சேதாரம் உட்பட பல்வேறு செலவினங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

8. லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கும் தங்கம், நகைகளைப் பாதுகாக்க சில ஆயிரம் செலவு செய்யத் தயங்காதீர்கள். நல்ல நம்பிக்கையான வங்கியின் லாக்கரில் பத்திரப்படுத்துங்கள்.

9. தங்கம் வாங்கும்போது தரத்தை உறுதிபடுத்திக் கொள்வது முக்கியம். அது18 காரட்டாக கூட இருக்கலாம். திரும்ப விற்கும்போதோ அல்லது அடகு வைக்கும்போதோதான் வில்லங்கம் தெரியவரும். ஆபரண நகை என்பது 22காரட் இருந்தால்தான் தரமான தங்கம். எனவே, நம்பிக்கையான நகைக்கடைகளில் வாங்குவதே நல்லது.

10. 'கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டுங்க. ரெண்டு வருஷத்துல அஞ்சு பவுன் உங்க கையில...' என்றெல்லாம் யாராவது சொன்னால் யோசியுங்கள். சொல்லும் கம்பெனியின் தரம், வரலாறு, தற்போதைய நிலை அனைத்தையும் தெரிந்தபின் இறங்குங்கள்.

ரியல் எஸ்டேட் நல்ல தேர்வு!

11. நிலத்தில் போட்ட பணம் நிலைக்கும் என்பார்கள். படிப்படியாக நீண்டகாலத்தில் விலையேறும். அதேசமயம், வேகமாக இறங்க வாய்ப்பில்லை.

12. பக்காவான நிலத்தை வாங்கிப் போடுவதில் உள்ள முக்கியமான நன்மை,அந்த அசையா சொத்தை யாரும் திருடிக்கொண்டு போக முடியாது என்பது. சரியான டாக்குமென்ட், பத்திரம், பட்டா என சர்வமும் இருக்கிறதா என்பதை சரிபார்த்தபின் சந்தோஷமாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள். வாங்கிப்போட்ட நிலத்தை யாரும் ஆக்கிரமிக்காமல் இருக்க... அடிக்கடி சென்று பார்த்துக் கொள்வது முக்கியம்.

13. நிலத்தை வாங்கினால் லோன் பெறுதல் போன்றவற்றுக்கு அது கை கொடுக்கும். நிலத்தில் வீடு கட்டிய பின்பு மார்க்கெட் விலைக்கு ஏற்ப மேலும் லோன் எடுக்க முடியும்.

14. வங்கி வட்டி விகிதம், பணவீக்கம் என எல்லாவற்றையும் மீறி வளரும் தன்மை நிலத்துக்கு உண்டு. குறிப்பாக நகர்ப்புறங்கள், அதிக போக்குவரத்து வசதியுடைய இடங்கள் போன்றவை எப்போதுமே 'ஜாக்பாட்' நிலங்கள்தான்.

15. விளைச்சல் நிலங்களில் முதலீடு செய்தால் வருடாந்திர குத்தகை போன்றவற்றின் மூலமும் லாபம் பெறலாம். ரப்பர், முந்திரி, தேயிலை போன்ற தோட்டங்களில் முதலீடு செய்தால் சிறப்பான மாதாந்திர வருமானமும் நிச்சயம்.

16. நிலத்தை நினைத்த நேரத்தில் விற்றுப் பணமாக்க முடியாது என்பது ஒரு சிக்கல். அதுபோல சமூக விரோத சக்திகள், அரசியல் பின்புலத்தில் உள்ள கில்லாடிகளெல்லாம் நம் நிலத்தை வளைத்துப் போட்டு அராஜகம் பண்ண வாய்ப்பு உண்டு. ஒரே நிலத்தை இரண்டு மூன்று பேருக்கு விற்கும் திருட்டுத்தனமும் உண்டு. இவையெல்லாம் உஷாராக இருக்க வேண்டிய சங்கதிகள்.

17. நிலத்தின் வருவாய் நீண்ட காலத்துக்கு உரியது. சரியான நிலத்தை வாங்கினால் காலம் முழுதும் நமக்குப் பயன் தரக்கூடியதாக இருக்கும்.

18. கையில் பணம் இல்லாவிட்டாலும் வங்கிக் கடன் மூலமாக நிலத்தை வாங்க முடியும். அதேசமயம், வங்கிக் கடன் வாங்கும்போது கவனமாக இருப்பதோடு, தகுந்த ஆலோசனைக்குப் பிறகே வாங்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

ஷேர் மார்க்கெட் பாதுகாப்பானதா?

19. அதிக ரிஸ்க் உடைய ஒரு முதலீடு இது. அதேபோல அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ள இன்வெஸ்ட்மென்ட்டும் கூட! அடிக்கடி வெளியாகும் செய்திகளை வைத்து ஏகப்பட்ட நஷ்டம் போன்று தோன்றும். ஆனால்,விழிப்போடு இருந்தால்... ஷேர் என்பது பெரும்பாலும் லாபகரமானதே! திறமையும் பொறுமையும் இருந்தால் கலக்கலாம்.

20. நல்ல நம்பிக்கையான கம்பெனிகளில் இன்வெஸ்ட் செய்தால் அதிக லாபம் கிடைப்பது உறுதி. அதற்கு நல்ல அலசல் திறமை அவசியம். கம்பெனிகளின் வரவு, செலவு, லாப விவரங்கள் தெரிந்திருப்பது அவசியமானது.

21. போனஸ் ஷேர்ஸ் கிடைப்பது ஷேர் மார்க்கெட்டில் உள்ள ஒரு அட்வான்டேஜ்.

22. வங்கி வட்டியை விட பலமடங்கு அதிக பணம் டிவிடென்ட் மூலம் வருவதற்குரிய வாய்ப்பு உண்டு. மார்க்கெட் நன்றாக இருந்தால் அதிக லாபம் ஈட்டலாம்.

23. ஷேரை எளிதில் பணமாக்கிக் கொள்ளலாம். அதிக அலைச்சலோ,குழப்பமோ, பயமோ இல்லாமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே'ஆன்லைன்' மூலமாகப் பணமாக்கிக் கொள்ளும் வசதி இதில் உண்டு.

24. எந்த கம்பெனி ஷேர் ரிஸ்க்கானது என தோன்றுகிறதோ அதை சட்டென விட்டுவிட்டு வேறொன்றை வாங்குவது வெகு எளிது.

25. ஷேரில் உள்ள மிகப் பெரிய சிக்கல், நம்பகத்தன்மை. இன்று ஒரு லட்சம்... நாளை பத்து லட்சம்... என்று உயரும். அதேசமயம், மறுநாள் பத்தாயிரம்... வெறும் ஜீரோ என்றுகூட ஏற்ற, இறக்கங்கள் இங்கே சர்வசாதாரணம். எனவே, தொடர்ந்து கவனிக்க இயலாதவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஷேர் மார்க்கெட்டை நாடாமல் இருப்பதே நல்லது.

மியூச்சுவல் ஃபண்ட், மிக நன்மை!

26. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவர்களில் பலருக்கும் தயக்கமும் பயமும் இருக்கும். அவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்ட். இதுவும் ஷேர் சமாசாரம்தான். ஆனால், ரிஸ்க் குறைவான சமாசாரம்.

27. வங்கிக் கணக்கு, பான் கார்டு... இரண்டும் போதும் நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்-ல் இன்வெஸ்ட் செய்ய. அதேபோல சில நூறு ரூபாய்கள் தொடங்கி,பல லட்சக்கணக்கான ரூபாய்களையும் தாண்டி சேமிக்க இதில் வழி இருக்கிறது.

28. மற்ற முதலீடுகளைப் போலில்லாமல் 'மியூச்சுவல் ஃபண்ட்' என்பது இந்திய அரசின் 'செக்யூரிட்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்ட்'-ன் கண்காணிப்பில் வருகிறது. அதேபோல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆடிட் போன்றவைகளுக்கும் கட்டுப்பட வேண்டும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கை தரும் விஷயமாகும்.

29. மியூச்சுவல் ஃபண்ட்டில் போடும் பணம், பல நிறுவனங்கள், பாண்டுகள்,அரசு நிறுவனங்கள் என கலந்து கட்டி முதலீடு செய்யப்படும். அந்த முடிவை நல்ல ஒரு திறமையான நிதி நிபுணர் குழு தீர்மானிக்கும். எனவே, ஒரு கம்பெனி வீழ்ச்சியடைந்தாலும் ஒட்டுமொத்த பணத்தையும் பாதிக்காது.

30. மியூச்சுவல் ஃபண்ட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நம்பிக்கையான பாண்ட், அரசு நிறுவனம் போன்றவற்றில் போட்டு விடுவதால் குறைந்தபட்ச லாபம் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது.

31. ஓபன் எண்ட் (open-End) மற்றும் குளோஸ்டு எண்ட் (Closed-end) என்று இரு வகைகளில் மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. ஓபன் எண்ட் என்பது... எப்போது வேண்டுமானாலும் விற்றுப் பணமாக்கிக் கொள்ளக்கூடியது. குளோஸ்டு எண்ட் என்பது குறிப்பிட்ட கால வரையறைக்குப் பிறகே விற்கக் கூடியது. தேவைக்கு ஏற்றபடி தேவை யானதை தேர்வு செய்வது நல்லது.

32. வருமான வரியை சேமிக்கும் வகையிலான மியூச்சுவல் ஃபண்டுகளும் உண்டு. அவற்றை ஈக்விடி லிங்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) என்பார்கள்.

33. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்ற முறையிலான மியூச்சுவல் ஃபண்ட்களும் உண்டு. மாதந்தோறும் சிறுசிறு தவணையாக முதலீடு செய்யலாம். மாதாந்திர சேமிப்பைக்கூட இப்படி முதலீடு செய்து நல்ல லாபம்
பார்க்கலாம்.

34. மியூச்சுவல் ஃபண்டில் வரும் லாபத்தை, அப்படியே மியூச்சுவல் ஃபண்டில் மறுபடி மறுபடி இன்வெஸ்ட் செய்வது வெகு எளிது. வேறு சிக்கல் இல்லாமல் இந்த முதலீட்டுச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.

35. லாபத்தை மீண்டும் முதலீடு செய்ய விரும்பவில்லை எனில் வீட்டுக்கே'செக்' வர வைக்கலாம். வேறு சிக்கல்களோ, கவலைகளோ,அலைச்சல்களோ இல்லை.

இன்ஷுரன்ஸ் மேல் இஷ்டமா?!

36. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பும் ஒரு முதலீடு,இன்ஷுரன்ஸ்தான். பொதுவாக இன்ஷுரன்ஸ் முதலீடு என்பது மிகக் குறைந்த வருவாய் கொண்டது என்பார்கள். ஆனால், சிறுசேமிப்பு எனும் நோக்கில் பார்த்தால் நிச்சயமாக அது லாபகரமானதுதான். அதுமட்டுமல்ல... நம்முடைய ரிஸ்க்கையும் சேர்த்து அது தாங்குகிறது என்பதுதான் முக்கியம்.

37. இன்ஷுரன்ஸ் போட்டால்... எதிர்காலம் பாதுகாப்பானது என்பதனால் மக்களின் முதல் தேர்வு இதுவாகிறது. கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி... சுமார் 44 சதவிகித மக்கள் இன்ஷுரன்ஸைத்தான் விரும்புகிறார்கள்.

38. முதலீடு எனும் நிலையைத் தாண்டி, விபத்து, மரணம் போன்ற எதிர்பாராத சிக்கல்களுக்குக் கைகொடுக்கும் என்பதுதான் இன்ஷுரன்ஸ் மக்களைக் கவரக் காரணம். மெச்சூரிட்டி அல்லது அசம்பாவித சமயங்களில் பணம் கிடைக்கும்.

39. இன்ஷுரன்ஸில் பலவிதங்கள் உள்ளன. அதில் மணி பேக் பாலிஸியில் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவு தொகை உங்களுக்கு வழங்கப்படும். மற்றபடி வழக்கமான காப்பீடு வசதியும் உண்டு.

40. ரிட்டயர்மென்ட் இன்ஷுரன்ஸ்கள், இன்னொரு வசீகரத் திட்டம். எதிர்காலத்தின் நிலையைக் கணிக்க முடியாது என்பதால் இது பரவலாக விரும்பப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட பணம் செலுத்தினால்,குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாதம்தோறும் பென்ஷன் போல பணம் வந்து கொண்டிருக்கும். இந்தப் பென்ஷனைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது நாற்பது. பென்ஷன் தொடங்கும் வயதை உங்கள் விருப்பம் போல தேர்வு செய்யலாம்.

41. இன்ஷுரன்ஸ் மூலமாக குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு லோன் எடுத்துக் கொள்ளலாம். எந்த அளவுக்கு இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கிறீர்களோ... அதன் அடிப்படையில் உங்களுக்கு லோன் கிடைக்கும். வங்கிக் கடனைவிட வட்டி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

42. மாதாந்திர சம்பளம் வாங்குவோருக்கு இன்ஷுரன்ஸ் என்பது முதலீடு மட்டுமல்ல. அது வரி சேமிப்பு வழியும்கூட. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல. அதனாலேயே இது அவர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.

43. கல்வி, திருமணம், படிப்பு, வீடு என பல்வேறு திட்டங்களுடன் இன்ஷுரன்ஸில் முதலீடு செய்யலாம். எந்தத் திட்டம் சரிவரும் என்பதை மட்டும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

44. குழந்தைகள் பெயரில் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் போடுவதுபோல,இன்ஷுரன்ஸிலும் போடலாம். இது இன்ஷுரன்ஸுக்கு இன்ஷுரன்ஸ்... முதலீட்டுக்கு முதலீடு!

45. நம்முடைய இன்ஷுரன்ஸ் பணத்தை தகிடுதத்தம் மூலம் அபகரிப்பதற்கு பெரும்பாலும் வாய்ப்பே இல்லை. எனவே, அதிக நம்பகத்தன்மை இந்த முதலீட்டில் உண்டு.

46. இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் இப்போது அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களுடன் களமிறங்கியிருக்கின்றன. அவற்றுள் நல்ல, நம்பிக்கையான இன்ஷுரன்ஸ் கம்பெனியைத் தேர்ந்தெடுத்துப் பயன்பெறலாம்.

வங்கிகளில் சேமிக்க வாருங்கள்!

47. வங்கியில் சேமிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் பிரசித்தம். சேமிப்பில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை அதிகரிக்கலாம்... தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம் போன்றவை இதன் நல்ல அம்சங்கள்.

48. வங்கியில் குறைந்த லாபமே ஆனாலும் நிச்சயமாக அதிக நம்பிக்கை உண்டு. எனவே, வங்கிச் சேமிப்புகளில் பயம் வேண்டாம்.

49. நல்ல நம்பிக்கையான தேசிய வங்கிகள் பாதுகாப்பானவை. அதிலும்கூட,பணத்தை ஒரே வங்கியில் போடாமல், பல வங்கிகளிலும் பிரித்துச் சேமிப்பதால் உங்கள் பணம் அதிக உத்தரவாதத்துடன் இருக்கும்.

50. அதிக வட்டி கிடைக்கும் என்பதற்காக, திடீர் தனியார் வங்கிகளில் முதலீடு செய்யவேண்டாம். பின்னணியை முழுதும் அறியாமல் உங்கள் வியர்வைப் பணத்தை யாரோ ஒருவரின் பாக்கெட்டில் போடாதீர்கள்.

51. சேமிப்புக்கு வங்கியிலேயே பல திட்டங்கள் உள்ளன. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தும் ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட்,முதியோருக்கான சிறப்பு வட்டி திட்டங்கள் என பல உள்ளன. அவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து முதலீட்டைத் துவக்கினால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

52. கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இந்தப் பணம் தேவைப்படாது என்பதைத் தெரிந்த பின்பே 'ஃபிக்ஸட் டெபாசிட்' செய்யுங்கள்.

53. காலம் மாறுகிறது. திட்டங்கள், லாபங்கள் எல்லாம் மாறுகின்றன. எனவே, 'ஃபிக்ஸட் டெபாசிட்' போன்றவற்றை பத்து ஆண்டு, இருபது ஆண்டு என நீட்டாமல் இருப்பது நல்லது. ஓரிரு வருடங்கள் என்பது சரியான அணுகுமுறை.

54. ஃபிக்ஸட் டெபாசிட்-ன் விதிமுறைகளை கவனமாகப் படியுங்கள். குறிப்பாக, பணத்தை எடுக்கும்போது ஏதாவது கட்டணம் வசூலிப்பார்களா... குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே திரும்பப் பெற்றால், உங்களுடைய லாபத்தில் எவ்வளவு குறையும் என்பதையெல்லாம் கண்டறியுங்கள்.

55. வங்கிகளில் நீண்டகால சேமிப்புகள் வைக்கும்போது 'வாரிசு' பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். அது சரியாகக் குறிப்பிடப்படவில்லை எனில்,சேமிப்பவருக்கு ஏதேனும் ஆபத்து நேரும்போது, 'வாரிசு' அந்தப் பணத்தை எளிதாக எடுக்க முடியாது. தேவையற்ற அலைச்சல்கள் நேரிட வாய்ப்பு உண்டு.

56. வங்கிகளில் பெரும்பாலும் சர்வீஸ் சார்ஜ், மறைமுகக் கட்டணம் போன்றவை இருப்பதில்லை என்பது வங்கி முதலீட்டின் இன்னொரு சிறப்பு அம்சம். அதேபோல எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் உங்கள் சேமிப்பை நீட்டிக் கொள்ளலாம் என்பதும் இன்னொரு சிறப்பம்சம்.

போஸ்ட் ஆபீஸில் சேமியுங்கள்!

57. கிராமப்புறங்களில் இன்றும் சேமிப்பில் சிறப்பிடம் போஸ்ட் ஆபீஸுக்குத்தான். கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கலாம், எளிதில் போய் சேமிக்கலாம், எல்லா ஊர்களிலும் சேமிக்கலாம் போன்றவையெல்லாம் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகளின் சிறப்பம்சம்.

58. கிஸான் விகாஸ், நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் போன்றவை தபால் அலுவலகங்களில் உள்ள பாப்புலர் முதலீடுகள்.

59. கிஸான் விகாஸ் பத்திரங்களில் முதலீடு செய்தால், உங்கள் பணம் எட்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்களில் இரட்டிப்பாகும். நூறு முதல் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். இவற்றுக்கு எட்டு சதவிகித வட்டி உண்டு.

60. 'டைம் டெபாசிட்' எனும் ஒரு ஃபிக்ஸட் டிபாசிட் திட்டமும் இங்கு உண்டு. சில நூறு ரூபாய்கள் தொடங்கி, லட்சக்கணக்கிலும் சேமிக்கலாம். ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு என நம் வசதிக்கேற்ப கால நிர்ணயம் வைத்துக் கொள்ளலாம்.

61. மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்பது அதிக வட்டி தரும் தபால் அலுவலக சேவைகளுள் ஒன்று. இதில் ஆயிரம் ரூபாய் தொடங்கி, மூன்று லட்சம் வரை சேமிக்கலாம். எட்டு சதவிகித வட்டி, வரி விலக்கு, ஆறு ஆண்டுகள் சேமித்தால் அதன் பின் பத்து சதவிகித போனஸ் என பல சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு.

62. 'பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்' (பி.பி.எஃப்), தபால் அலுவலகத்தின் சிறப்பு சேமிப்புத் திட்டங்களில் ஒன்று. ஆண்டுக்கு 500 முதல் 70,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

63. பி.பி.எஃப்-க்கு வரிச் சலுகை உள்ளது. சேமிப்புக்குத் தக்கபடி தபால் அலுவலகத்திலிருந்து லோன் எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் சலுகை.

64. ஊர் மாறிப் போகிறீர்கள் என்றால், நீங்கள் செல்லும் இடத்தில் உள்ள தபால் அலுவலகத்துக்கு உங்கள் சேமிப்புகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

65. 'மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்டுவது வசதியாக இருக்குமே...' என விரும்புபவர்களுக்கு இருக்கிறது 'ரெக்கரிங் டெபாசிட்'திட்டம். இதில் அறுபது மாதங்கள் தொடர்ந்து பணம் கட்ட வேண்டும்.

66. தபால் நிலைய சேமிப்புகளில் 'வாரிசு' நியமிக்கும் வசதி உண்டு. எப்போது வேண்டுமானாலும் அதை மாற்றிக் கொள்ளலாம்.

67. இந்திய அரசு சார்ந்தது, மிக அதிக பாதுகாப்பானது, நம்பிக்கையானது என்பவையெல்லாம் தபால் அலுவலகங்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கான அரண்.

குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள் சேமிப்பு பழக்கத்தை!

68. குழந்தைகள் முதலில் நாணயத்தின் மதிப்பை அறியும்படி செய்யுங்கள். 10ரூபாயில் மொத்தம் 10 ஒரு ரூபாய் இருக்கிறது போன்ற அடிப்படையான விஷயங்களை தெளிவுபட சொல்லித் தாருங்கள்.

69. கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது அவர்கள் கையாலேயே பணம் கொடுக்க சொல்லுங்கள். அப்போதுதான் அந்த பொருட்களின் மதிப்பு புரியும்.

70. அவர்களை கவரக் கூடிய கலர்ஃபுல் உண்டியலை வாங்கிக் கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி, சேமிக்க உற்சாகப்படுத்துங்கள்.

71. தினமும் இரண்டு ரூபாய் அவர்களின் 'பாக்கெட் மணி' என்றால்,கூடுதலாக ஒரு ரூபாய் கொடுத்து தினமும் உண்டியலில் போடச் சொல்லுங்கள்.

72. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்குள் போட்டி போல வைத்து யார் அதிகம் சேமித்திருக்கிறார்களோ... அவர்களுக்கு சின்னச் சின்ன பரிசுகள் கொடுக்கலாம். இதனால் சேமிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும்.

73. மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தேதியில் அவர்கள் சேர்த்த பணத்தை அவர்களையே எண்ணச் சொல்லி, ஒரு நோட்டில் எழுதச் சொல்லுங்கள்.

74. குழந்தைகள் அடிக்கடி கேட்டு அடம்பிடிக்கும் தேவையில்லாத பொருட்களை அந்த சேமிப்பு பணத்தில் இருந்தே வாங்கிக் கொடுங்கள். அப்போதுதான் அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் மீது அவர்களுக்கு மோகம் குறையும்.

75. நீங்கள் போடும் மாத பட்ஜெட்டை குழந்தை களுக்கும் காண்பியுங்கள். அப்போதுதான் அவர்களுக்காக நீங்கள் செய்யும் செலவு அவர்களுக்குப் புரியும்.

கலைப் பொருட்களிலும் சேமிக்கலாம்!

76. கலைப் பொருட்களில் சேமிப்பது என்பது ஒரு தனி ரகம். அதற்கு கொஞ்சம் விஷய ஞானமும், ரிஸ்க் எடுப்பதும் தேவைப்படும். ஆனால்,ஜாக்பாட் அடித்தால் ஒரு சேமிப்பே நமது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடக் கூடும்.

77. கலைப் பொருட்கள் வாங்கும்போது அதன் காலத்தை அறிந்து கொள்ளுங்கள். அந்த கலைப்பொருளுக்குச் சொந்தக்காரர் யார் என தெரிவதும், அது நிரூபிக்கக் கூடியதாக இருக்க வேண்டியதும் மிக முக்கியம்.

78. பெயின்ட்டிங் பொருட்களை வாங்கிச் சேமிப்பாக வைக்கலாம். ஆனால்,அவை ஒரிஜினல் பெயின்ட்டிங்காக இருந்தால்தான் பயனளிக்கும். விலை குறைவான டிஜிட்டல் பிரின்ட்டுகள் பார்க்க ஒரிஜினல் போலவே இருக்கும். மலிவான விலைக்குக்கூட கிடைக்கும். ஆனால், அவை பிற்காலத்தில் விலை போகாது.

79. மிக அதிகமான ஏமாற்றுகள் நடப்பதும் இந்த கலைப் பொருள் விற்பனையில்தான் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். குறிப்பாக,இணையம் மூலமாக எந்தக் கலைப்பொருளையும் வாங்காமல் இருப்பது உசிதம். கலைப்பொருட்களை அந்தந்த கலை ஏரியாவில் கில்லாடியான நபர் மூலமாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

வளமான வாழ்க்கைக்கு சேமிப்புதான் ஆக்ஸிஜன்!

80. குழந்தைகளின் எதிர்கால படிப்பு, வீடு வாங்குவது போன்ற தெரிந்த தேவைகள் முதல், உடல் நலம், அவசர பயணம் போன்ற திடீர் தேவைகள் வரை அனைத்துக்குமே சேமிப்பு மிக முக்கியம்.

81. தொடர்ச்சியான சேமிப்புகளில் நிலைத்திருங்கள். உங்களுக்கு நீங்களே தரும் சம்பளமாக அதைக் கணக்கில் வையுங்கள். எல்லா மாதமும் உங்களுக்குச் சம்பளம் கொடுங்கள்.

82. சேமிப்பு சமாசாரங்களுக்கென ஒரு தனி வங்கிக் கணக்கு வைத்திருப்பது நல்லது. நாம் எப்போதும் பயன்படுத்தும் டெபிட் கார்டுடன் இருக்கும் வங்கியிலேயே அந்தப் பணமும் இல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது.

83. தொழில் தொடங்குவது, கடை ஆரம்பிப்பது என உங்களுடைய தீவிரமான லட்சியங்களுக்கு சேமிப்பு கை கொடுக்கும். அதற்காக குறைந்தபட்சம் 20%சம்பளத்தை ஒதுக்கி வைப்பது பயன் தரும்.

84. ஓய்வு பெற்றபின் வரும் தேவைகளுக்காக சேமியுங்கள். உங்கள் சேமிப்பு உங்கள் முதுமையை தன்னம்பிக்கையுடனும், இயல்பாகவும், மனஉளைச்சல் இல்லாமலும் அனுபவிக்க உதவும். எவ்வளவுதான் அன்பைப் பொழியும் பிள்ளைகள் இருந்தாலும் முதுமைக்காக சேமிக்கத் தவறாதீர்கள்.

85. எதற்காக சேமிக்கிறோம், எவ்வளவு சேமிக்கப் போகிறோம் என்பதை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள். குழப்பமில்லாத தெளிவான திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

86. 'ஒரு மாதம் என்னென்ன செலவு செய்கிறோம், அதில் எவையெல்லாம் தவிர்க்க முடியாதவை, எவையெல்லாம் தவிர்க்கக் கூடியவை...' எனப் பட்டியலிடுங்கள். அதன்படி செலவிடுங்கள்.

87. வீட்டுக் கடன் வட்டி, மின்சார பில், ஸ்கூல் ஃபீஸ் என்று வரும் தவிர்க்க முடியாத செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஹோட்டல், சினிமா,கேளிக்கை போன்ற தவிர்க்கக் கூடியவற்றுக்கு பின்னுரிமை கொடுங்கள்.

88. மிச்சமிருப்பதைச் சேமிப்பது என்று நினைத்தால் சேமிக்கவே முடியாது. சேமித்தபின் மிச்சமிருப்பதை செலவு செய்ய முடிவெடுங்கள். அப்போது சேமிப்பும் நிற்காது... வாழ்க்கையும் முடங்காது.

89. உங்கள் சேமிப்புப் பணத்தை உப்பு சப்பில்லாத காரணங்களுக்கெல்லாம் எடுக்காதீர்கள். தவிர்க்கவே முடியாத இயற்கைச் சீற்றம், மருத்துவத் தேவை போன்றவை தவிர எதற்கும் தொடாதீர்கள்.

90. குடும்பத்தினருக்கு பரிசுகள் கொடுப்பது, அன்பை வெளிப்படுத்துவதையெல்லாம் கொஞ்சம் பயனுள்ள வகையில் செலவிடலாம். சேமிப்புக்கு உதவும் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கிப் பரிசளிக்கலாம்.

பொதுவான எச்சரிக்கைகள்!

91. 'அதிக லாபம்' என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள். அந்த கம்பெனி அதிக வருடங்களாக நம்பகத்தன்மையுடன் இருக்கிறதா, அதற்கு அரசின் அங்கீகாரம் இருக்கிறதா என்பதைப் பாருங்கள். அந்த கம்பெனி கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டது என்பதையும் அலசுங்கள்.

92. 'உடனே முதலீடு செய்யுங்கள்... இன்றே கடைசி!' என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள். இவையெல்லாம் உங்களை சிந்திக்க விடாமல் திடீரென முடிவெடுக்க வைப்பவை. இவை, பெரும்பாலும் ஏமாற்று வேலைகளாகத்தான் இருக்கும்.

93. மற்றவர்கள் வாங்குகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டாதீர்கள். பெரும்பாலான சிக்கல்களுக்கு இதுதான் காரணம். உங்களுக்கு முழுமையான நம்பிக்கை வராவிட்டால் எதிலும் இறங்காதீர்கள்.

94. முதலீடு செய்யும்போது அது தொடர்பான எல்லா ஆவணங்களையும் பாதுகாத்து வையுங்கள். பணம் கட்டிய ரசீது, கடிதங்கள்... அது, இது என அனைத்து சமாசாரங்களையும் பத்திரப்படுத்துங்கள். எதுவும் தேவையில்லை என உதாசீனப்படுத்தாதீர்கள். எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் இல்லாத முதலீடுகள் ஆபத்தானவை. அவற்றில் இறங்க வேண்டாம்.

95. முதலீட்டில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தெரிவியுங்கள். நீங்கள் அனுப்பும் கடிதங்களின் ஒரு காப்பியையும், அதற்கு வரும் பதில்களையும் பாதுகாத்து வையுங்கள்.

96. இணையம் மூலமாக ஏதேனும் இன்வெஸ்ட் செய்கிறீர்கள் என்றால் இரட்டைக் கவனம் தேவை.

97. ஒருவருடைய முதலீட்டு திட்டங்கள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. எனவே, 'கலைவாணி போட்டிருக்கா, நானும் போடறேன்' என ஓடாதீர்கள்.

98. 'கோயில்ல உங்களைப் பார்த்தேன். எனக்கும் வாரத்துக்கு எட்டு நாள் (!) கோயிலுக்கு போகலேனா தலையே வெடிச்சுடும்...' என்றெல்லாம் ஒரு பில்டப் கொடுத்து உங்களிடம் கொஞ்ச நாளாக பழகும் நபர், நைஸாக முதலீட்டுத் திட்டத்தை அவிழ்த்தால், எச்சரிக்கையாக இருங்கள். பகவான் பக்தன் என ஏமாந்து விடாதீர்கள். இது போன்ற எமோஷனல் ஏமாற்றுவேலை இப்போது பெருகிவருகிறது... உஷார்.

99. 'ஆஸ்திரேலியாவில் தேக்குத் தோட்டம். அற்புதமான ஒரு வீடு. அடிக்கடி நீங்கள் போய் தங்கலாம்...' என்றெல்லாம் காற்றில் கோட்டை கட்டும் முதலீடுகளை மறுதலிப்பதே புத்திசாலித்தனம்.

100. 'ஒரு செமினாருக்கு வாங்க, சாப்பாடு ஃப்ரீ...' என்றெல்லாம் விளம்பரம் வந்தால் போகாதீர்கள். கோட்டு, சூட்டுடன் பத்து பேர் உங்களைச் சுற்றி உட்கார்ந்து முதலீட்டு விஷயம் பேசுவார்கள். கொஞ்சம் ஏமாந்த சோணகிரிகளைக் கொண்டு அவர்கள் பணத்தைப் பிடுங்குவதே இவர்களின் ஒரே நோக்கம்.

'சிக்கனமே சிறந்த சேமிப்பு! 

சேமிப்போம்... சாதிப்போம்! 

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ரெஸ்யும் அல்லது பயோடேட்டா உருவாக்க

பயோடேட்டா உருவாக்குவது குறித்து சில தளங்கள் உதவுகின்றது


இமர்ஸ்


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



உங்கள் கணினியை படிக்க வைக்கலாம்!


நீங்கள் கொடுக்கும் வரிகளை உங்கள் கணினி படிக்கும். அதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
முதலில் நோட்பேடை திறக்கவும். அதில் பின்வரும் ப்ரோகிராம் வரிகளை கொடுக்கவும்.

CreatObject("SAPI.SpVoice").Speak"Hi this is your computer speaking to you"

இந்த ஃபைலை "My Computer.vbs" என்ற பெயரில் சேமிக்கவும். உங்கள் கணினியின் ஸ்பீக்கரை ஆன் செய்து கொள்ளவும்.

இப்பொழுது, நாம் சேமித்த "My Computer.vbs" என்ற ஃபைலை இரட்டை கிளிக் செய்தால் உங்கள் கணினி நாம் புரோகிராமில் கொடுத்த வரிகளை படிப்பதை கேட்கலாம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



வண்ணங்களும் அதன் பெயர்களும்


ஒவ்வொரு வண்ணங்களுக்கும் ஒரு பெயர் உண்டு அந்த பெயர்கள் அனைவருக்கும் தெரியாது அதற்காக ஒரு இணையதளம் உண்டு அந்த இணையதள சுட்டி.




இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



சிப் மென்பொருள் - SIP SOFTWARE

நாம் கணணியில் அடிப்படை மென்பொருட்களான யாகூ மெசஞ்சர், ஒபன் ஆபிஸ், கேம் ப்ளேயர், ஸ்கைப், அடோப் ப்ளாஸ் ப்ளேயர், விண்ரேர் போன்ற மென்பொருட்களை தரவிறக்கி பிறகு தனித்தனியாக நிறுவ வேண்டும்.
இவை அனைத்தும் மட்டுமல்லாது இன்னும் பிற சுதந்திர கட்டற்ற மென்பொருட்கள் இணைந்து ஒரே மென்பொருளாக நிறுவ ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் சுருக்காமாக் சிப் என்று அழைக்கப்படும் ஸ்மார்டர் இன்ஸ்டாலர் பேக். நான் மேற்கூறிய மென்பொருள் அல்லாது நிறைய மென்பொருட்கள் உள்ளது. இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மென்பொருளின் இணையதளம் சுட்டி
மென்பொருள் தரவிறக்க சுட்டி

*Software included in the latest version
 Yahoo Messenger
Yahoo Widgets
 Skype
  Google Earth
   Winamp
  Firefox
  FoxIt Reader
  Gmail Notifier
 Digsby
   Pidgin
  No-IP Duc
  uTorrent
  7zip
 Rocket Dock
 K-Lite Mega Codecs Pack
   Adobe Flash Player
  Apple QuickTime
     SunJava
Adobe Reader
  Sumatra PDF
Open Office
  IrfanView
   TakeABreak
  Avast Antivirus Home Edition
  AVG Antivirus
  PC Tools AntiVirus Free Edition
 FileZilla FTP Server
 FileZilla FTP Client
 ThunderBird
 Gimp
 Picasa
  NotePad++
 Google Chrome
  CCleaner
  AbiWord
  VLC Media Player
   Evernote
  Defraggler
  Recuva
 Audacity
  Opera Browser
 Apple Itunes
 LimeWire
 GOM Player
 CDBurnerXP
  LogMeIn
 GrabIt
 PDFCreator
 KM Player
  Lyx
  Scite

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்