Thursday, 24 May 2012

முக்கிய இணைய தளங்கள் -2



1. www.downloadsquad.com : இந்த தளம் சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.


2. www.gmailtips.com : கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன. இதனை நடத்துபவர் இன்னொரு தளத்தையும் நடத்துகிறார். அதன் முகவரி www.jimsltips.com . இதில் இமெயில் தகவல்களுடன் மொபைல் குறித்த தகவல்கள் மற்றும் டிப்ஸ்கள் உள்ளன.


3. www.thegreenbutton.com : விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன்குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.



4. www.stopbadware.org : இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.

5. www.techcrunch.com : இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.


6. www.techdirt.com தொழில் நுட்ப உலகின் தில்லுமுல்லுகள் மற்றும் முக்கிய செய்திகள், ஆய்வு முடிவுகள் ஆகியவை குறித்து சுருக்கமான தகவல்களைத் தருகிறது.



சில வேடிக்கையான துணுக்கு செய்திகளும் உண்டு. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த செய்திகளையும் தகவல்களையும் அனுப்பலாம்.


7. www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.


8.www.ilounge.com இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன.


9. www.photonhead. com டிஜிட்டல் கேமரா வாங்கிவிட்டீர்களா? அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் உங்களைக் குழப்புகிறதா? உடனே இந்த தளத்திற்குச் செல்லுங்கள். இங்கு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. எனவே அப்படி எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.


10. www.crazymeds.org : மனநிலை குறையுடையவர்களுக்கான தளம் இது. இங்கு இவ்வகையில் மருந்து உட்கொள்பவர்கள், சிகிச்சை எடுப்பவர்கள் தங்களது அனுபவத்தினைத் தருகின்றனர். சும்மா தகவலுக்காக இதனைப் பார்க்கலாம்.


11.www.goaskalice.com அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.


12. www.quotedb.com சிலர் எப்போது பேசினாலும் இது அவர் சொன்னது இவர் சொன்னது என்று பிரபலங்கள் கூறியதைச் சொல்வார்கள். சிலர் பொதுமேடைகளில் பேசச் செல்கையிலும் சில ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துகையிலும் அவர்களுக்குச் சில கொட்டேஷன்கள் கட்டாயம் வேண்டியதிருக்கும். அவர்களுக்கான தளம் இது. 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற கொட்டேஷன்கள் உள்ளன.


13. www.thefreedictionary.com ஆன் லைனில் உள்ள அருமையான டிக்ஷனரி. ஒரு சொல்லுக்குப் பொதுவான பொருள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம், கம்ப்யூட்டர், நிதிச் சந்தை தொடர்பான பொருளும் தரப்படும். இவற்றுடன் ஒத்த பொருள் தரும் சொற்கள். எதிர்ப்பதங்கள், பழமொழிகள், வழக்குச் சொற்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. இவற்றுடன் பல உதிரி பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் நியூஸ் அலர்ட், வார்த்தை விளையாட்டு எனப் பிரிவுகளும் உள்ளன.


14. www.webmath.com ஒரு பெயிண்டர் ஒரு அறையை எட்டு மணி நேரத்திலும் இன்னொருவர் 10 மணி நேரத்திலும் வெள்ளை அடித்தால் இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் வெள்ளை அடிப்பார்கள்? என்ன – இதெல்லாம் ஸ்கூலில் முடித்து வந்தாச்சே ! இப்போ எதுக்கு என்கிறீர்களா? இதைப் போன்ற கணக்குகள் மற்றும் அல்ஜிப்ரா, கால்குலஸ் எனப் பல பாடப்பிரிவுகளுக்குத் தீர்வுகளை இந்த தளம் தருகிறது.


15. www.worldwidewords.org ஆங்கிலச் சொற்கள் குறித்து தெரிந்து கொள்ள அருமையான ஓர் தளம். ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு அதன் பல பரிமாணங்களை இந்த தளம் எடுத்துச் சொல்கிறது.


எடுத்துக் காட்டாக எப்போதாவது ஒரு முறை என்ற பொருளில் “blue moon” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மது அருந்துபவர்கள் பிடிபட்டால் இந்த சொல்லைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இது மேலும் சில பொருளையும் தரும். ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருவதையும் இந்த சொல் மூலமே குறிக்கலாம். இது போல பல விளக்கங்கள்; பல எடுத்துக் காட்டுகள். உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிந்து வைத்தால் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சொற்கள் பயன்பாடு குறித்த இமெயில் செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்