Sunday, 12 May 2013

5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?


ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வசதிகள் ஏராளமானது. அந்த வசதிகளுள் ஒன்று தான் 10 GB வரையிலான File – களை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி.

10 GB வரை File களை அனுப்பும் வசதி நமக்கு கூகுள் டிரைவ் மூலம் தரப்படுகிறது. கூகுள் டிரைவில் ஜிமெயில் பயனர்கள் ஒவ்வொருவருக்கும் 5 GB இலவச Space தரப்பட்டிருக்கும். எனவே இலவசமாக 5 GB வரை அனுப்ப முடியும். 10 GB வரை அனுப்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே இலவசமாக அனுப்ப வழி தரும் 5GB யை நாம் பார்ப்போம்.



ஜிமெயிலில் இருந்து அனுப்ப:

கூகுள் டிரைவ் மூலம் என்றாலும் File – களை நீங்கள் உங்கள் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம். இதற்கு நீங்கள் புதிய Composing Method ஐ உபயோகிக்க வேண்டும்.

புதிய மெயில் Compose செய்யும் போது + Icon மீது கிளிக் செய்தால் Google Drive Icon வரும் அதை கிளிக் செய்து File ஐ Upload செய்திடலாம்.


ஏற்கனவே Upload செய்திருந்த File என்றால் My Drive என்பதில் இருந்து File – ஐ தெரிவு செய்து கொள்ளலாம்.

கூகுள் டிரைவில் இருந்தே அனுப்ப

முதலில் Google Drive தளத்துக்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் Sign in செய்து கொள்ளுங்கள். இப்போது வரும் பக்கத்தில் இடது புறம் உள்ள Upload Icon மீது கிளிக் செய்யுங்கள்.



அதில் Files அல்லது Folder என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள். ஒரே ஒரு File என்றால் File, நிறைய File என்றால் Folder.

இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு File அல்லது Folder - ஐ நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். 5GB க்கு மேல் இருந்தால் Not enough storage என்று வந்து விடும். எனவே 5GB உள்ளதை கொடுத்து விட்டால் சில மணி நேரங்களில் அது Upload ஆகி விடும்.


Upload ஆன பின் குறிப்பிட்ட File அல்லது Folder – ஐ நீங்கள் Drive – இல் காணலாம். அந்த File ஐ Check செய்து விட்டு More என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது Share பகுதியில் நீங்கள் Email As Attachment என்பதை கிளிக் செய்து File – ஐ குறிப்பிட்ட நபருக்கு மின்னஞ்சல் செய்து விடலாம்.

நன்றி - பிரபு கிருஷ்ணா

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது?

தகவல்கள்



எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.



கிரெடிட் கார்டு!

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

- நீரை.மகேந்திரன்.

நன்றி -இணையம்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Sunday, 21 April 2013

டிரைவிங் லைசென்ஸ்(Driving Licence)

பழகுநர் உரிமம் எடுக்க (LLR) குறைந்தபட்ச தகுதிகள் என்ன?

உங்களுக்குப் பதினாறு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு குறைவான கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். பதினெட்டு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு மேற்பட்ட கியர் வாகனங்கள்(மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள்) , இலகு ரக (கார், ஜீப்) வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம். இருபது வயது முடிந்திருந்தால், இலகு ரக போக்குவரத்து வாகனங்கள்(வாடகை கார், ஆட்டோ, வேன்) ஓட்ட லைசென்ஸ் பெறலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

1. முகவரி ஆதாரம் (உ&ம்: குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்).

2. வயது ஆதாரம் (உ&ம்: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்).

3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகள். அதோடு படிவம் & 1 (இந்தப் படிவத்தில் ‘அ’ இணைப்பில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர் உங்களைப் பரிசோதித்து, ‘நீங்கள் வாகனம் ஓட்டத் தகுதியானவர்தான்’ எனச் சான்றளிக்க வேண்டும்), மற்றும் படிவம் & 3 (இரண்டு பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்.).

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் மட்டும் படிவம் 14 இணைக்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களை நிரப்பி, ரூ.30/& செலுத்தி பழகுநர் உரிமம் (LLR) பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமத்தை ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு, ஓட்டுநர் உரிமம்(Driving licence) லிவீநீமீஸீநீமீ) பெற கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். பழகுநர் உரிமம் பெற அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம்.

ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?

பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4&ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும் (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் படிவம் 5 இணைக்க வேண்டும்).

மேலும், இத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்: 1. பழகுநர் உரிமம், 2. வாகனத்துக்கான ஆவணங்கள் (பதிவுச் சான்றிதழ், இன்ஷ¨ரன்ஸ்), 3.பிறருடைய வாகனமாக இருந்தால், அத்தாட்சிக் கடிதம், 4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

இவற்றுடன் உரிமம் வழங்க ரூ. 200&ம் தேர்வுக் கட்டணமாக ரூ.50&ம் செலுத்த வேண்டும்.

எவ்வாறு பரீட்சை நடைபெறுகிறது?

வாகனம் ஓட்டவும் சாலை விதிகளும் கற்றுக்கொண்ட பிறகு, வாகன ஆய்வாளர் முன்பு இரு சக்கர வாகனம் என்றால் 8 போன்ற வளைவுச் சுற்றுக்குள் ஓட்டிக் காட்ட வேண்டும். (இது உரிமம் வழங்கும் வழிகாட்டுதல் விதியின்படி 8 போன்ற வளைவுக்குள் ஓட்டினாலே அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், இதில் ஓட்டிக் காட்ட கூறப்படுகிறது) இலகு ரக வாகனம் என்றால், ஆய்வாளர் அருகில் அமர்ந்திருக்க, சாலையில் அனைத்து கியர்களிலும் நாம் சரியாக ஓட்டிக் காட்டினால் ஆய்வாளர் உரிமம் வழங்க பரிந்துரைப்பார். அதன் பின்னர்தான் உரிமம் வழங்கப்படும். இந்தத் தேர்வின்போது வளைவுகளில் திரும்பும்போது, நிறுத்தும்போது உரிய சைகைகள் செய்கிறீர்களா என ஆய்வாளர் கவனிப்பார். சரியாகச் சைகைகள் செய்தால்தான் உரிமம் கிடைக்கும். இதில் தோல்வி அடைந்தால், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டிக் காட்டிதான் உரிமம் பெற முடியும்.

வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்பவர்கள், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு புதிய முகவரிக்கு மாற்றுவது?

உதாரணத்துக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகிப் போகிறீர்கள் என்றால், திருச்சியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேராகச் சென்று பழைய உரிமத்தைக் கொடுத்துவிட்டு புதிய விலாசம் கொண்ட உரிமத்தை வாங்க முடியாது.

விலாசம் மாற்றப்பட்ட புதிய உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கே உங்களுக்கு பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் தேவைப்படும்.

உங்கள் பழைய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மனு ஒன்றை எழுதி, அத்துடன் உங்கள் உரிமத்தின் நகலையும் இணைத்து, சுய விலாசமிட்ட உறையுடன் அனுப்ப வேண்டும். மனுவில் நீங்கள் தற்போது மாற்றலாகிப் போயிருக்கும் ஊரின் முகவரி, அது எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சரகத்தில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். உங்கள் மனுவை பரிசீலித்து பதிவேடுகளில் உங்கள் உரிம நகலை ஒப்பிட்டுப் பார்த்து ‘உண்மையான உரிம நகல்தான்’ என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சான்றிதழ் வழங்குவார். அதை உங்களுக்கு அனுப்பி வைப்பார். அந்தச் சான்றிதழுடன் தற்போது வசிக்கும் இருப்பிடச் சான்றையும், ஒரிஜினல் உரிமத்தையும் இணைத்து புதிய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தால், முகவரி மாற்றப்பட்ட புதிய உரிமம் கொடுப்பார்கள்.

உரிமம் புதுப்பிக்காமல் பல ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் புதிதாகத்தான் எடுக்க வேண்டுமா?

இல்லை. வருடத்துக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் செலுத்தினால் புதுப்பித்துத் தரப்படும்.

உரிமம் புதுப்பிக்காமல் இருக்கும்போது, வாகனம் ஓட்டி விபத்து நேர்ந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

உரிமத்தின் கடைசி தேதி முடிந்து 30 நாட்கள் வரை அது செல்லுபடியாகும். அதற்குப் பின்னர், உரிமம் இல்லாமல் ஓட்டினால் கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதே நடவடிக்கைதான் இதற்கும் பொருந்தும். உரிமம் இல்லையென்றால் வாகனத்துக்கோ, ஓட்டியவருக்கோ அல்லது வாகனத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ஆகவே, உரிமம் இல்லையென்றால் வாகனம் ஓட்டாமலிருப்பது பொதுமக்களுக்கும், ஓட்டுபவருக்கும் நல்லது.

அசல் உரிமம் தொலைந்து போனால், வேறு புதிய உரிமம் எடுக்கலாமா?

கூடாது. ஏனென்றால், தொலைந்துபோன உங்கள் உரிமத்தை வேறொருவர் தவறாக உங்கள் பெயரில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உங்கள் உரிமம் எப்போது, எங்கு தொலைந்துபோனது என்பதைக் குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். இந்த புகாருடன் தொலைந்து போன உங்கள் உரிமத்தின் நகலையும் இணைக்க வேண்டும். அவர்கள் அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்துகொண்டு தேடிப்பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு ‘நகல் உரிமம்’ தர பரிந்துரை செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். போக்குவரத்து அலுவலகத்தில் பதிவேடுகளில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்துகொண்டு நகல் உரிமம் வழங்குவார்கள்.

உரிமத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்?

டிரைவிங் லைசென்ஸ் அதிகபட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அதாவது அந்த 20 வருடங்கள் உங்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கும்போது மருத்துவர் உங்களைப் பரிசோதித்து மனநிலை மற்றும் உடல்நிலை வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது எனச் சான்றளிக்க வேண்டும். அதேபோல் நீங்களும் ‘என் மனநிலையும் உடல்நிலையும் சரியாக இருக்கிறது’ என ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Thanks to innayam

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



மொபைல் நம்பரை கண்டுபிடிக்க

நீங்கள் எந்த ஒரு நிறுவனத்தின் அலைப்பேசி சேவையைப் பயன்படுத்தினாலும், உடனடியாக நீங்கள் உங்களுடைய அலைப்பேசி எண்ணைத் தெரிந்துகொள்ள கீழிருக்கும் குறுக்கு வழிகள் உங்களுக்குப் பயன்டும்.

  • Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
  • Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
  • Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
  • Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *777*0#
  • Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
  • Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
  • Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
  • Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# 
  • நீங்கள் Tata Decomo Mobile சேவையைப் பயன்படுத்தினால் 580# என்ற குறியீட்டை உள்ளிட்டு Ok அழுத்தினால் உங்களுடைய மொபைல் எண் அலைபேசித் திரையில் தோன்றும்.
ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்தி உடனடியாக தங்களுடைய Mobile Number - ஐ உடனடியாக தெரிந்துகொள்ள முடியும்.

நன்றி :- இணையம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



வீடியோ வெப்சைட்கள்




வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில் எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன.


நாங்கள் இங்கே 10 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.


இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது.


நீங்கள் யூடியூப் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் பின்வரும் வீடியோ வெப்சைட்களையும் பாருங்கள்.


1. YouTube
Alexa Rank -3.

================

2.Netflix
Alexa Rank -100

================


3.Hulu

Alexa Rank -171

================

4.DailyMotion
Alexa Rank - 101

===============

5.MetaCafe

6.Myspace Video

7.Yahoo Screen

8.Vimeo

9.Break

10.Tv.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



புளூடூத்











900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.


தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார்.


இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர்.


இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர்.


மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday, 20 April 2013

பைல் கன்வெர்ட்டர்(File Convertor)-02

நாம் சில சமயங்கள் வேலை செய்யும் போது இன்ச் அளவுகளை செண்டிமீட்டர்களில் எவ்வளவு என தெரிந்துகொள்ள விரும்பலாம். அதற்கு எப்படி அதை செய்வது என குழம்பி கொண்டிருக்கலாம். இவ்வளவு ஏன் நாம் சமையல் செய்யும்போது ஒரு கப் சர்க்கரை, இரண்டு மேஜைகரண்டி எண்ணெய் என அளவுகளை பார்த்திருப்போம். இவற்றிற்க்கான லிட்டர் மில்லிலிட்டர் அளவுகள் நமக்கு தெரியுமா! இது போன்று அளவுகளை மாற்ற நாம் விரும்பினால் அனைத்தையும் ஒரே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

http://www.convert-me.com

நிறை மற்றும் எடை(Mass and Weight),
தூரம் மற்றும் நீளம்(Distance and Length),
கொள்ளளவு மற்றும் கனஅளவு(Capacity and Volume),
பரப்பு(Area),
வேகம்(Speed),
முடுக்கம்(Acceleration),
வெப்பநிலை(Temperature),
நேரம்(Time),
அழுத்தம்(Stress and Pressure),
ஆற்றல்(Energy and Work),
திறன்(Power),
விசை(Torque),
பாய்ம வீதம்(Flow rate by volume, Flow rate by mass),
வட்ட அளவு(Circular measure),
கணிப்பொறி(Computer storage),
தகவல் பரிமாற்றம்(Data transfer rate),
எரிபொருள் சிக்கனம்(Fuel Economy),
சமையல்(Cooking),
பின்னம் மற்றும் சதவீதம்(Fractions and Percent)
பண மாற்று வீதம்(Currency Rates)இவைகளை பல அலகுகளில்(unit) மாற்றி கண்டறியலாம்.

நன்றி:- இணையம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்